(Reading time: 14 - 27 minutes)

ன் வாழ்க்கையில் பேசாம இருந்தது அந்த 5 மணி நேரம் மட்டும்தான். அதுவும் தேவ் மாமாவுக்கு நீ போனது தெரியாதுன்னே இருந்துட்டேன், அப்புறம் அவர் தான் பாதி பயத்தை குறைச்சாரு. அம்மா வேற எங்க வாய திறந்துருவேன்னு பயந்துட்டாங்க. கொலை பண்ணிருவேன்னு வேற சொல்றாங்க. நான் கவுன்டர் டயலாக் கொடுக்கிறது எல்லாம் அவங்களுக்கு எப்படி கேட்குதுன்னே தெரியல. அடிக்கடி அதை கேட்டு மண்டையில கொட்டு வேற வச்சுட்டு இருந்தாங்க. இது அதைவிட ரொம்ப கொடுமையான விஷயம், அதான் எங்க அப்பாக்கு வேற ஆன்ட்டியா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்” என்று கிண்டலுடன் ஆரம்பித்து யோசனையுடன் முடித்தாள் ரூபன்யா. அவளை அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள் ரிதன்யா.

“போதும் போதும் ரொம்ப பிழியாத, பாரு உன் ஆளு என் மேல செம கடுப்புல பார்க்குறாரு” என்று அவர்களை கனிவுடன் பார்த்த தேவ்வை வம்புக்கு இழுத்தாள் ரூபன்யா.

அவனைப் பார்த்த ரிதன்யா “தாங்க் யூ தேவ். உங்க இடத்துல வேற யார் இருந்தாலும் இதை வேற மாதிரி யோசிச்சுருப்பாங்க, வேற மாதிரி ஹாண்டில் செய்திருப்பாங்க, நிஜமாவே நீங்க எனக்கு கிடைச்ச வரம்” என்று மனதில் காதலுடன் மற்றும் கண்ணில் சந்தோசக்கண்ணீருடன் கூறினாள் ரிதன்யா.

“ஹேய் ரித்து, உன் வேலை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அதே மாதிரி தான் என் ப்ரோபெஸனும், இதுக்கெல்லாம் போய் கலங்கிட்டு இருக்கலாமா. 5 வருசமா லவ் பண்றோம், கல்யாணம் வரைக்கும் வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்.  உண்மையா சொல்லனும்னா நீ தான் எனக்கு கிடைச்ச வரம்” என்று நேசம் கொண்ட மனதுடன் கூறியவன், “பீல் பண்ணாத கண்ணம்மா, நம்ம என்ன உன் தங்கச்சி மாதிரி வெட்டி ஆபிசரா” என்று ரூபன்யாவையும் சேர்த்து நக்கல் செய்தான்.

தேவ்வை முறைத்த ரூபன்யா “ஒரு வருங்கால ஐ. ஏ. எஸ் ஆபீசர பார்த்து என்னவெல்லாம் சொல்றிங்க. ரிதன் அவர் சொல்றத கேட்டு நீயும் அமைதியா இருக்க, மிஸ்டர். தேவ். ரொம்ப பேசுனீங்க இன்னைக்கு நைட் எங்க அக்காவை என் கூடவே டெல்லிக்கு கூட்டிட்டு போயிருவேன். ஜாக்கிரதை” என்று வழக்கம் போல மிரட்ட ஆரம்பித்துவிட்டாள்.

“தாயே ஆதி பராசக்தி, விட்டுடும்மா நான் பாவம். நீங்க பாட்டுக்கு ஏதும் இப்படி பிளான் பண்ணினா நான் எப்படி குடும்பம் நடத்த, என் மேல கொஞ்சம் கருணை காட்டும்மா” என்று கையெடுத்து கூம்பிட்டான் தேவ். இருவரின் சண்டையையும் சுவாரஸ்யத்துடன் பார்த்தாள் ரிதன்யா.

“அப்படியே ஆகட்டும் மகனே, என்னை கலாய்க்காத பட்சத்தில் உன்னையும் விட்டுவிடுவேன்” என்று ஆசீர்வாதம் செய்தாள் ரூபன்யா.

சிறிது நேரம் பொதுப்படையாக பேசியவர்கள், மறுபடியும் ரிதன்யா – ரூபன்யா இருவரின் உருவ ஒற்றுமையை பற்றி பேச ஆரம்பித்தனர்.

“உங்களை புதுசா பார்க்குறவங்களுக்கு யாரு ரித்து, யாரு ரூபினு கண்டுபிடிக்கவே முடியாது. ஆனா குணத்துல நீங்க மலையளவு வித்தியாசம் உள்ளவங்க” என்று அதிசயத்துடன் கூறினான் தேவ்.

“கண்டிப்பா தேவ், நான் அப்பாகிட்ட ரொம்ப க்ளோஸ், இவ எவ்வளவு தான் அம்மாகிட்ட சண்டை போட்டாலும் அவங்க இல்லாட்டி இவளுக்கு பொழுதே போகாது” என்றாள் ரிதன்யா.

“அது மட்டுமா, நீ ரொம்ப அமைதி தேவைக்கு மேல பேசவே மாட்ட, ரூபிக்கு காசு கொடுத்தாக்கூட அமைதியா இருக்க முடியாது, இதுல உன் தங்கச்சி மனசாட்சிக்கு வேற ஒரு வாய்,” என்றான் தேவ் கிண்டலுடன்  

‘நான் மனசுக்குள்ள பேசினது எப்படி இவருக்கு கேட்டுச்சு’ என்று மனதோடு பேச ஆரம்பித்துவிட்டாள் ரூபன்யா.

“நான் சொன்னதை ப்ரூப் பண்றா பாரு” என்று கூறினான் தேவ் ரிதன்யாவிடம்.

“புதுசா பார்க்குற யாருக்கும் உங்களை கண்டுபிடிக்க முடியாதுதான், ஆனா உன் தங்கச்சி குரலை ஒரு தடவை கேட்டாலே போதும் வாழ்க்கை முழுசும் மறக்கமாட்டாங்க” என்றான் மேலும் கிண்டலுடன்

ரியாவிற்கு சிறு வயது முதலே நல்ல குரல் வளம். ரூபிக்கு அதுபோல் கிடையாது அதைதான் கிண்டலுடன் தேவ் கூறினான்.

“போதும் தேவ், அவளை ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க” என்று வாஞ்சையுடன் கூறினாள் ரிதன்யா.

“ஆமா என்னை ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க, அப்புறம் எங்க அக்கா டெல்லிக்கு போக வேண்டி இருக்கும்” என்று பயம் காட்டினாள் ரூபி.

‘அடக்கடவுளே’ என்று தலையில் கைவைத்தவன் இருவரும் சிரிப்பதைக் கண்டு “ரெண்டு பேரும் சேர்ந்துட்டிங்களா... ஹ்ம்ம்...

“எல்லாமே முடிஞ்சு போச்சு...” என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

 

This is entry #71 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க.. / முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - அம்ரிதா சாகரி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.