(Reading time: 30 - 59 minutes)

"ன்னன்னு தெரியல... உன்னை இந்த ஆபத்துல இருந்து காப்பாத்தனும்னு மனசு துடிக்குது... நீயும் நானும் தமிழ்ங்கிற காரணத்தாலேயா... இல்லை என்னோட அம்மா பேர் கூட தாமரை தான்... அதனாலேயா..?? இல்லை நீ இப்படி அழறதை என்னால பார்க்க முடியலையே அதனாலேயான்னு தெரியல.." என்ற போதே...

"அக்கா ப்ளீஸ்... என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போய்டுங்கக்கா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..." என்றாள் தாமரை..

"இங்கப் பாரு... நானும் உன்னை காப்பாத்த தான் நினைக்கிறேன்... ஆனா அது சுலபமில்ல... தப்பிக்க நினைச்சு யார்க்கிட்டேயாவது மாட்டினா.. அவ்வளவுதான், அவனுங்க பண்ற கொடுமை தாங்காது... சுலபத்துல சாகக் கூட விட மாட்டானுங்க... இருந்தாலும் முயற்சி பண்றேன்...

இன்னைக்கே உன்னை எதுவும் செய்யமாட்டானுங்க... நீ இன்னும் கன்னிப் பொண்ணு... உனக்கு இங்க கிராக்கி அதிகம்... உன்னை வித்தா நிறைய பணம் கிடைக்கும்னு தான்... உன்னை இங்கக் கூட்டிக்கிட்டு வந்தவனுங்க உன்னை ஒன்னும் செய்யாம விட்றுக்கானுங்க...

இப்போ உன்னை போட்டோ எடுத்து ஏலம் பேசுவானுங்க... யார் நிறைய பணம் கொடுக்கறானுங்களோ அவன் தான்..." அதுக்கும் மேலே அவர் சொல்ல முடியாமல் நிறுத்த... தாமரைக்கோ அதை நினைக்கும் போதே உடல் நடுங்கியது...

"இங்கப் பாரு நீ ஒன்னும் பயப்படாத... அதுக்குள்ள உன்னை எப்படியாவது இங்க இருந்து தப்பிக்க வைக்கிறேன்... இந்த இடத்தை விட்டு வெளியேப் போய்ட்டாலே போதும்... அப்புறம் ஈஸியா தப்பிச்சிடலாம்... ஆனா அது முடியுமான்னு தெரியல.. என்னால முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறேன்.." என்று சொல்லியவர் அந்த அறையை விட்டு வெளியே போனார்...

சற்று நேரத்திற்குப் பிறகு யோகி திரும்ப தாமரை இருக்கும் அறைக்கு வந்தார்... "தாமரை இந்தா... இந்த டீ, பிஸ்கட்டை சாப்பிடு..."

"எனக்கு எதுவும் வேணாம்க்கா... எனக்கு இங்க இருந்து போகனும்..."

"இங்கப் பாரு தப்பிக்க உடம்புல தெம்பு வேண்டாமா..?? " என்று அவளை சாப்பிட வைத்தார்...

"இங்கப் பாரு முதல்ல இந்த ட்ரஸ்ஸைப் போடு..." என்று பையிலிருந்து ஒரு சட்டை, பேன்ட்டை எடுத்துக் கொடுத்தார்...

"இது டீக்கடையில வேலைப் பார்க்கிற பையனோட ட்ரஸ்... இதைப் போட்டுக்கோ... கூட முடியை உச்சியில கொண்டைப் போட்டு இந்த தொப்பியையும் போட்டுக்க... டீக்கடையில இருந்து டீ எடுத்துக்கிட்டு வந்த பையன் மாதிரி உன்னை எப்படியாவது வெளியே கூட்டிக்கிட்டுப் போய்ட்றேன்... அப்படி மட்டும் யாருக்கும் தெரியாம வெளியிலப் போய்ட்டா... அப்புறம் ஒன்னும் பயமில்ல... சீக்கிரம் போய் ட்ரஸ்ஸை மாத்திக்கிட்டு வா... அந்த கடன்காரனுங்க எங்கேயோ வெளியப் போயிருக்கானுங்க... அவனுங்க வர்றதுக்குள்ள வெளியே போகனும்..." என்று அவசரப்படுத்தினார்...

தாமரை ஆண் உடையில் வெளியே வந்ததும்... "இந்தா இந்தப் பணத்தை வச்சுக்க..." என்று கொஞ்சம் பணத்தை எடுத்து அந்த சட்டைப் பாக்கெட்டில் வைத்தார் யோகி... அதன்பிறகு தாமரையை வெளியே அழைத்துக் கொண்டுப் போனார்... எதிர்பட்டர்வகளிடமெல்லாம் ஏதோ சமாளித்து... ஒரு வழியாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையத்துக்கு சென்றனர்...

ரயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் தாமரையை நிற்க வைத்த யோகி... " நீ இங்கேயே நில்லு தாமரை... நான் சென்னைக்குப் போற ரயில் எப்போ வரும்னு பார்த்துக்கிட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டுச் சென்றார்..

ஆனால் போன ஐந்து நிமிடத்திலேயே திரும்பி வந்தார்... "தாமரை அந்த படுபாவிங்க எப்படியோ விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு இங்கேயே தேடி வந்துட்டானுங்க... அவனுங்க கண்ணுல படாம இருக்கனும்..." என்று அங்கேயே சிறிது நேரம் பதுங்கியிருந்தனர் இருவரும்...

மெதுவாக இருவரும் எட்டிப் பார்க்க கையில் உருட்டுக் கட்டைகளோடு இருவர் இவர்களை தேடிக் கொண்டிருந்தனர்... இதற்கு மேல் இங்கு நின்றிருந்தால், அவர்களிடம் அகப்பட்டுக் கொள்வோம் என்று அறிந்த யோகி... அந்த நேரம் ஏதோ ரயில் கிளம்ப தயாராயிருக்க... தாமரையை இழுத்துக் கொண்டு வேகமாக சென்றவர்... அந்த ரயிலில் அவளை ஏற்றிவிட்டார்...

"இங்கப்பாரு தாமரை... இந்த ரயிலை விட்டு இறங்காத... நாம ஓடி வந்ததை அவனுங்க பார்த்திருப்பானுங்க... அவனுங்க உன்னைப் பிடிக்காம இருக்க எவ்வளவு முடியுமோ... அவ்வளவு முயற்சி பண்றேன்... நீ எதுக்கும் இறங்காத... ரயில்ல டிக்கெட் கேட்டாங்கன்னா... நிலைமையை எடுத்துச் சொல்லி எந்த ஊருக்குப் போகுதோ டிக்கெட் வாங்கிக்க... யார்க்கிட்டேயாவது உதவிக் கேட்டு எப்படியாவது உங்க வீட்டுக்குப் போ..." என்று அனுப்பி வைத்தார்...

ரயில் நகர ஆரம்பித்தது... இவள் பயத்தோடும், கலக்கத்தோடும் யோகியை எட்டிப் பார்த்தப்படி நின்றிருக்க... "உள்ளப் போ.." என்று அதட்டினார்... அந்த நேரம் அவர்களை தேடிக் கொண்டு வந்தவர்களில் ஒருவன் யோகியை அடிக்க... பயத்தில் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்...

அவர்கள் ரயிலுக்குள்ளும் வருவார்களோ என்று பயந்தாள்... சிறிது நேரம் வரை பதுங்கியே இருந்தாள்... ரயில் கொஞ்சம் வேகம் எடுத்தது... இதற்கும் மேலே அவர்கள் வரமாட்டார்கள் என்று நம்பினாள்... யோகி அடி வாங்கியதை நினைத்து மனம் வருந்தியது... அந்த அக்காவை ரொம்ப கஷ்டப்படுத்துவாங்களா..?? இல்லை ஒரேடியாக கொன்னுடுவாங்களா..?? என்று அவள் நினைத்தப் போதே மனம் பதறியது...

கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்... மெல்ல பயணிகளை பார்த்தாள்... எல்லோரும் வட இந்தியர்கள் போலவே தெரிந்தது... யாரிடம் உதவிக் கேட்பது... இந்த ரயில் எந்த ஊருக்குப் போகிறது என்று தெரியாமல் குழம்பினாள்...

அங்கு தமிழர்கள் போல் ஒரு குடும்பம் தெரிந்தது... அருகில் போய் விசாரித்தப் போது அவர்கள் மலையாளம் என்பதை அறிந்தாள்... ஆனால் இவளின் நல்ல நேரமோ என்னவோ... அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தது...

தாமரை அனைத்து விவரத்தையும் கூறி அவர்களிடம் உதவிக் கேட்டாள்... தம்பதியராய் இருந்தவர்களில் அந்த பெண்மணி எந்த உதவியும் செய்ய வேண்டாமென்று அவரின் கணவருக்கு ஜாடைக் காட்டினார்... ஆனால் அவரின் கணவரோ... பாவம் நமக்கு பிரச்சனை வராதிருக்கும் வரை அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யலாம் என்றுக் கூறினார்... அந்த மனைவியும் அரை மனதாக சம்மதித்தார்...

அவர்களின் இருப்பிடத்திற்கு அவளை அழைத்துச் சென்றார்கள்... இரண்டு நாள் கழித்து சென்னையில் ஒரு வேலை விஷயமாக அவர் செல்லப்போவதாகவும், அப்போது இவளையும் அழைத்து செல்வதாகவும் அந்த மனிதர் கூறினார்.

ஊருக்கெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது... உன்னோட ஊருக்கு பஸ் தான் ஏத்திவிடுவேன் என்று அவர் கூறியதும், தாமரை பயந்தாள்... எனக்கு வேலையிருக்கு அதனால தான்... கவலைப்படாத, பஸ் கண்டக்டர், ட்ரைவரிடம் சொல்லி வைத்தால், உன்னை பத்திரமாக உன் ஊரில் இறக்கிவிடுவார்கள் என்று சொன்னார்... உன் அப்பா, அம்மாவிடம் நடந்ததை விளக்கமாக கூறாதே, பாவம் பயந்து விடுவார்கள் என்று அந்த தம்பதியினர் கூறினார்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.