(Reading time: 14 - 27 minutes)

2017 போட்டி சிறுகதை 141 - ஆரம்ப ஜோதி - கௌரி

This is entry #141 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - கௌரி

சிவஸ்ரீ, புத்துணர்வுடன் இருந்தாள் மனது லேசாய் இருக்கையில் எப்படியான அசவுகரியமான நிலையிலும் சுகமாய் இருக்கும், சிறுவயதில் அசையாமல் மருதாணி வைத்து கொள்வது போல. அவள் எண்ணங்கள் இப்பொழுதும் மருதாணி மணத்தோடு செழிப்பாய் இருந்தது.

மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் அவள் பெங்களூரிலிருந்து அரசின் மிக சுமாரான பேருந்தில் பயணித்து கொண்டிருந்தாள், உடன் அவள் இணையன், துணையாகப் போகும் இனியன் இமயவரம்பன்.

அப்பாவிற்கு பிறகு, பயணங்களில் பயமில்லாமல் சாய்ந்து கொள்ள ஒரு தோள், சரித்து அணைவாய் உறங்க செய்ய ஒர் ஆள். அப்பாவிற்கு இவனை நிச்சயம் பிடிக்கும். எனக்கே இவனை பிடித்திரிக்கிறதே, பெயருக்கேற்ற உயரம், அதிலும் கொஞ்சம் பணிவு, ஆயினும் சிறிது அழுத்தம், அதில்தான் எனக்கு ஏதோ பிடித்தம். சிவஸ்ரீயின் கன்னங்கள் இந்த வர்ணைனயை நினைக்கையிலேயே குழிந்தன…

”என்ன மாமாவ சைட் அடிக்கிறயா” இமயவரம்பன்.

”அடிச்சிட்டாலும்…. நீ செய்ய வேண்டியது நான் பண்றேன்” என்றாள்.

அழுத்தமாய் ஆழமாய் சிரித்து விட்டு “ உங்க ஊர் இன்னும் எவ்ளோ தூரம் என்று அவன் வினவவும் பேருந்து நிற்கவும் சரியாய் இருந்தது. ”

இது lss காசாங்காட்டுக்கு போகாது, சீட் இருந்தா இறங்கிக்க…” . என்றார்.

இருவரும் இறங்கினர்.

“ நடக்க விட்டியே…. . என்னைய” என்றான்.

” பொலம்பாத டாக்சி கிடைக்கும்” என்றாள்.

சொன்னபடியே… டாக்சி கிடைத்தது”

மாப்பிள்ளை அழைப்பு டாக்சில” என்றான்.

பொய்யாய் முறைத்த சிவஸ்ரீயை நினைவலைகள் நீர் கோடுகளாய் இழுத்து சென்றன …. இதெல்லாம் எப்படி முடியுமென எத்தைணயோ காதலர்களை கேட்டு சிரித்திரிக்கிறாள்…. இமயவரம்பைன முதலில் பார்த்தபோதே பிடித்துவிட்டது…. அறிமுக படலத்திலேய “ இமயவரம்பன் வேற ஏதாவது சொல்லணுமா???” என்றான். ஆண்கள் என்றாலே வாய் முடாமல் பேசுபவர்கள் அதும் தன்னை போன்ற அழகியிடம் மிகையாக வழிவார்கள் என எண்ணியது தவறெனப்பட்டது. ஆண்களுடன் ஆத்திரத்தோடு சண்டையிட்டு பழகியவளுக்கு இவன் அமைதி வேறாகப்பட்டது; ஆழ்மனதை தொட்டது! பிறகென்ன நிறைகுடமாய் இருந்தும் ததும்பாத அவன் குணமும், நிகர்நிலைகளை நாடும் இவள் குணமும் நுட்பமான நட்பாகி, சொற்பமான நாட்களில் உலக நடப்பாகி…. காதாலாகி போனது!இதோ உடன் பணிபுரிபவரின் கல்யாணத்தை முன்னிட்டு ஊருக்கு வந்து அப்பாவிடம் அறிமுகப்படுத்தவும், வந்தாகிவிட்டது. அப்பாவிடம் ஏற்கனவே கூறியிருந்ததாள் பயமில்லை!

இன்னும் சிறிது நேரத்தில் நடக்க போவதை நினைத்து கலவரமடைந்தது சிவஸ்ரீயின் மனது. அம்மா……. . அந்த கால போதணைகளா, இல்லை அறியா பேதமைகளா, இல்லை கட்டுபட்டி பழக்கங்களால் பட்ட வேதணைகளா…. . புரிந்ததே இல்லை. அணைத்திற்கும் தடை, எதற்கும் எதிர்நடை. அவள் அகராதியில் பிள்ளைகள் பெற்றவர்கள் கூற்றை ஏற்க மட்டுமே பிறந்தவர்கள், குறிப்பாக பெண்கள் உரிமைகளை கேட்டால் நிச்சயம் குடும்பத்துக்கு ஊறு செய்பவள். அப்பா அதற்கு விதிவிலக்கு, அதும் தனக்கெனறால் அதிகமாகவே…. செல்லம். . அவளே அவர் செல்வம்! அம்மாவோடு வாக்குவாதம் செய்தா அல்ல அப்பா கொடுத்த வலிமையோ அவளை தைரியசாலியாக மாற்றியிருந்தது. புயல் வருகையில் சேதாரங்கள் தவிர்க்க முடியாதது, ஆயினும் மும்மாரி பொய்க்கையில் மழை அவசியம் உழவுக்கு, இந்த வீட்டு புயல் அவசரம் அவள் உறவுக்கு!மாணிக்க மாமாவை அவள் பெரிதும் மதிக்கிறாள், நல்லவர், வெகுளி, உழைப்பாளி, அம்மாவின் பங்காளி. அதற்காக திருமணம் எப்படி சாத்தியம்???அவர் எனக்கெற்ற துணையும் இல்லை, அவர் பொறுமை குணத்துக்கு நான் இணையும் இல்லை.

” என்ன மெளன விரதமா பேசாமயே வர, பயமா இருக்கா……. உனக்கா…. ?” என்றான்.

“ ஏன் சொல்லமாட்ட, அப்பா பத்தி பிரச்சணை இல்ல, அம்மாதான் ஊர கூட்டபோறாங்க…. நீ ஆபிஸ் கொலிக், பிரண்ட் கல்யாணத்துக்கு வரணுதான் அம்மாக்கு தெரியும்…. . அட்வைஸ் பண்ணியே கொண்ணருவாங்க, எல்லாம் உன்னால…. “

“ அதுசரி , என்னால இல்லடி, நம்மால……. இது இயற்கை…. நானும் டிமாண்ட்ல இருக்க மாப்பிள்ளைதான்…. உங்க அப்பாக்கு தெரியும் ல?”

அவன் தோளில் சாய்ந்து கொண்டு தலையசைத்தாள். ஆதரவாய் முறுவலித்தான், இந்த மெளனம் அவன் நீட்டும் காலி காசோலை போல எவ்வளோவோ…. நிரப்பிக் கொள்ளலாம். மதிப்பதிகம்…. இதற்காக ஆயிரம் சண்டைகள் போடலாம் எனத் தோன்றியது.

“ சந்துல திரும்பணுமா “ டிரைவர் வினவியதில் நிமிர்ந்தாள்.

” மூணாவது வீடு “ என்றாள்.

இறங்கி வீடு சென்று பார்க்கையில் பக்கத்து வீட்டு லீலா அத்தை வேகமாய் வந்தாள் ” சிவா அப்பாக்கு அடிபட்டிருச்சுமா …. . ஆஸ்பத்திரி போலாம் வா” என்றாள்.

அடுத்து எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது, அப்பா வரப்பில் நடந்து செல்கையில் கீழே விழுந்ததால் தலையில் காயம்பட்டு நினைவிழந்து மருத்துவமணை ஐசியூவில் இருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.