மீண்டும் கூச்சல் கேட்டு ஓடி சென்று பார்த்தாள், கொள்ளி வைப்பது யாரேன பெரிய வாக்குவாதம் நடைப்பெற்று கொணடிருந்தது, “ அட… என்னங்கையா…. . பேசிகக்கிட்டு…மாணிக்கம் அண்ணமண்டி புள்ளதாச்சி அவெணப்புடியா கொள்ளி வைப்பான்…. பங்காளினாலும் அவரு அண்ணன் இருக்காரால்லொ. . ” என்றார் கிழவர்.
” பாரு தத்தா கொள்ளி வைக்கிறவன் சொத்துக்கு வாரிசாகுறான்ல……. நாளைக்கி அது பிரச்சணை ஆகாதா” இன்னொருவர்.
அம்மா தள்ளாடி சித்தி பிடித்திருக்க வந்தாள், “ என்னத்த வேணா எடுத்துக்கட்டும்…. . ஏஞ்சாமிய பகைய மனசுல வச்சி பழி வாங்கிடாதுங்க…. . இனி சொத்தென, சுகமென்ன …” தொடர்ந்து பேச இயலாமல் விம்மினாள்.
” அடப்பாவிகளா. . இதுக்குத்தான் எங்க மாமாவ கொண்ணீங்களாடா…
எப்டி நீ கொள்ளி ஹைக்கிறேனு பார்க்கிறேன் டா……” என்று கூறி அவர்களை அடிக்க சென்றான், மாணிக்கம், அவனை சிலர் தடுத்தனர். ” சும்மா இருடா . . மாணிக்கம், ஆண் வாரிசு இல்லாத வுடு கொள்ளி ஆள் இல்லேனு பேர் வாங்கி கொடுத்திராத, உன் அண்ணமன்டி பாவம்… நீ அவசரப்பட்டினா அவ சிசுவுக்குதான் ஆபத்து…. ” என்றார் ஒரு முதியவர். தொடர்ந்து நடந்த வாக்குவாதங்களை முன்தினம் சிவஸ்ரீயை பத்திரமென எச்சரித்தவன் கேட்டுக் முறுவலித்துகொண்டிருந்தான்.
இமயவரம்பன், கையில் மருத்துவமணை சான்றிதழ் அதில் சிவஸ்ரீயின் அப்பா, தலையில் இரும்பால் தாக்கப்பட்டார் என இருந்தது. துரிதமாக சிவஸ்ரீக்கு எல்லாம் விளங்கியது, நில கிரயம் சம்பந்தமாக நடந்த தகராறில் அவள் அப்பாவை கொன்றுவிட்டால், கொள்ளி வைத்த வாரிசு என சொத்தும் வரும், நில வியாபாரத்திற்கு இருந்த தடையும் விலகும். ஆகவே இது படுகொலை, சம்பிரதாயங்களை சாக்காக்கி சலுகை பெறும் செய்கை, சாஸ்திரத்தின் பின் ஒழிந்து சுயநலம் பேணிக் கொள்வது. தீர்கமான முடிவெடுத்தவளாய், சிவ ஸ்ரீ வெளியே சென்றாள்,
“ யாரும் சண்ட போடாதீங்க…. எங்காப்புக்கு கொள்ளிவைக்க அவரு மக நானிருக்கேன்……. . நீ கொள்ளி வெச்சா எங்கப்பா ஆத்மா கூட நிம்மதியா இருக்காது……” என்றாள்.
அணைவரும் அதிர்ந்து, சேர்ந்து முனுமுனுத்தனர். அம்மா “ ஆவேசமாய் வந்து “ என்னடி உளர்ற………கல்லு மாறி நீ கலங்கமா நின்னப்பவே நினைச்சேன், என்ன வம்பிழுக்க போறியோனு, சாஸ்திரம்னா என்னனு நினைச்ச…. ” என்ற அவளை அறைந்தாள்.
” ஆம்பிள பேரு வச்சதாலே நீ ஆம்பிளை ஆயிடுவியா. . உங்கப்பன் ஆத்மா சாந்தி அடைய வேணாமா?” என்றாள் பாட்டி.
” அம்மா அவன் அப்பாவ கொன்னுருக்கான் மா. . அவன் அப்பாக்கு எதும் செய்ய நான் விடமாட்டேன். ” என்றாள். ஆகரோஷமாக!
வாக்கு வாதம் முற்ற அங்கு வந்த இமயவரம்பன், மற்றும் அவன் மூலம் தகவலறிந்து வந்த அலுவலக நண்பர்கள் சிவஸ்ரீயை தனியாக அழைத்து உபதேசித்தனர், சிகரமாய் “ தேவையில்லாம ஏன் பிரச்சினை பண்ற, ஊருக்கு அடங்கமா என்ன புரட்சி பண்ணறதா நினைப்பா? இங்க நிலைலமைய பார்த்தா நீ பேசாம எல்லாத்தையும் முடிச்சிட்டு, ஊருக்கு உங்கம்மாவ, கூட்டிக்கிட்டு வந்திடு அதான் …யதார்த்தம் உனக்கும் நல்லது” என்றான் இமயன்.
சிவஸ்ரீக்குள் ஏதோ சுரீரென்றது” தேவையில்லாம” “ அடங்கமா” “ உனக்கு நல்லது” இந்த வார்த்தைகள் அவளை ஏதோ செய்தன…. இந்த ஆதிக்க் குணத்தை தான் எப்படி இத்தணைக்காலம் இனம் காணாமல் போணோம் என அதிர்ந்தாள். ஆயினும் தீர்மானமாய் ” என் அப்பாவ கொண்ணவங்கள என்னால சும்மா விட முடியாது. நான் சொத்துக்காக இல்ல அநியாயம் பண்ணவங்க ஜெயிக்க விடமாட்டேன்……. ” என்றாள்.
” உணர்ச்சி வசப்பட்டு, நடைமுறைக்கு ஒத்துவராத வேல செய்ய போறியா??எல்லாரையும் பகைச்சு உன்னால என்ன பண்ண முடியும்???” என இறைந்தான்.
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சிவஸ்ரீ ” இதே நிலைலமை நாளைக்கி உங்காப்பாக்கு வந்தாலூம் இப்டி பேசுவீங்களா இமயா??என சற்று சத்தமாகவேகேட்டாள். நண்பர்கள் முன்னிலையில் தன்மேல் வீசப்பட்ட இந்த கற்களை இமயவரம்பனால் சகிக்க முடியவில்லை. நைடமுறை சிக்கல் என்பதை கடந்து, தன் கூற்றை அவள் ஏற்கவில்லை என்பதே அவனுக்கு பெரிதாய் பட்டது.
“ இதான் உன் முடிவுனா, நான் சொல்றதையும் கேள் இந்த சம்பிரதாயத்த நம்பாத நீ கல்யாணங்கற சம்பிரதாயத்த எப்டி நம்புவ… எப்டி ஒழுங்கா இருப்ப?” என்றான்.
சிவஸ்ரீக்கு இந்த வார்த்தைகள் அவளுக்குள் ஏதோ உடைவது போல இருந்ததது, நேற்று வரை மலையாய் தெரிந்தவன் மண்புழுவாய் தோன்றினான். ஆணுக்கு வரும் கோபம் உணர்வு சம்மந்தப்பட்டது, அதே பெண்ணுக்கு வந்தால் அவள் நடத்தை சம்மந்தப்பட்டது???? பரஸ்பரம் ஒருவருக்கோருவர் கொண்டிருந்த மதிப்பு, தனித்தனியாய் கையாளப்பட்டு பரசுராமர் ஆயுதமாகி காதலை கவுண்டது. தான் தோள்களில் சாய்வதை தன் பலகீனமாய் நினைத்தவனாய் தன்னவனாக கொண்டாடினோம்…24 மணிநேரத்தில் எனக்கு எத்தணை அதிர்வுகள். . பரவாயில்லை அப்பபா இல்லையென்றாலும் அவர் அளித்த ஆற்றல் அவளுக்ககு அத்தணையையும் ஜீரணிக்க வைத்தது.