(Reading time: 14 - 27 minutes)

வளை கண்டதும் அம்மா பெருங்குரலெடுத்து அழுதாள். சிவஸ்ரீ கலங்கவில்லை, மேலும் இறுகித்தான் போனாள்.

” இங்க ஒண்ணுமே சரியில்ல சிவா, உன் பெரியாப்பாரு பயலுக உங்க அப்பாவோடு ஒரே ராவடி பண்றானுக, நிலத்தை விக்கலனு உங்க அப்பாரு சொன்னதிலெருந்து சண்டை…. பாவம் மாணிக்கங்கந்தே உங்கப்பாவுக்கு ஆதரவு” என்றாள் உமா சித்தி.

” பொட்ட புள்ள வச்சிருக்கிற அச்சம் உங்காப்புக்கு கிடையவே கிடையாது. அவனுகளுடட மல்லுகட்டிட்ட இருக்காரு……நாளைக்கு ஓண்ணுனா யார் வருவா……. ” முனகிய கமலத்து பாட்டியை எரிப்பதாய் முறைத்தாள் சிவஸ்ரீ.

” கீழே விழுகிற மனுசனாடி உங்கப்பா…. . இவனுக என்னமோ…பண்ணிட்டானுக……. நீ மாணிக்க மாமாவ கட்டிகடி…. நீ யாருனு அவனுக மாமாவ கேட்க முடியாது……. அப்பாவுக்கு துணையாயிருக்கும்” என்றாள் அம்மா அழுது சிவந்த கண்களோடு, முதலில் அவள் சொன்னது ஆத்திரம் அளித்தாலும் அம்மாவை பார்க்க பாவமாய் இருந்தது, அவளுக்கு எனை போல ஒரு அப்பா இல்லையே……. இக்ககட்டுகளை இடிக்கும் ஆற்றலோடு அவளை ஆளாக்கிட! இன்னொன்றும் உறுத்தியது எங்கே மாணிக்க மாமா…இதில் அவர் பங்கும் இருக்குமோ…ச்சசே…. நிச்சயம் வாய்ப்பில்லை.

“ எல்லாம் சரியாயிடும் தைரியமாய் இரு “ இமயவரம்பன் சற்று தொலைவில் இருந்து குறுஞ்செய்திகளால் தேற்றிக் கொண்டிருந்தான்.

அப்பா…. . அப்பா சீக்கிரம் வந்து எனை “ ஏ சாமி…. ” என்று கேளுங்கள் அப்பா. !ஐம்பது வயதிலும், நரை கூட இல்லாமல், கலப்பை பிடித்து உரமேறிய என் அப்பா கால் இடறி விழுந்தரா????

தொலைவில் அம்மா குரல் கலவரமாய் கேட்டது சுய நினைவு வந்தவளாய் சிவஸ்ரீ எழுந்தாள், அவள் பெரியப்பா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏதோ வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தனர். அம்மா ஆவேசமாக “ ஏண்டா செஞ்சது பத்தாதா????வரப்புக்கு போன மனுசன என்னடா பண்ணிங்க…. ?” என்றாள். ”

கூட்டத்தில் ஓருவன் “ சும்மா கத்தாத சின்னம்மா…. நாங்க ஒண்ணுமே பண்ணல…ஆயிரம் பக இருந்தாலும் பாக்க வந்தா…” மிரட்டும் தோரணையில் சொன்னான்.

மற்றொருவன் ” பாரு சின்னம்மா…. . ஆம்பிளை இல்லாத வீடு பாத்து பேசு, நாளைக்கு ஒண்ணுனா நாங்கதான் வருனும்…பாத்துக்க…. . ” என்றதும் அம்மா மிகவும் ரெளத்திரமானாள்.

” என் தம்பி இருக்காண்டா எனக்கு…. . ” என்றவளை இடைமறித்த சிவஸ்ரீ

“ இது ஹாஸ்பிப்டல் , பாத்துட்டிங்கல பிரச்சணை பண்ணாம கிளம்புங்க…” என்றாள்

” பத்திரமா இருமா தங்கச்சி …. ” என பூடகமாக சொன்னது மிரட்டும் விதமாக சொல்லி சென்றான்.

இவர்கள் நகரவும் டாக்டர் வெளியே வந்து, “ அவர் கண்முழிச்சுட்டார், கூட வந்தது யாரு, …. . ” என கேட்பதற்குள் சிவஸ்ரீ தலைகாயம் பட்டு நினைவிழந்து இருக்கும் அப்பாவின் அருகில் நின்றாள்…

” எப்டி இருக்குபா…. சரியாயிடும் பா…. விழுந்துட்டிங்களாபா …” என்றாள்

” நான் விழுகலசாமி……என்னைய…………” என்றவருக்ககு வலிப்பு கண்டது.

சிவஸ்ரீயின் அலறில் டாக்டர்கள், செவிலியர்களோடு மாணிக்க மாமாவும் வந்தார். தொடர்ந்து அனைவரும் வெளியேறினர்,

“ உங்கப்பா உசுரு உங்கையில தான் இருக்குடி……. ” என்று தழுதழுத்தாள் கமலத்துப்பாட்டி.

அது எதுவுமே சிவஸ்ரீயின் செவிகளில் விழவில்லை…. தனக்கு தன் அப்பா கூற விழைந்ததே…. உள்ளுக்குள் ஒலித்தது……! கேவலம் பணம், வெட்டி கவுரவத்திற்கு இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா…. . பணம் என்னிடம் இல்லாததா…. கேட்டிருந்தால் கொட்டி கொடுத்திருப்பேனே, என் அப்பா, ……அப்பா விழிக்கட்டும் இவர்களை……. பெண் பிள்ளை இருந்தால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாதா…. ???பெண்களை பெற்றவர்கள் கொள்கையற்றவராக இருக்க வேண்டும்………. . நியாயம் என்ற ஒன்று அவர்களுக்கு ஆடம்பர பொருளா……. ?பெண் வைத்திருப்பதற்கும் அநியாயத்தை தட்டி கேட்பதற்கும் என்ன சம்பந்தம்???????உள்ளத்தில் அரற்றியபடியே ஒர் இரவை கழித்தாள் சிவஸ்ரீ, விடியலில் கையில் காபி கோப்பைகளோடு மாமாவும், இமயனும் நின்றிருந்தார்கள். அயர்விலும் அதிர்ச்சியாய் இமயனைன நோக்கினாள்;மாணிக்க மாமா முதிர்ச்சியாய் சிரித்தார்.

” எனக்கு எல்லாம் தெரியு சிவா……. . அக்கா பயத்ததில பேசுது, உன்ற மனசுக்கு மாறா நானும், அத்தாணும் நடக்க மாட்டோம் கண்ணு…. காபிய குடி, அக்காவுக்காக வேண்டியாச்சு!” சிவஸ்ரீ காபியை விழுங்கி, அம்மவையும் குடிக்க செய்யவும் டாக்டர் அந்த இடியை இறக்கவும் சரியாய் இருந்தது.

” நிறைய பிளட் லாஸ், ஹார்ட் அட்டாக் எங்களால காப்பாத்த முடியல…. . ” !

சிவஸ்ரீ சிலையாய் உறைந்து நின்றாள்…அப்பா…. . அப்பா இல்லை என்பதை விட இல்லாமல் செய்து விட்டார்கள் என்ற எண்ணமே அவளை ஆக்கிரமித்தது!காசுக்காக என் தந்தை கொலையுண்டாரா……. ஆணவத்திற்கு இவர்கள் என்ன ஆளை கொல்வரா?

“ துக்கமுனா……அடிச்சு அழுடி……பித்து பிடிச்சாப்புல நிக்கிறாளே……” லீலா அத்தை சிவஸ்ரீயை உலுக்ககும் போதுதான் தான் அழாததை உணர்ந்தாள். அவளுக்கு அழுகை வரவில்லை தன் அப்பாவை இல்லாமல் செய்தவர்களின் மீது ரெளத்திரம் பெருகியது, மனம் மேலும் இறுகியது. அம்மா மயங்கியிருந்தாள், சிவஸ்ரீ எழுந்து சென்று போஸ்ட்மார்ட்டம் செய்ய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டாள். பிணவறைக்கு வெளியே இமயவரம்பணோடு விழிக்க மறந்த இமைகளோடு வீற்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.