(Reading time: 12 - 23 minutes)

ரிக்கி.. அது வெறும் ஒரு தியரி. ஜஸ்ட் எ ஸ்டுப்பிட் தியரி. நீ சொன்ன விஷயங்களையே எடுத்துக்கயேன். இந்த, நாள், மாசம், வருஷம் எல்லாமே சைக்கிள் கிடையாது. அது ஒரு அஸம்ஷன். மனுஷன் அவனோட வாழ்க்கைய சீரா அமைச்சுக்கறதுக்கும், மழை வர்றத தெரிஞ்சுக்கறதுக்கும், இயற்கை சீற்றத்துல இருந்து தன்ன காப்பாத்திக்கறதுக்கும் அவனை அஸ்யூம் பண்ணிக்கிட்டது. அவ்ளோதான். இதை எப்படி நீ பார்ட் ஆஃப் எ சைக்கிள்ன்னு சொல்ல முடியும்?”

“டூஷே..  சரிதான். மே பி ஐயம் ராங். ஆனா அத தவிர நிறைய விஷயம் இருக்கே. இந்த மூன் சைக்கிள், வாட்டர் சைக்கிள், ஏன், மலேரியா பரப்புற பிளாஸ்மோடியம் கூட, கொசுவோட ஒடம்புல ஒரு சைக்கிள்லயும், மனுஷனோட ஒடம்புல ஒரு சைக்கிள்லயும் இயங்குது. பிரபஞ்சத்தோட தோற்றத்த எடுத்துக்கோ, ‘பிக் பாங்’ தியரிப்படி, ‘பிளாக் ஹோல்’ தியரிப்படி, எல்லாமே ஒரு சைக்கிள்தான். ஒரு பெரிய ராட்சஷ பாறை வெடிச்சு, அது கோள்களாவும் நட்சத்திரமாவும் மாறி, பல கோடி வருஷங்களுக்குப்பிறகு அது ஒன்னு சேந்து, மறுபடியும் வெடிச்சு.. மறுபடியும்..”

“ஸ்டாப் இட் ரிக்கி. வானத்துல மெதக்காத. பி சம் வாட் பிராக்டிகல். அது ஒரு தியரி அவ்ளோதான். எங்க, இப்ப நீ இங்க வந்திருக்க, இதை ஒரு சைக்கிள்ன்னு நிரூபி பாக்கலாம்.”

அவன் ஒரு விஷம புன்னகை புரிந்தவாறே, “இப்ப நான் உன்ன தேடி வந்திருக்கேன், ஒரு நாள் நீயும் என்ன தேடி வரலாம் இல்லையா? ஆனா அப்பா நான் உன்ன மாதிரி ரொம்ப பண்ணமாட்டேன். வந்தவுடனே உன்னை...”

“ஆரம்பிச்சுட்டியா.. உனக்கு வேற வேலையே இல்லையா.. ” என்றாள் சலிப்பாக.

“என்ன டியர் இப்படி பேசற. சீரியஸ்லி டியர். ஐம் இன் லவ் வித் யூ! என்ன எப்பதான் நீ புரிஞ்சுக்கப்போற? எப்பவுமே உன் நினைப்பாதான் இருக்கு. உன்னப்பத்தி கவிதையெல்லாம் கூட எழுதியிருக்கேன். கேக்கறியா?”

“வேண்டாம். உனக்கு அத தவிர வேற எதுவும் வராது”

“யார் சொன்னா? இப்ப பேசிட்டிருந்தமே. சுழற்சி. அத பத்திகூட கவித எழுதியிருக்கேன்”

‘வானவில் கரைத்து வர்ணம் அடித்தேன்.

பட்டாம்பூச்சி முதுகில் ஈரம்..

உயிர் வந்தவுடன் பறந்து கரைந்தது..

அதே வானவில்லாக..!’ என்றான்.

“நைஸ்! நீயே எழுதனியா? அன்பிலீவபில்!! ”

“நிஜமாவே நான்தான் மது. நம்பு.”

“சரி சரி. ஆனா அது என்ன? பட்டாம்பூச்சி?”

“அதுவா அது போன சென்ச்சுரில வாழ்ந்த ஒரு பூச்சியோட பெரு. நௌ எஸ்ட்டிங்க்ட்” என்றான்.

“ஓ! சரி நாம எதையோ பத்தி பேசிட்டு இருந்தமே, சுழற்சி, ரிக்கி நீ சொன்ன ‘பிக் பாங் தியரி’, ‘வாட்டர் சைக்கிள்’ எல்லாம் சுழற்சி தான். ஒத்துக்கறேன். ஆனா, இதை  வெச்சிட்டு உலகத்துல நடக்கிற எல்லா விஷயமுமே ஒரு சுழற்சிதான்னு எப்படி சொல்ல முடியும்? ஒரு பெரிய விஷயத்தை ப்ரூவ் பண்ண, ஒரு சில உதாரணங்கள் மட்டும் போதாது இல்லையா? இந்த சில உதாரணங்கள் வெச்சுட்டு எல்லாமே ஒரு சைக்கிள்தான்னு எப்படி சொல்ல முடியும்?”

“நானும் அப்படித்தான் நெனச்சேன். ஆனா ஹாட்சன் ரொம்ப வித்தியாசமா ஒரு எக்ஸ்பிளனேஷன் குடுக்கறாரு! ‘விதி’ அது இது ன்னு ஏதோ டிபிக்கல் டெர்ம்ஸ் எல்லாம் சொல்றாரு! உலகத்துல நடக்குற எல்லா விஷயங்களும் ஒன்னுக்கு ஒன்னு தொடர்புடையதுங்கறாரு. எ சார்ட் ஆஃப் செயின் ரியாக்க்ஷன்! அந்த சங்கிலித்தொடர் மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து ஒரு செயின் உருவாகும்ங்கறாரு. சில பழைய பேப்பர்ஸ்ல இருந்து கூட ‘கோட்’ பண்ணியிருக்காரு”

அவள், “பேப்பர்ஸ்ஸா?” என்றாள் புருவங்களை உயர்த்தி.

“ஆமா! ஸர்ப்ரைஸிங் இல்ல! நீ அந்த ஆரிட்டிகல படிச்சு பாரேன். யூ வில் லைக் இட். என்னவோ எழுதியிருந்ததே, மண் பிறந்து மண் மாயும் மாந்தர்தம்..

“கட் தி கிராப் ரிக்கி. உலகத்துல நடக்கிற எல்லா விஷயமுமே ஒரு ஸ்திரமான நிலைக்கு அலையறதுதான். உயிரும் சரி, அணுவும் சரி. அந்த நிலைய அடைஞ்சதும், அதுல கொஞ்சம் தங்கிட்டு, அதா விட பெட்டரான நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமா நழுவுது. இப்படித்தான் முதல் முதலா, கடல் ஆழத்துல ஒரு ஜடப்பொருள்  உயிராச்சு. அப்பறம் படிப்படியா ‘எவல்யூஷன்’ல, கொஞ்சம் கொஞ்சமா மாறுச்சு. ‘அக்வாடிக்’ல இருந்து ‘ஆம்ஃபீபியன்’,  ‘ஆம்ஃபீபியன்’ லயிருந்து ‘ரெப்டைல்ஸ்’, அப்பறம் ‘டெர்ரெஸ்ட்டியல்’ அப்பறம் ‘பேர்ட்ஸ்’. எல்லாமே கொஞ்ச கொஞ்சமா மாறினதுதான். எல்லாமே தற்செயலான ஒரு விபத்து. ஒவ்வொரு உயிரும் ஒரு ஸ்திர நிலை. பரிணாம வளர்ச்சிங்கறது, ஒரு பெரிய மரம் வளர்ந்து கிளை விடற மாதிரி. நீ சொல்றத பாத்தா, கிளை நுனில மறுபடியும் வேர் வரணும்” என்று சொல்லி அவன் தொடையை லேசாகத்தட்டி சிரித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.