(Reading time: 12 - 23 minutes)

சிறுகதை - வால் - துளசி

Human Evolution

ந்த இடத்தை வருணிப்பது கடினம். மிகக்கடினம். அது ஒரு ஹால். பெரிய ஹால். அந்த சாம்பல் நிற விளக்கு, முக்கால் வெளிச்சத்தை, அறை முழுவதும் கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு வித கந்தகத்தன்மையும், இரும்பை உருக்கிய மணமும் காற்றில் கலந்திருந்தது. முக்கால் வெளிச்சத்தில் மின் விசிறியின் இறக்கைகள் அடுக்கடுக்காக சுழன்றுகொண்டிருந்தன.

சுவரில் ஐந்து முள் கொண்ட கடிகாரமும், டிஜிட்டல் காலண்டரும் மாட்டப்பட்டிருந்தன. அலமாரியில், தேதி வாரியாக, ‘ஸ்பேஸ்’ மாத இதழின் ‘டிஜிட்டல் இஷ்யூ’ க்கள் சாய்வாக சாத்தப்பட்டிருந்தன. ஹாலின் நடுவில் சோபாக்கள் சதுர வடிவாக போடப்பட்டு, அதற்கு நடுவில் ஒரு கண்ணாடி மேஜை வைக்கப்பட்டிருந்தது. அந்த மேஜையில், விஸ்கி பாட்டில் ஒன்று, பாதிவரை நிறைந்திருந்தது. சோபாவிற்கு அருகில் வளைந்து வளைந்து சென்ற படிகள் மாடியை முத்தமிட்டிருந்தன. மேஜை, டீ வீ, கோப்பைகள், இன்னும் சில புராதன சாமான்கள் அந்த ஹாலில் சிதறியிருந்தன.

சோபாவில் சாய்ந்துகொண்டு, ஒரு காலை மேஜையில், மறு காலை மடக்கியும் அமர்ந்திருந்தாள் மது. இருபத்தி இரண்டு வயதுப்பெண். பெரிய கண்கள், பொருத்தி வைத்தது போல் மூக்கு, கோடு கிழித்தாற்போல உதடுகள். மாநிறம் என்றும் கறுப்பு என்றும் சொல்ல முடியாத ஒரு குழப்பமான நிறம். ஒரு இருபத்தி இரண்டு வயதுப்பெண்ணின் அத்தனையும் அவளிடம் இருந்தது. நீலமும் கறுப்பும் கலந்த டி-ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தாள். தலைமுடிக்கு விடுதலை அளித்திருந்தாள். ஒரு கையில் விஸ்கி கோப்பையும், மறு கையில் ‘ஸ்பேஸ் டிஜிட்டல் இஷ்யூவும்’, அவள் சாய்ந்திருந்த தோரணையும், ஒரு விதமான திமிரையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.

அவள் ஒவ்வொரு ‘சிப்’பாக உறிஞ்சிக்கொண்டே படித்துக்கொண்டிருந்தாள். வாசலில் ஏதோ நிழலாடியது. நிமிர்ந்தாள். அது ரிக்கி தான். மீண்டும் ‘ஸ்பேஸ்’ இல் ஆழ்ந்தாள். அவன் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.

“ஹாய் மது” என்றான்.

அவள் புத்தகத்திலிருந்து கண்ணெடுக்காமல், கையிலிருந்த கோப்பையை தூக்கிப்பிடித்து, பிடித்தது போக மீதமிருந்த விரல்களால் ‘வா’ என்று சைகைத்தாள்.

“அங்கிள் இல்ல?” என்றான்.

அப்போதும் கண் எடுக்காமல் சுட்டு விரலை மேலே நோக்கி காட்டினாள்.

“ஓ! மேல இருக்காரா..” என்றவாறு அருகில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான்.

அவனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். நல்ல உயரம். கோதுமை நிறம். உதடுகளில், எப்போதும் ஒரு விதமான விஷம புன்னைகை. கருப்பு ஜீன்ஸும் இறுக்கமான டி-ஷர்ட்டும் அவனது லேசான தொப்பையை எடுத்துக்காட்டியது. ரிக்கிக்கு மதுமேல் ஒரு ‘க்ரஷ்’ இருந்தது.

அவள் இன்னும் எடுக்காமல், கண்ணாடி மேஜைமேலிருந்த விஸ்கி பாட்டிலின் வாயைப்பிடித்து, அடி பாகத்தை அவனிடம் நீட்டினாள்.

அவன், “நோ, தாங்க்ஸ்” என்றான்.

சில நிமிடங்கள் மௌனத்தில் விரயமானது.

“என்ன படிக்கற?” அவள் புத்தகத்தின் முகப்பை பார்க்க குனிந்தான்.

“ஓ! ஸ்பெஸா..? இது பழைய இஷ்யூ ஆச்சே. இதுல ப்ரோஃபெசர் ஹாட்சனோட ஒரு ஆர்டிகள் வந்துருக்குமே. படிச்சய?”

அவள் சிக்கனமாக தலையை இடமும் வலமும் ஆட்டினாள்.

“அதுல என்ன சொல்லியிருக்கார்னா, உலகத்துல நடக்குற எல்லா சம்பவுமே ஒரு சுழற்சியோடு அங்கம்தான்னு! தட் இஸ், எவ்ரிதிங் இஸ் எ பார்ட் ஆஃப் எ சைக்கிள்” என்றான்.

அவன் சொல்லி முடிப்பதற்கு முன் சிரித்தாள்

“ஏன் சிரிக்கற? டூ யூ திங்க் இட் டசிண்ட் மேக்ஸ் சென்ஸ்?”

அவள் மெதுவாக அந்த இஸ்யூவினுடைய வர்ச்சுவல் காதை மடக்கி தடயம் வைத்தாள். உடலின் அத்தனை அங்கங்களையும் வளைத்து ஒரு நெளி நெளிந்தாள். அவன் சலனமுற்றான்.

“ம்ம்.. என்னவோ கேட்டியே, என்ன கேட்ட?” என்றாள்.

அவன் சுதாரித்துக்கொண்டு, “ம்ம்ம்… அது… அந்த.. அதான்.. ஏன் சிரிச்ச? உன்னால அந்த தியரிய ஒத்துக்க முடியலியா ?”

அவள் லேசாக சிரித்துக்கொண்டே, “எப்படி ஒத்துக்கறது? இட்ஸ் சோ இன்ஸேன்” என்றாள்.

“இன்ஸேனா? என்ன இன்ஸேன்? நம்ம கண்ணு முன்னாடியே எவ்வளவோ விஷயங்கள் இதை ப்ரூவ் பண்ணுதே! சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பௌர்ணமி அம்மாவாசை, அவ்ளோ ஏன்? நாள், மாசம், வருஷம், இது எல்லாமே சைக்கிள் தான். திரும்ப திரும்ப சுத்தி சுத்தி, நடக்கறது. ஒவ்வொரு நாளும், ஏன், ஒவ்வொரு செகண்டும், ஒரு சுழற்சியோட அங்கம் தான். ஒத்துக்கறியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.