(Reading time: 12 - 23 minutes)

யூ நோ மது! இதை சொன்னா நீ கண்டிப்பா நம்பமாட்ட. உண்மையாவே ரெண்டு செஞ்சுரி முன்னாடி கிளை நுனியில வேர் முளைக்கிற மாதிரி ஒரு மரம் இருந்திருக்கு. பேரு ஆலமரம். ‘மோர்ஸியே ‘ஃபேமிலி’. பிச்சரோட அந்த இஸ்யூல ஹாட்ஸன் எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கார்” என்று சொல்லிக்கொண்டே அவள் கையிலிருந்த இஸ்யூவைப்பிடுங்கினான்.

பின்பு, அதன் வர்ச்சுவல் பக்கங்களை புரட்டி, ஒரு பக்கத்தில் நிறுத்தி,

“இங்க பாரு” என்றவாறு அவளிடம் நீட்டி, அந்த மரத்தின் சிறிய வரைபடத்தின் மீது கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்து பின்பு விரித்தான். அந்த மரத்தின் வரைபடம் வளர்ந்தது.பல மெழுகுவத்திகளை அருகருகில் வைத்து எரித்து, மேலே பச்சைப்பொடிகளை தூவியது போல இருந்தது அந்த மரம்.

அவள் அந்த இஸ்யூவைப்பிடுங்கி தூக்கி எறிந்தாள்.

“ஷ்ஷ்ஷ்ஷ்… என்ன ரிக்கி? வாட் டூ யூ மீன்? யாரோ ஒரு பைத்தியக்காரன் பேப்பர்ல கிறுக்கிட்டான்னனா? அது எல்லாம் உண்மையாகிடுமா? மறுபடியும் நாமெல்லாம் மிருகமாகி, கொஞ்சமா கொஞ்சமா சுருங்கி, ஒரு நுண்ணுயிராகி, கடலுக்கடியில் போய் ஜடப்பொருளா மாறிடுவோம்ங்கறயா? இது கொஞ்சம் கூட உனக்கு சில்லியா தெரியல?”

அவன், “மே பீ நடக்கலாம்” என்றான்.

மேலே, படியிலிருந்து யாரோ இறங்கிவரும் சத்தம் கேட்டது. மதுவின் தந்தை தான். தொப்பையும், வழுக்கைத்தலையும், ஐம்பதின் ஆரம்பத்தைக்காட்டியது. நல்ல சிவப்பு. கண்களும், உதடும், மதுவை நினைவுபடுத்தியது.

“என்ன மது? ஏதோ சீரியஸ் டிஸ்கஷன் போல. எனி சீக்ரட்ஸ்?”

“சீக்ரட்டா? இவன்கூடயா.. டாடீ… ரிக்கி இஸ் ஜஸ்ட் எ ஃபிளிர்ட். என்ன பத்தி கவிதை கூட எழுதியிருக்கான். கேக்கறீங்களா?”

“வேண்டாம். இப்பதான் சாப்பிட்டேன். வண்டி கம்ப்ரெஸ்ஸர்ல தண்ணி ஊத்துனயா?”

“ஓ! மறந்துட்டேன். சாரி டாட்.”

“என்னமா. எச்.2  இல்லாம எப்படி வண்டிய எடுக்கறது?”

“ரெண்டு செஞ்சுரி முன்னாடி, பேட்ரோல்ன்னு ஒரு ஃயூயல் யூஸ் பண்ணங்களாம். யூனிட்டுக்கு, அம்பது அறுபது கிலோமீட்டர் கெடச்சுதாம்”

மதுவும் அவள் தந்தை ராஜேஷும், பெருமூச்சுடன் அவனை பார்த்தனர். “சரி, நான் புறப்படறேன்” என்று வாசலை நோக்கி நடந்தார் ராஜேஷ். வாசலின் அருகே சென்றதும், திரும்பி ரிக்கியை மட்டும் அழைத்தார்.

“சொல்லுங்க அங்கிள்”

“ரிக்கி, லெட் மீ பி ஸ்ட்ரெய்ட். டோண்ட் ட்ரை டூ லே மை டாட்டர்!” என்று பல்லைக்கடித்தவாறே சொன்னார்.

“பார்டன் அங்கிள், மறுபடியும் சொல்லுங்க” என்றான் அதிர்ச்சியுடன்.

அவர் அவனை முறைத்துக்கொண்டே வெளியேறினார்.

ரிக்கி குழப்பமாக உள்ளே வர,

மது, “என்ன ஆச்சு, அப்பா என்ன சொன்னார்?” என்றாள்

“அப்படியே சொல்லட்டா?”

“ம்”

“உன்ன படுக்கைல வீழ்த்தவேண்டாம்னார்”

அவள் முகம் கறுத்தது.

“கிரேஸி மது. இந்த காலத்துல, ஏன் உங்க அப்பா இதை ஒரு பெரிய விஷயமா சொல்றாருன்னு தெரியல”

அவள் மௌனமாக இருந்ததாள்.

“ஸ்கிப் இட். இப்ப சொல்லு மது. ப்ளீஸ். நான் உன்ன காதலிக்கறேன். உனக்கு இது நல்லாவே தெரியும். உன்ன நெனச்சா அப்படியே எங்கயோ மேல மெதக்குற மாதிரி இருக்கு. வயித்துக்குள்ள ‘இ - ட்ருஸ்’ பறக்கிற மாதிரி இருக்கு. நீ என்னப்பாத்தா அப்படியே ஐஸ் கட்டிய தலைல ஓடைக்கற மாதிரி இருக்கு”

அவள் மெலிதாக சிரித்துவிட்டு, “யுஃபோரிக், எல்லாமே காதலோடு ஸ்டார்டிங் ஸ்டேஜான லெவெரென்ஸோட சிம்ப்டம்ஸ். ஆரம்பத்துலயே பாத்துட்டா குணப்படுத்திரலாம்”

“வாட் டூ யூ மீன் மது” என்றான் எரிச்சலாக.

“சிம்பிள் கெமிஸ்ட்ரி ரிக்கி. Phenethylamine, Dopamine, Oxytocin. இது சுரக்கிறது ஜாஸ்தியாகும்போது தான் Amphetamine ங்கற வஸ்து உருவாகுது. அதுனாலதான் நீ பறக்குற மாதிரி, பூச்சி பறக்குற மாதிரியெல்லாம் உனக்கு தோணுது”

“மது, எல்லாத்துக்குமே ஒரு வித கெமிக்கல் எக்ஸ்ப்ளனேஷன் குடுக்க முடியும். இது உணர்ச்சி. காதல்ங்குற உணர்ச்சிய உணர்ந்தாதான், அனுபவிக்க முடியும்”

“ரிக்கி.. டோண்ட் பி சினிக். காதல்ங்கறதெல்லாம் கிடையவே கிடையாது. சந்ததிய உருவாக்கறதுக்கும், செக்ஸ நிரந்தரமா வெச்சுக்கறதுக்கு துணை தேடுற நாடகத்துல, காதல் மேடை. அவ்ளோதான். எவால்யூஷன் ல வந்த ஒன்னுதான் காதலும். இந்த என்ஸைம கண்ட்ரோல் பண்ணக்கூட ட்ரக்ஸ் வந்தாச்சு. போய் டாக்டர பாரு”

“பரவால்லயே! நீ கூட ‘க்ளீஷேஸ்’ யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்ட. நானும் ‘க்ளீஷேஸ்’ யூஸ் பண்ணி உண்ணப்பத்தி கவிதை எழுதியிருக்கேன். ‘தூண்டில் மீன்களாய் உன் கண்கள்..’”

“ஸ்டாப் இட் ரிக்கி. கொஞ்சம் வெளிய இருந்து யோசிச்சு பாரேன். அது எவ்ளோ அருவெறுப்பு தரக்கூடிய ஒரு வக்கிரமான செயல்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.