(Reading time: 6 - 12 minutes)

புரிந்தது அம்மா. ஆனால் தவறு சரி என்பதை எல்லா விஷயங்களிலும் எப்படி தெரிந்து கொள்வது. திருடுவது போன்றவை தெரிந்து கொள்ளலாம் ஆனால் சில விஷயங்கள் நடந்து முடிந்த பிறகு தானே அது தவறா சரியா  என்று தெரியும். சரவணனின் காதலை மனதில் வைத்து கொண்டு தான் இந்த கேள்வியாய் வானதி கேட்டது.

சிறிது விட்டு அவள் அம்மா உரைத்தாள், உன் தாயிடம் நீ ஒரு முக்கிய முடிவை பகிர்ந்து கொள்வாய் என்றால் அது சரியே. இல்லை தாயிடம் மறைத்து தன் செய்வாய் என்றால் அது தவரே.

அவ்வளவு தான் என்பது போல் முடித்து விட்டு அங்கிருந்து நகர்த்துவிட்டாள் அவள் தாய்.

அம்மா என்ன கூறுகிறாள். அவளிடம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறாளா இல்லை நான் முடிவு எடுக்க உதவி செய்கிறாளா? ஒரு நிமிடம் குழம்பிவிட்டு அம்மா விடம் சொல்லிவிட வேண்டியது தான் என்று ஒரு முடிவோடு தன தாயின் பின்னே சென்றாள்.

அம்மா உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

இல்லை வானதி நீ என்னிடம் சொல்வதற்காக நான் உன்னிடம் அப்படி சொல்ல வில்லை. நீயே உனக்கு வேண்டியதை தெரிவு செய்து கொள்ளவேண்டும் என்று தான் சொன்னேன்.

ஆனால் அம்மா எனக்கு உங்களிடம் சொல்லையே ஆக வேண்டும்.

சரி. சொல்லு என்ன விஷயம்?

அம்மா சரவணனுக்கு அவன் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆனால் அவன் என்னை விரும்புவதாக சொன்னான். என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அவனுக்கு பதில் வேண்டும் என்றும் சொன்னான்.

உனக்கு என்ன தெரிய வேண்டும் என்னிடம்.......

அம்மா உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிய வேண்டும்.

இதில் எனக்கு பிடிக்க என்ன இருக்கிறது வானதி...... உனக்கு பிடித்தாள் போதுமானது....

ஆனால் அம்மா அவன் அப்பாவும் என் அப்பாவும் பாரில் நண்பர்கள். அவன் எப்படி இந்த விஷயத்தில் என்று எனக்கு தெரியாதே.....

இது தவறான கருத்து வானதி. அவன் அப்பாவை வைத்து நீ எப்படி அவனை தெரிந்து கொள்ள முடியும். உன் அப்பாவை வைத்து உன்னை எடை போட்டால் நீ ஒத்து கொள்வாயா.....

அம்மா....

பின்னே அவனை மட்டும் எப்படி நீ இப்படி என்று  முடிவு செய்கிறாய்......

மன்னித்து விடுங்கள் அம்மா. எனக்கு அவனை பிடித்திருக்கிறது ஆனா இந்த விஷயம் என்ன குழப்பி கொன்டே இருந்தது. இப்போது தெளிவாகிவிட்டது. ரொம்ப தேங்க்ஸ் அம்மா என்று துள்ளி குதித்து சென்ற தன் மகளை ரசித்தாள் அவளது தாய்.

வானதி சென்று அவளது மொபைலில் சரவணனுக்கு கால் செய்தால்....ஏன் ஒரு வாரம் தள்ளி போட வேண்டும் இன்றைக்கே சொல்கிறேன்....என்று சந்தோசமாக.

இனி அவர்கள் வாழ்வில் எல்லாம் வசந்தமே.....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.