(Reading time: 10 - 20 minutes)

“என் அம்மா ஹார்ட் ப்ராப்ளம் இருந்தாதால தானே இறந்து போய்டாங்க. எனக்கும் சின்ன வயசில் ப்ராப்ளம் இருந்துச்சே. இப்போ வரை வருண் அண்ணா செக் செய்றானே. என் குழந்தைக்கும் என்னால ஹார்ட் ப்ராப்ளம் வருமோ” அவள் அவளுக்குள்ளேயே தவித்தாள்.

“பேஷன்ட்ன்னு சொல்லாத அர்ஷுமா”, “எனக்கு குட்டி அர்ஷுவை கொஞ்சனும் போல இருக்கு” அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 “உன் அப்பா நீ வேண்டாம்னு உன்னை வெறுத்துட்டு போய்ட்டாராம் அம்மு” சிறுவயதில் வருண் சொன்னது அவளுக்கு நியாபகம் வந்தது.

“ராம் எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா...நம்ம பொண்ணுக்கும் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருச்சுன்னா...இல்ல ராம் தாங்கிக்க மாட்டார்.....வேண்டாம் நான் என் ராம்க்கு வேண்டாம்... ” தலையைப் பிடித்துக் கொண்டவள் தன்னவனை விட்டு வெகு தூரம் சென்று விட வேண்டும் என்று உறுதியாய் இருந்தாள்.

அங்கே கணேஷ் இன்னும் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

அந்த ஹாலில் இருந்த வட்ட மேஜைகள் அனைத்திலும் பேனாவும் சிறு குறிப்பேடும் வைக்கப்பட்டிருந்தது.

அதில் குறிப்பை எழுதிய வர்ஷினி அங்கிருந்த ஒரு சிப்பந்தியிடம் மேடையில் நின்றிருந்த கணேஷைக் கைகாட்டி டாக்டர் கணேஷ் ராமிடம் இந்த குறிப்பை சேர்த்து விடுமாறு வேண்டினாள்.

பின் அங்கிருந்து விரைந்து வெளியேறியவள் டாக்சி பிடித்து அவளது அறைக்கு வந்து சேர்ந்தாள்.

தனது சொற்பொழிவு முடித்து வர்ஷினியைத் தேடியவன் கையில் அவள் விட்டுச் சென்ற செய்தியை கொடுத்தார் அந்த சிப்பந்தி.

“ராம் முக்கியமான வேலை ஒன்று நினைவு வந்தது. அவசரமாக போக வேண்டியிருந்தது. உங்களிடம் சொல்லிவிட்டுப் போக அவகாசமில்லை. மன்னித்து விடுங்கள். நாளை காலை நான் போன் செய்கிறேன். உங்கள் அர்ஷு” தமிழில் குறிப்பை எழுதியிருந்தாள்.

“அப்போவே லேசா தயங்கினா இங்க வர. பைத்தியம் வேலை இருக்குன்னு சொல்லிருயிருந்தா நான் கம்பல் செய்திருக்க மாட்டேனே” அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது பயணத்திற்கு ஆயத்தம் செய்யலானான்.

வீடு வந்து சேர்ந்த வர்ஷினி வெகு நேரமாகியும் விசும்பிக் கொண்டே இருந்தாள். சிறுவயதில் அவளுக்கு வரும் மயக்கம் போல அப்போதும் லேசாக மயக்கமாக உணர்ந்து இன்னும் அதிகம் பயந்து போனாள்.

மறுநாள் ஒரு பொது தொலைபேசி வழியாக ராமிற்கு போன் செய்தாள்.

“அர்ஷுமா என்னடா வேலை இருக்குன்னு முன்னாடியே சொல்லிருக்கலாம்ல” ராம் கடிந்து கொண்டான்.

“இல்ல ராம் அது அப்புறமா முடிச்சுக்கலாம்ன்னு நினச்சேன். ஆனா” அவள் முடிக்கும் முன்னே அவன் இடையிட்டான்.

“வேலை எல்லாம் முடிஞ்சதா டா”

“எல்லாம் டன். உங்களுக்கு ப்ளைட் எத்தனை மணிக்கு ராம்”

“நைட் தான்.  நான் மூணு மாசத்தில் திரும்ப வந்திடுவேன். அங்க மெயில் மட்டும் தான் செக் செய்ய முடியும். எனக்கு மெயில் செய். உன் போன் நம்பர் மெயில் ஐடி கூட நான் வாங்கி வச்சுக்கலை”

“போன் கார்ட் தான் யூஸ் செய்றேன். மெயில் செய்றேன் நீங்க ரிப்ளை செய்ங்க. ஒகே ராம் நீங்க பத்திரமா போயிட்டு வாங்க”

“ஏர்போர்ட் வரியா அர்ஷுமா” ஆவலுடன் கேட்டான்.

“எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நீங்க எனக்காக நீங்க வெயிட் செய்யாதீங்க. யூ மூவ் ஆன். குட் பை ராம்” அவனிடம் அவள் கடைசியாக பேசியது.

சங்கேதமாக தனக்காக காத்திருக்க வேண்டாம் என்று அவள் தெரிவித்தைதை அவன் அப்போது உணர்ந்தான் இல்லை.

மூன்று மாதம் வரை அவள் அவனுக்கு அந்த செய்தியையும் அனுப்பவில்லை. சரியாக அவன் திரும்பி வந்த அன்று ஒரு பெரிய மெயில் அனுப்பியிருந்தாள்.

“ராம் அதை படிச்சு மொத்தமா என்னை வெறுத்திருப்பீங்க தானே. எனக்கு வேற வழி தெரியலை ராம். உங்களை விட்டு வெகு தூரம் வந்திடனும். உங்களை இனி பார்க்கவே கூடாதுன்னு நினச்சிருந்தேன். இப்படி எங்க ஹாஸ்பிட்டல்ல என் கண் முன்னாடி நீங்க வந்து நிற்பீங்கன்னு நினச்சு கூட பார்க்கல”

கடந்த கால நினைவுகளில் உழன்ற வர்ஷினி தனது நிலையை எண்ணி பரிதவித்தாள்.

இதயம் துடிக்கும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.