(Reading time: 10 - 20 minutes)

15. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

பரம்பரையாக சில இதய நோய்கள் தொடரும் வாய்ப்பு உண்டு என்றே மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன

லவ் யூ’, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்ற வார்த்தைகள் சற்றே சுணக்கம் கொண்டன. பின்னே!! அவர்கள் உதவி இன்றியே இரு இதயங்களின் பரிமாற்றம் விழி மொழியில் நிகழ்ந்து விட்டதே.

அன்றே ஜானவியின் நிச்சயார்த்த விழாவின் போது இருவரும் அவர்கள் உணர்வுகளை சங்கேதமாக தெரிவித்து விட்டபின் அவர்கள் மனதில் சந்தேகம் துளியளவும் இல்லை.

அவள் அவனது அறைக்கு வந்து ஒரு மணி நேரம் தான் ஆகி இருந்தது. ஆனால் ஏதோ யுகம் யுகமாக இணைந்தே இருந்த உணர்வு இருவருக்குள்ளும்.

மௌனம் அங்கே தாலாட்டு பாட அதில் லயித்திருந்தனர்.

அந்நேரம் கணேஷின் மொபைல் சிணுங்கியது. அது அவன் செட் செய்து வைத்திருந்த ரிமைன்டர்.

“ஒஹ் மறந்தே போயிட்டேன். இன்னிக்கு ஈவனிங் ஒரு சின்ன ஈவன்ட் இருக்கு. கூடவே டின்னரும்” கணேஷ் தனது மொபைலை பார்த்தபடி அவளிடம் தெரிவித்தான்.

“என்ன ஈவன்ட் ராம்”

“ஒவ்வொரு மாசமும் நடக்குறது தான். மெடிகல் கம்யுனிட்டி கெட் டுகெதர். எங்களோட அக்டிவிடீஸ் பத்தி டிஸ்கஸ் செய்வோம். இன்னிக்கு என்னோட டாக் இருக்கு. என்னோட ட்ரிப் பத்தியும் எல்லோருக்கும் எடுத்து சொல்ல போறேன்”

“சரி ராம் அப்போ நான் கிளம்பறேன். நீங்க போயிட்டு வாங்க. எப்போ ஊருக்கு புறப்படணும்”

“ஊருக்கு நாளைக்கு நைட் தான். ஆனா நீ எங்க கிளம்பற இப்போ”

“வீட்டுக்குத் தான். நீங்க ரெடி ஆக வேண்டாமா. எத்தனை மணிக்குப் போகணும்”

“வீட்டுக்கா. என் கூட வா”

“நான் எப்படி எங்கே எல்லாம் வருவது”

“ஏன் ரெண்டு கால்ல அப்படியே நடந்து என்னோட கார்ல உட்கார்ந்து தான் வருவது” என்றவன் “நடக்க முடியலைனா அதுக்கு வேற வழியும் இருக்கு” என்று கண்சிமிட்டினான்.

“போங்க ராம்” செல்லமாய் சிணுங்கினாள்.

“உன்னை விட்டு எங்கே போவேன் செல்லம்” அவளது இடையில் கரம் கோர்த்து தன்னோடு இழுத்து அணைத்து கொஞ்சினான் அவன்.

“ஹ்ம்ம்கும் அதான் டாக்டர் நாளைக்கு ஆப்ரிகா போறாரே. என்னை விட்டுட்டு தானே” அவன் அணைப்பில் ஒண்டிக் கொண்டவள் அவனது சட்டை பட்டன்களை திருகிக் கொண்டே அலுத்துக் கொள்வதைப் போல சொன்னாள்.

“அங்கே எல்லாம் எப்படி டா உன்னை கூட்டிட்டு போறது. அங்கே தங்க என்ன வசதி இருக்குமோ”

“ராமர் காட்டுக்குப் போன போது சீதையும் கூட போனாங்க. என் ராம் கூட நான் போகக் கூடாதா” மடக்கினாள் அவனை.

“உனக்கு இங்கே ப்ராஜக்ட் வொர்க் இன்னும் முடியல. உன்னோட ஸ்டடீஸ் கரியர் லட்சியம் எல்லாம் நீ அசீவ் செய்ய வேண்டாமா. அதுவும் இல்லாம நான் சர்ஜரி செய்வதிலும் பேஷண்ட்ஸ் பார்ப்பதிலும் பிஸியா வேற இருப்பேன்” சமாதானம் செய்தான்.

அவள் என்னவோ விளையாட்டுக்காகத் தான் சொன்னாள். ஆனால் அவளது கனவுகள் லட்சயங்களை மதித்து அவன் பேசிய விதம் வர்ஷினிக்கு சொல்லவொண்ணா ஆனந்தத்தைக் கொடுத்தது.

‘இன்னிக்கு நைட்டே வருண் அண்ணாகிட்ட சொல்லிடணும்’ மனதில் நினைத்தவள் தன் குடுப்பம் பற்றி அவனிடம் சொல்ல எத்தனித்தாள்.

அதே நேரம் அவள் குடும்பம் பற்றி, அவளது படிப்பு பற்றி கேட்க கணேஷும் நினைத்த நேரம் அவனது மொபைல் மறுபடியும் சிணுங்கியது.

ஐசியுவில் இருந்து கால் வர பேசிக் கொண்டே இருந்தவன் அவளை ரிப்ரஷ் செய்து தயாராகும் படி கூறி குளியலறையைக் காண்பித்தான்.

வெகு நேரம் போனில் பேசிக் கொண்டிருந்தவன் பேசி முடித்ததும் தாமதம் ஆகிவிட்டது என்று கூறியவாறே அவசர அவசரமாக தானும் தயார் ஆகி அவளைக் கிளப்பினான்.

“ராம் ஆர் யு சீரியஸ். என்னை அங்க எல்லோரும் யாருன்னு கேட்க மாட்டாங்களா”

“ஐ எம் ரியலி சீரியஸ். அங்க எல்லோரும் கேட்டா என்னோட வைப்ன்னு சொல்றேன். மிசஸ் ராம் தானே நீ” இயல்பாய் அவன் உரைக்க அதில் கேலி இல்லை உறுதி தான் இருந்தது.

வர்ஷினிக்கு அது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு வித கலக்கமாக இருந்தது. அவளுக்கு ஏன் என்றே விளங்கவில்லை.

“என்னடா ஒரு மாதிரியா இருக்க”

அவள் முகத்தின் பாவங்களை மிக துல்லியமாகப் படித்து விட்டான் அவன்.

வர்ஷினிக்கு அந்த டின்னர் செல்ல ஏனோ தயக்கமாக இருந்தாலும் அவனுக்காக தன்னுடைய கலக்கத்தை மறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.