(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 03 - பிரதீபா சுந்தர்

Meela mudiyaamal unnul

chillzee எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துகள். பல கோடி இன்பம் பெற்று வாழ்க பல்லாண்டு.!!

formal wishes போட்டாச்சு..!! அடுத்து...

 சீக்கிரம் எழுந்து, குடும்பத்தோட  பட்டாசு வெடிச்சு, பக்க்ஷனம் சாப்பிட்டு கூடவே லேகியம் சாப்பிட்டு , பெரியவங்க கிட்ட ஆசீர்வாதம் and பைசா collect பண்ணி, friends கூட rounding போய்,   சினிமா பார்த்து... அப்புறம்  உங்களுக்கு பிடிச்ச மாதிரி celebrate பண்ணுங்க மக்களே... It should be a sweet day to remember until the bigger  next.. Have a Safe and Happy Diwali"

யர் தர மக்கள், நடிகை நடிகர்கள் என வசதியானவர்கள் வசிக்கும் பகுதி ‘ஜூப்ளி ஹில்ஸ்’. மலைப் பகுதி என்று அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ‘ஜிங்...’ என்ற ஏற்றங்களும், ‘சர்...’என்ற சரிவுகள், அந்த ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றார்போல் நவீனமாக கட்டப்பட்டு இருக்கும் பலதரப்பட்ட மாளிகைகள் என மிகவும் அழகான ‘ஜூப்ளி ஹில்ஸ்’.

எளிமை தோற்றத்துடன் கம்பீரமாக, அம்மை அப்பனின் முழு உருவ சிலையுடன் இருந்த அந்த ‘ஈஷ்வரப்பு’ மாளிகையில் நுழைந்து, வண்டியை நிறுத்திவிட்டு வீட்டினுள் செல்லும் ககனின் கையில் மிக மிக அழகான இரண்டு பூங்கொத்துக்கள் இருந்தன. அவை, பேபி பிங்க் எனக் கொண்டாடப்படும், பிறந்த பிஞ்சுக் குழந்தையின் பாத வண்ணத்தில் 26 ரோஜாக்கள் அடங்கிய ஒன்றும்... அதைப்போலவே, வெட்கம் கொண்ட காதலியின் கண்ணம் கொண்ட வண்ணமாம் இளஞ்சிவப்பு நிற 26 ரோஜாக்கள் அடங்கிய மற்றொன்றும், அதில் அங்கங்கே அழகுக்கு என்று சேர்க்கப்பட்ட முத்துச் சரங்களும்... சின்ன சின்ன வெள்ளை கற்கள் கொண்டு செய்யப்பட்ட பட்டர்பிளைகளும் என்று பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத வகையில் இருந்தன அந்தப் பூங்கொத்துகள்.

‘ஊட்டி ரோஜாவுக்கு வாசனை இல்லைன்னு யாரு சொன்னது.. அவன ஈ.என்.டி கிட்ட காட்ட சொல்லணும்.! மல்லிகை மாதிரி கும்முன்னு இல்லைனாலும் அதுக்குனு தனியா ஒரு விதமான மனச மயக்கற வாசனை இருக்கு...’என்று அவனின் காதல் மனைவி அடிக்கடி கூறுவதற்கு ஏற்ப.. ஒரு விதமான மெல்லிய நறுமணம் வந்தது அப்பூங்கொத்துகளில் இருந்து. அது ககனின் சுவாசத்துடன் கலந்தபொழுது அவனுக்கு ஏனோ அது அவளின் வாசமாகவே பட்டது. சட்டென்று ஒரு புத்துணர்வுடன் காதல் உணர்வுகளும் தோன்ற, “சரியான இம்சை அரசி... என் தளுக்குபுளுக்கு தாரகா..!! உம்ம்...மா டீ” என்று அவனுள் இருக்கும் அவளை கொஞ்சிக்கொண்டே வரவேற்பு அறையில் உள்ள கனகாம்பர நிற சோபாவில் அமர்ந்தான்.

“அம்ம்மா....... நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...” என்று அவன் கூவிய கூவலில், படிக்கும் பாவனையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்த ககனின் இளையவன் மேகன், பதறி அடித்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

சட்டென்று விழித்ததில் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க முழித்த மேகனைக் காண பாவமாக இருந்தாலும், ‘என்னை எவ்வளோ டைம் இப்படி அலற விட்டு இருப்பீங்க டா நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து...!!’ என கருவிக்கொண்டே, பொங்கிய சந்தோஷத்தை மென் நகையாய் சிதறவிட்டான். அவன் சுதாரிப்பதற்குள்,

“ஹே.. மேகி... நீ இங்கயா இருக்க.. ஏன்டா இப்படி முழிக்கற...?? படிக்கறியா..? தூங்கறியா..??” என்று ஒன்றுமே அறியாதவன் போல கேட்டுக்கொண்டே தம்பியின் அருகில் அமர்ந்து அவன் கையில் இருந்த ‘Harry Potter and The Chamber of Secrets’ புத்தகத்தை பிடுங்கி மூடி வைத்தான்.

“டேய் அண்ணா... புக்க குடுடா.. நாளைக்கு எக்ஸாம். இன்னிக்கே படிச்சு முடிக்கணும்..”என்றான் அந்த அப்பாவி, மேகன் கிஷோர்.

ககனின் கூவலை கேட்டு ஹாலுக்கு வந்த அவர்களின் தாய், இருவருக்கும் ‘டீ’ தந்துக்கொண்டே...

“என்ன மேகி பையா சொல்ற... நாளைக்கா எக்ஸாம்? நாளைக்கு ஸ்ரீசைலம் கோவிலுக்கு போகணும் பா... வேற ஒரு நாள் வெச்சிக்க சொல்லேன் டாலிகிட்ட...”என்று கவலை+கிண்டல் குரலில் கூற,

“என்னது?? நாளைக்கு எக்ஸாமா?????? நாளைக்கே...வா??? அப்போ எப்படி டா தம்பி நீ தூங்கலாம்?! சரி இல்லையே.... ஏதாவது பண்ணியே ஆகணுமே.. என்ன பண்ணலாம்?!” என்றான் ககன்.

தாயின் கிண்டலுக்கு பதிலாக மேகன், “நீங்க கவலைப் படவே வேண்டாம் மா... எக்ஸாம் நாளைக்கு கோவிலுக்கு போகும் போது தான்.. உங்க சின்ன மருமக பிளனிங்லாம் பக்காவா தான் பண்ணி இருக்கா. உங்கள விட ஸ்மார்ர்ர்ட்ட்ட்டா..!!!!!!!”

“பரவால்ல டா மேகி பையா.... என் சின்ன மருமகள் தானே ஸ்மார்ர்ர்ட்ட்ட்.. சின்ன மகன் இல்லையே.. அதுனால இன்னும் இரண்டு நாள் எக்ஸ்ட்ரா வாங்கி தரேன்...”

அவரை இடைமறித்த ககன், “நான் வேனா சிபாரிசு பண்றேன் டா. நான் சொன்னா டாலி கண்டிப்பா கேட்பாள். உனக்காக இது கூட செய்ய மாட்டேனா?!...” என கூற,

“அண்ணா... வேண்டாம்.. என்ன விட்டுடு... ப்ளீஸ்... இன்னும் என்பது பக்கம் படிக்கணும்... அவ வருவதுக்குள்ள முடிக்கலைனா நான் காலி டா அண்ணா... அப்புறம் அடுத்த புக்குக்கு டெட் லைன குறைத்து கொடுப்பா டா......”என்று தொடர, டீப்பாயில் இருந்த மேகனின் போன் ‘நெஞ்சில் ஜில்ஜில் ஜில்ஜில்...’என்று இசைத்தது.

“போ டா மேகி பையா... டாலி தான் கூப்பட்றா போல.. பேசிட்டு என்கிட்ட குடு... நான் கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும்.”என்று அம்மாவும் கூற...

“மம்மீ......... “என்று சிணுங்கிக்கொண்டே போன் பேச தனது அறைக்குள் சென்றான்.

சிரித்துக்கொண்டே திரும்பியவர் அப்போதுதான் அங்கு டேபிளின் மேல் இருந்த பூங்கொத்துகளை பார்த்தார். உடனே, “ஹ்ம்ம்..ஹ்ம்ம்...”என்று கேலியாக தொண்டையை செருமிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.