(Reading time: 14 - 28 minutes)

“ஹே டாலி....” என்று துள்ளிய மேகனின் குரலுடன் துள்ளியத் தனது மனதை பொய் கோபம் கொண்டு அடக்கிய டாலி....

“டேய்.... நீ என்னை டாலின்னு கூப்பிட கூடாதுன்னு எவ்வளோ முறை சொல்லி இருக்கேன்.. இடியட்..!!” என்று கொஞ்சலாய் மிஞ்சினாள், டாலி.

“ஐ டூ இடியட் டீ... இவ்ளோ வருஷமா அதே பழகி போச்சுல டா... கொஞ்சம் டைம் கொடு டீ என் ரம்பா...”

“ஐயையோ....... டேய் வேணாம் டா அத்தான்... நீ என்னை ரம்பான்னு கூப்பிட்டா நான் உன்ன எப்போதுமே அத்தான்னு தான் கூப்பிடுவேன்... ஓகேவா??” – இப்பொழுது ஒரு செல்ல மிரட்டல்.!

“நோ நோ.... ப்ரஹ்மி... ப்ளீஸ்... அப்பா முன்னாடி மட்டும் அத்தான் போடு டீ செல்லம்.. அதர்வைஸ் ஒன்லி கி........” என்று இவன் உருகி முடிக்கும் முன்னர் அலறினாள் அவனின் மனைவி ப்ரஹ்மராம்பிகா.

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சரிபாதி ப்ரஹ்மராம்பிகா தேவியின் பெயரைக் கொண்டுள்ள மேகனின் மனைவி. ககன் மேகனின் அத்தைப் பெண். அவளின் பெயர் உச்சரிப்பதற்கு சிறிது கஷ்டமாக இருந்ததால், அவர்களின் சிறு வயது முதலே ‘டாலி’ என்று அழைக்கப்படுபவள்.

“Stop it I say, Megan.!! உன்கூட பேசினா நான் எதுக்கு போன் பண்ணினேன்னே மறந்துடுவேன்... தாரா அண்ணி கால் பண்ணினாங்க...!!”

“ஹே வாவ்.. என்ன டீ சொல்ற... அண்ணி பேசினாங்களா??!! ஹப்பா... என்ன சொன்னங்க..? எப்போ வராங்களாம்..?? ஆனா ஏன் எனக்கோ அம்மாக்கோ கால் பண்ணாம உனக்கு பண்ணினாங்க..??? சீக்கரம் சொல்லு டா...” சட்டென்று தோன்றிய பரபரப்புடன் கேள்வியாய் அடுக்கிய மேகனுக்கு பதிலாக, சின்ன சோகத்துடன் கொஞ்சம் குறும்பும் கலந்த குரலில்,

“ஹ்ம்ம்... அவங்க ஒரு பிளான் சொன்னங்க. அதை அத்தைக்கிட்ட கூட சொல்லணும்... நான் வர கொஞ்சம் லேட் ஆகும் போல... அதனால இப்போவே போய் பெரிய அத்தானுக்கு தெரியாம அத்தையை நம்ப ரூமுக்கு கூட்டிட்டு வந்து எனக்கு உடனே கால் பண்ணு. நான் ஒரு ஆபரேஷனுக்கு போகணும் இன்னும் பத்து நிமிஷத்துல”என்றாள் அந்த மகளிர் நல மருத்துவர். திறைமை வாய்ந்த Laparoscopic சர்ஜன்.

“ஹ்ம்ம்.. சரி டா...” என்று எட்டிப்பார்த்துவிட்டு.. “அண்ணா சாப்பட்றான் போல... அம்மா வர டைம் ஆகும் டா...”என மேகன் கூறிக்கொண்டு இருக்கும் போதே..

“Excuse me Doctor Eshwarapu. Theatre ready and will bring patient in few minutes... Can you be there in 5 minutes?!” என்று இடையிட்ட குரலுக்கு கவனத்தை தந்த ப்ரஹ்மி “ஒரு நிமிஷம் லைன்ல இரு மேகன்”என்று மெதுவாக கூறிவிட்டு, அந்தப் பக்கம் நிமிர்வுடன்

 “Yes Doctor Praveen. I will be there in 3 minutes” என்று மொழிந்தாள்

அவளின் குரலில் இருந்த ஆளுகையில் கட்டுண்ட மேகனும், “உனக்கு நேரம் இல்லனா பரவால்ல டா செல்லம்.. நீ வீட்டுக்கு வந்த அப்புறம் பேசிக்கலாம். அம்மா கிட்ட வெயிட் பண்ண சொல்றேன்” என்றான்.

“இல்ல மா.. அடுத்தவங்க ஒப்படைச்ச விஷயத்த டீல்ல(deal-ல) விட கூடாது. நான் உன்கிட்ட சொல்லிடறேன்.. நீ அத்தைக்கிட்ட சொல்லு. மிச்சத்த நான் வீட்டுக்கு வந்த அப்பறம் நாம டிசைட் பண்ணிக்கலாம்......”என்றுவிட்டு தாரா கூறிய சில பல விஷயங்களை உரைத்து விட்டு அவளின் பணியை கவனிக்க சென்றாள்.

சிறிது நேரத்தில் அன்னையிடம் அவள் கூறிய விஷயங்களை பகிர்ந்த மேகன், “பாரு மா... அண்ணி என்கிட்ட கூட பேசாம டாலிகிட்ட மட்டும் சொல்லி இருக்காங்க... நான் என்ன ம்மா தப்பு பண்ணினேன்...”என்று வருத்தத்துடன் கூற,

“மேகி பையா.... அப்படிலாம் காரணம் இல்லாம ஒதுக்கற ஆள் இல்ல டா உன் அண்ணி.. இந்த மாதிரி விஷயத்துக்கு டாலி நல்லா ஐடியா குடுப்பான்னு அவகிட்ட சொல்லி இருப்பாளா இருக்கும் டா பையா... நீ அனாவசியமா வருந்தாத. இப்போ அவங்க சொன்ன விஷயத்துக்கு நம்பளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவோம். சரியா..?!”என்று முடித்து விட்டார்.

“அதுவும் சரிதான் ம்மா... ஹ்ம்ம்.. அப்பறம், டாலிக்கு ஏதோ ஆபரேஷன் இருக்காம். லேட் ஆகுமாம் வர. பாவம் டயர்டா இருப்பா... அதோட கார் ஓட்ட வேண்டாம் ம்மா... நான் ஹாஸ்பிடல் போய் டாலிய கூட்டிட்டு வரேன். அப்பா எப்போ வருவாங்களாம்..?”

“அப்பா ஆன் தி வே... ஹ்ம்ம்.. அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷம் இரு... பிளாஸ்க்குல போர்ன்விட்டா கலந்து தரேன் உங்க ரெண்டு பேருக்கும்..”என்று சமையல் அறைக்குள் நுழைந்தவரின் பின்னே பூனை நடை நடந்த மேகன்.....

“அம்மா... போர்ன்விட்டா அப்பறமா குடிக்கறேன். இப்போ கொஞ்சம் டீ குடிச்சிக்கறேன் ம்மா... ஹாஸ்பிடல்ல வெயிட் பண்ற நேரத்துல..........”என்று இழுக்க...

“நாளைக்கு எக்ஸாம்க்கு படிக்க போற... சரிதானா..?!”என்று நாடியை பிடித்து தான் கெட்டிக்காரர் என்று நிரூபித்தார், அம்மா.

“சரி தான் ம்மா...”என்று வழிந்துவிட்டு, டீ கலக்கிக் குடித்தவாறே மேகன்.,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.