“அட்லீஸ்ட் நீயாவது அந்த வாலுக்கு சொல்ல கூடாத ம்மா.. நீயும் சப்போர்ட் பன்றியே...! அவளுக்கு பிடிச்ச சீரீஸ் நானும் தெரிஞ்சு வெச்சிக்கனும்ன்னு இப்படி எக்ஸாம் வெச்சு கொல்றாளே....” என்று புலம்பினான்.
“அவ உன்கிட்ட இவ்வளோ உரிமையா இருக்காளேன்னு நீ சந்தோஷம் தான் படனும் மேகி பையா... நான் அப்படி தான் நினைக்கறேன். ஆனா..... இப்போ நீ என்கிட்டே சொன்னத நான் டாலி கிட்ட சொன்னா என்ன நடக்கும்??!!” என்று யோசிக்க,
பதறிய மேகன், “ஆளை விடுங்கம்மா... நான் போயிட்டு வரேன்..”என்று ஏறக்குறைய பிளாஸ்க்கை பிடுங்கிக்கொண்டு ஓடினான்.
“மேகி பையா.. மறக்காம புக் எடுத்துக்கோ..!”என்று கூறிவிட்டு வாய்விட்டு சிரித்தார்.
பிரிட்ஜில் இருந்து இரண்டு ஆப்பிள் எடுத்துக்கொண்டு கிளம்பிய மேகன், திரும்பிப் பார்த்து தாயை செல்லமாக முறைத்துவிட்டு சென்றான்.
தனது கணவரைப் போலவே மகன்களும் அவர்களது மனைவியை அக்கறையாய் கவனித்துக் கொள்வதை நினைத்து திருப்தியான புன்னகை மலர்ந்தது அந்த தாயிடம் இருந்து.
‘இந்த சாந்த சாமியார் மேகனுக்கு எப்படி தான் ரௌடி டாலி மேல காதல் வந்துதோ...! ஆனா இவ்வளோ சீக்கரம் டாலிப் பொண்ணு இவன நிறைய மாத்திடாளே.. கெட்டிக்காரி தான். மனச திறந்து அவன் பீலிங்க்ஸ வெளில சொல்ல அரம்பிச்சிடானே...’என்று அவன் தாராவை பற்றி வருந்தியதை நினைவு கூர்ந்தவர்,
‘இவங்க வாழற வாழ்க்கை காவியம் தான். அதுவும் மேகி அப்படியே அவங்க அப்பா தான். என்னால முடியாதத டாலி செஞ்சிட்டா.! தாராவும் தங்காமான பொண்ணு தான்... ககனும் அவளும் வாழ்ந்த வாழக்கையை அப்படியே ஓவியமா வரையலாம்... ஆனா இந்த மக்கு ககி இப்படி எல்லாத்தையும் சொதப்பி வெச்சிட்டானே... இல்லேன்னா இந்த நேரம் தாராவும் டாலியும் சேர்ந்து வீட்டையே ரெண்டா ஆக்கி இருப்பாங்க. ஹ்ம்ம்... தாராக் கண்ணா.. சீக்கரமா நீ நம்ப வீட்டுக்கு வந்துடு டா கண்ணா.. என் கண்ணன் பாவம்.. வெளில சொல்லலைனாலும் உன்ன பிரிஞ்சு ரொம்ப தவிக்கறான் டா!!’என்று பெரிய மகன் கோட்டைவிட்ட தினத்தை நினைத்துக் கொண்டார், ஏக்கத்துடன் வருத்தமாக.
அனைவரின் வருத்தம் கலந்த ஏக்கப்பெருமூச்சின் காரணமான ககன்-தாராவின் இந்தப் பிரிவு எதனால் நேர்ந்தது? அப்படி என்ன தவறு செய்தான் ககன்?? தாரா தனது குடும்பத்தினருடன் ககனுக்கு எதிராக தீட்டும் திட்டம் தான் என்ன??? நாளை தாராவும் ககனும் சந்திப்பார்களா???? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பார்ப்போம்.
{kunena_discuss:1151}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.