(Reading time: 14 - 28 minutes)

“அம்மா....!!” செல்ல கண்டிப்புடன் அழைத்த ககனிடம்,

“என்னம்மா..!?” என்று அவரும் செல்லம் கொஞ்சினார்.

“நாளைக்கு என்ன நாள்ளுன்னு ஞாபகம் இருக்கா,ம்மா?!”

“மறக்குமா ககி கண்ணா... என் பெரிய செல்லத்தோட பிறந்த நாள் ஆச்சே...!!”

“என்னோடது மட்டும் தானா??” சிறிது ரோஷத்துடன் ஒலித்தது ககனின் குரல்.

“ஆமாம் பா... நம்ப வீட்ல இருக்கறவங்கள்ள நாளைக்கு உனக்கு மட்டும் தானே பிறந்த நாள்..!!”, சின்ன சிரிப்பு இருந்ததோ அம்மாவின் குரலில்.!

“அம்மா... ப்ளீஸ்... ஒழுங்கா சொல்லுங்க ம்மா...”

“சரி.. சரி... நாளைக்கு என் பெரிய மகனுக்கும் மருமகளுக்கும் பிறந்த நாள். இப்போ ஓகே வா?”

“ஹ்ம்ம்.. ஒகே.. நாளைக்கு நான் மட்டும் கோவிலுக்கு போனா நல்லாவா இருக்கும்?!”

“இப்போ நீ மட்டும் தானே இங்க இருக்க டா ககி கண்ணா...”

“அதெல்லாம் சரி மா.. குலதெய்வ கோவிலுக்கு தம்பதியா தானே போகணும்னு சொல்லுவீங்க...?”

“ஆமாம்... ஆனா உன் பொண்டாட்டி தான் இப்போ இங்க இல்லையே....”

“அவ... இப்போ.... எங்க இருக்கான்னு... உங்களுக்கு தெரியும் தானே... ம்மா...”என்று தயங்கிக் தயங்கி விழுந்த ககனின் குரலில் பல மடங்கு ஆதங்கம் நிரம்பி வழிந்தது.!

அதுப் புரிந்தாலும் மனதை அடக்கிய படி “இப்போ என்ன சொல்ல வர நீ ககன்?!” என்று சிறிது காரத்துடன் ஒலித்தது அம்மாவின் குரல்.

சின்ன தயக்கத்துடன் “இல்லம்மா... அது வந்து....” என்று ககன் மறுபடி இழுக்க...

“இதோ பாரு... உனக்கு கொழுப்பு ரொம்ப ஏறிப் போச்சு.. என்கிட்டே போட்டு வாங்க ட்ரை பண்ணாத. நான் இப்போ என் மருமகளுக்கு தான் ஆதரவு. ஏற்கனவே எனக்கும் அப்பாக்கும் உன் மேல வருத்தம். நீ பண்ணின தப்பை, நீயே தான் சரி பண்ணனும். குறுக்கு வழில என்னிக்குமே போகாதே ககன். சரி.. அப்பா வர நேரமாகுமாம். மேகியும் இப்போதைக்கு வர மாட்டான். நீ கையோட சாப்டுட்டு ரூம்முக்கு போ..!  நான் போய் டிபன் எடுத்து வைக்கறேன்...” என்று கண்டிப்பாக முடித்துவிட்டு சென்று விட்டார்.

அதற்க்கு மேல் கேட்க முடியாமல் முயற்சியை விட்டுவிட்டான். இரண்டு முறை அம்மா ‘ககன்’ என்று அழைத்ததே ககனின் தயக்கத்திருக்கு காரணம். கோபமாக கண்டிக்கும் தருணத்தில் மட்டும் தான் அம்மா அப்பாவிடம்  இருந்து ‘ககன்’ என்றோ.. ‘மேகன்’ என்றோ அழைப்பு வரும். இல்லை என்றால் ‘ககி கண்ணா.. மேகி பையா’ தான். எவ்வளவு கொஞ்சலோ அவ்வளவு கண்டிப்பும் உண்டு, தாய் தந்தை இருவருமே.! போதை தரும் அளவு உள்ள பணத்தினால் வரும் சூழ்நிலைகளில் இருந்தும் சுற்றங்களில் இருந்தும்  பிள்ளைகளுக்கு தலைகனமும் தகாத சகவாசமும் வராமல், அதே சமயம் எளிமையும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களாக வளர்ப்பது என்பது பாராட்டுடன் போற்றக்கூடிய விஷயமும் அன்றோ..! அதோடு சமையல் செய்வதும் அதை குடும்பத்தாருக்கு பார்த்து பார்த்து பரிமாறுவதும் அவரே தான் செய்வார். மருமகள்கள் வந்த பிறகு, அவர்களும் உடன் உதவுவர். கண்டிப்பும் அக்கறையும் கேலியும் கிண்டலும் கலந்த அன்புத் தாய் அவர்.

தாய் தந்தையை பார்த்து, அவர்களைப் போலவே ஒற்றுமையாக நேசமாக ஒருவருக்கொருவர் அனுசரித்து எளிமையுடன் வாழும் வாழ்வே வேண்டும் என்று தான் பிள்ளைகளுக்கும் அவா..! தீர்மானம்..! ஆனாலும் ககன் ஏனோ சருக்கிவிட்டான்.

“ஹ்ம்ம்... ஒரு நாள் பண்ணின தப்பு, சுத்தி சுத்தி அடிக்குது.!! நான் பண்ணின தப்பை, நானே சரி பண்ணினாதான் எல்லார்க்கும் நிம்மதி. அதோடு, அப்போ தான் தாரா திரும்பி என்கிட்டயே வருவா..!! சீக்கிரமே சரி பண்ணிடுவேன்..!!” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டே அம்மா தந்த உணவை உண்டுவிட்டு மாடியில் உள்ள அவனது அறைக்கு சென்றான்.

அறைக்குள் நுழைந்த உடன் அவன் செய்த முதல் செயல், கட்டில்மீது இருந்த, அவனின் பேபிக்கு மிகவும் பிடித்த, அந்த மீடியம் சைஸ் பாண்டா பொம்மையை எடுத்து ஆழமாக மூச்சுஇழுத்து அதன் வாசனையை நுகர்ந்தான். அதில் அவன் மனைவியின் வாசம். வெள்ளை உடலில் கருப்பு நிறக் கை கால்களுடன்... அதன் பிரவுன் கண்களை சுற்றி இருந்த கருப்பும்.. ஏன் காதுகளும் கருப்பு தான்... அதன் மென்மையான.. புஷ்டியான.. வெள்ளை தொப்பையில் முகத்தை உரசியவனின் மனதில் சொல்ல முடியாத ஒரு நிம்மதி உருவாகியது.!. அவள் கொடுக்கும் ஒரு சிறிய அணைப்பிற்கு ஈடாகாது என்றாலும், அவள் அணைத்த பொம்மையை அணைக்கிறோம் என்ற ஒரு திருப்தி.!

“ஹப்பா.... பேபி மா.... நம்ப ‘ஸ்பெஷல் டே’க்கு நீ என்கூட இல்லாம எப்படி பேபி அது ஸ்பெஷல் டே ஆகும்.. தாரா... Come to me da baby...” என்று மென்மையாக உரைத்துக்கொண்டே கட்டிலில் பாண்டாவுடன் சரிந்து, அவள் அந்த பொம்மை வாங்கப் படுத்திய பொழுதை நினைத்துக்கொண்டே உறங்க முயன்றான், அவள் அவன் இருக்கும் இடம் வரப்போவது அறியாமல்.! அறிய வழி இல்லாமல்.!! 

நெஞ்சில் ஜில் ஜில்’ எஎன்று இசைத்த கைபேசியை பார்த்த மேகனின் மனதிலும் ஜில் ஜில் சாரலே....!! அழைத்தது அவனின் காதல் மனைவி அன்றோ..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.