(Reading time: 17 - 34 minutes)

மகளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்பதை சந்திரசேகர் சொல்ல வாய் திறக்க, ஆதர்ஷ் அவரை முந்திகொண்டான்.

“நீங்க சொல்றது சரிதா அங்கிள்! அப்படியே செய்யலாம்!” என்றவன் ஒரு அர்த்த பார்வையை தந்தையிடம் செலுத்தினான்.

“ப்ரியா! மைத்ரீக்கு காஃபியோட மாத்திரை கொடுத்து அழைச்சிட்டு வா” என்று சொல்லி ஜெய்யின் முறைப்பையும், ராகுலின் நன்றியையும், அவனறியாமலேயே பெற்று கொண்டான்.

அமைதியாக அறைக்கு வந்த மைத்ரீயின் பின்னேயே வந்தான் ஜெய்.

“மைதி!” 

அவன் அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல், “ஜெய்!” என்ற கதறலோடு அவன் தோள் சாய்ந்தாள்.

இவளின் கதறல் வெளியில் கேட்டுவிடுமோ என, ப்ரியா, அவசரமாக அறைக் கதவை அடைத்தாள்.

“மைதி! இப்போ என்னாச்சுனு அழற? உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைனு, ராகுல்கு, சொன்னா புரிஞ்சுக்குவார்.  நீ கவலைபட ஒன்னுமே இல்லடா!”

‘ராகுல் புரிஞ்சிக்கிட்டா நால்லயிருக்கும்தா... ஆனா உன்னோட வாழ்க்கை?’

அவளின் அழுகை அதிகரித்தது.

“ஷ்ஷ்ஷ்... அழக்கூடாது மைதி” அவளின் தலையை வருடியபடி, அழுகையை குறைக்க முயன்றான்.

“சரி விடு! உனக்கு சொல்ல பிடிக்கலைனா, நான் ராகுல் கிட்ட பேசற.. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு நான் சொல்ற”

இதை கேட்டதும் மைத்ரீயின் அழுகை இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

ஜெய் பேச பேச அவளின் அழுகை அதிகரிப்பதை கவனித்த ப்ரியா,

“போதும் மைத்ரீ! நீ இப்போ வெளிய போகனும்... இப்படி அழுதா உன்னோட கண், முகமெல்லா வீங்கிடும்.  வா... வந்து முகத்தை கழுவிட்டு வெளிய போகலாம்” அவளை ஜெய்யின் தோளிலிருந்து விலக்கியவள்,

“நீ போ ஜெய்! நான் அழைச்சிட்டு வர”

கதவை யாரோ தட்டவும், ப்ரியா அவசரமாக அவளை குளியறைக்குள் அனுப்பினாள்.

ஜெய் கதவை திறக்கவும், “சஞ்சு! மைதி எங்க? ராகுல் வெயிட் பண்ணிட்டிருக்கா!” அவளின் பார்வை அறையை அலசியது.

“நாங்க பேசிட்டிருந்தோம் சரூ! அதான் கொஞ்ச லேட்டாயிடுச்சு.  ப்ரியா, அவளை அழைச்சிட்டு வருவாங்க.  வா நாம போகலாம்”

எவ்வளவு முயன்றும் அவனால் சாதராணமாக பேச முடியவில்லை.  அவன் குரலில் தெரிந்த வித்தியாசத்தை கண்டு கொண்டாள் சரயூ.

“என்னாச்சு சஞ்சு? ஏதாவது பிரச்சனையா?”

‘எப்படி கண்டுபிடிச்சா?!’ வியந்தவன், வெகுவாக குரலை சமாளித்து, “இல்லை சரூ! எவ்ரிதிங் இஸ் ஃபைன்”

“பொய் சொல்லாத சஞ்சு!” குறுகுறுவென அவன் முகத்தை பார்த்தாள்.

‘இதையெல்லா சரியா கண்டுபிடி சரூ! எப்போ தேவையோ அப்போ கோட்டவிட்று... பார்வையை பாரு!’

“என்ன யோசனை சஞ்சு?”

“உன்னோட கண்கள் ரொம்ப அழகாயிருக்கு சரூ!”

“இப்போ உண்மைய சொல்ற”

“எப்பவும் நீ இப்படியே ஷார்ப்பா இருந்தா நல்லாதா இருக்கும்” மனதில் சொல்வதாக நினைத்து கொண்டு வெளியில் சொல்லியிருந்தவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.

“என்ன சொன்ன சஞ்சு? எனக்கு புரியல”

இருவரும் பேசியபடி மற்றவர்களிருந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

தவறு செய்துவிட்டோமோ என மருகி கொண்டிருந்த வடிவு இவனை பார்த்ததும்,

“ஜெய்! உங்கிட்ட பேசனும்” அவனை வேறொரு அறைக்குள் அழைத்து சென்றார்.

சரயூவின் தோன்டி துருவும் கேள்விகளிலிருந்த தப்பித்த நிம்மதியுடன் சென்றான் ஜெய்.

ங்கே தோட்டத்தில் மைத்ரீயின் வருகைக்காக காத்திருந்தவனுடைய பொறுமையோ நொடிக்கு நொடி குறைந்து கொண்டிருந்தது.

அவளை முதன்முதலாக ஒரு புகைபடத்தில்தான் பார்த்தான் ராகுல்.  குறும்பை சுமந்த கண்கள், அந்த குறும்பையே பிரதிபலித்து சுருங்கியிருந்த மூக்கும், அதற்கு கீழே இதழ்களை துறுத்தி கொண்டிருந்த நாக்குமாக அவனை மயக்கும் தோற்றத்தோடு சரயூவினருகே செல்ஃபியில் இருந்தவள், அந்த கணமே அவன் இதயத்தோடு ஒட்டிக் கொண்டுவிட்டாள்.

ஒரு நாள், மாலில், அவன் மேல் மோதி ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாள்.  அந்த திடீர் மோதலில், தன்னை சுதாரித்து கொண்டு அவளை யாரென பார்த்தவனுக்கோ ஆச்சரியம்... அத்தனை நெருக்கத்தில் மனதுக்கு பிடித்தவளை காணவும் திக்கு முக்காடி போனான்.  மகிழ்ச்சி பொங்க அவளிடம் முதல் வார்த்தை பேசிட துடிக்க... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.