“என்ன சத்தியம்?” கோபம் மறைந்து அமைதி குடிகொண்டிருந்தது குரலில்.
“அது எனக்கு எப்போ தேவைபடுதோ, அப்போ சொல்ற. எனக்கு சத்தியம் செய்து கொடுக்க முடியுமா?” அவன் ஒப்பு கொள்ள வேண்டுமே என்று அவள் தவிப்பும் எதிர்பார்ப்புமாய் அவனை ஏறிட்டாள்.
மைத்ரீயின் தவித்த முகத்தை பார்த்த அவனுடைய காதல் கொண்ட மனமோ, எதை பற்றியும் சிந்திக்காமல், காதலி தன்னிடம் முதல் முறையாக கேட்டதை கொடுக்க முடிவெடுத்தது.
“ம்..”
அவளோ நம்பமுடியாத பார்வையை வீசிவிட்டு, தனது வலது கையை அவன் முன் நீட்டினாள்.
‘எப்போதான் என்னை நம்புவ மையு?’ என்று வேதனையுற்ற மனதோடு ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் அவள் கையில் தன் கையை வைத்தான்.
தங்கள் கல்யாணத்தை பற்றி எதிர்மறையாக அவள் பேசாதது கொடுத்த நிம்மதியில், அவளிடம் கேட்டுவிட வேண்டுமென மனதில் பட்டியலிட்டிருந்த கேள்விகளை மறந்தவனாக எழுந்து கொண்டான்.
ராகுல் எழுந்ததும் தானும் எழுந்து கொண்டாள்.
உன்னிடம் இருக்க மாட்டேனென ஓடிகொண்டிருந்த தைரியத்தை இழுத்து பிடித்து, “இந்த கல்யாணம் வேணா”
அவளுடைய வார்த்தைகள் அவன் மனதில் இடியென இறங்கிய நொடி வெறிகொண்ட மிருகமாய் மாறினான்.
ஒரே எட்டில் அவளை நெருங்கியவன், “என்னடி சொன்ன?” சீறினான் ராகுல்.
சிவந்திருந்த கண்களும், கோபத்தினால் துடித்த உதடும், நரநரத்த பற்களும், கட்டுபடுத்தப்பட்ட அவனுடைய வலது கை முஷ்டியையும் ஆராய்ந்தவளின் கண்களில் பயமும், கண்ணீரும், நீயா? நானா? என்று போட்டிபோட்டன.
அவள் கண்கள் சொன்ன செய்தியில், தாளாதவனாய், அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டான்.
தன்னுடைய காதலை நிறைவேற்றி கொள்ள அவனுக்கிருந்த கடைசி வழியையும் அவளின் வார்த்தைகள் அடைத்துவிட்டன.
‘இன்னும் என்ன இருக்கு, மையு? நீயில்லாம நானே இல்லை. இதுக்கப்புறம் நான் வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்னுதா. ஆனா ஏன் மையு? எதுக்காக நம்ம கல்யாணம் வேணாம்னு சொல்ற’
கோபத்தையும் ஏமாற்றத்தையும் முடிந்த அளவுக்கு மறைத்து கொண்டு அவளிடமாக திரும்பினான். மைத்ரீ இன்னமும் அசையாமல் வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.
“சாரி! என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”
இவன் கேள்வி அவளை எட்டிவில்லை போலும் அவள் இன்னும் அசைவற்று நின்றிருந்தாள்.
அவனுக்கு அய்யோ என்றிருந்தது.
யாருக்காக பரிதாப படுவது? அவளுக்காகவா? இல்லை, தனக்காகவா என்று மனதில் எழுந்த கேள்வியால் அவன் உதட்டோரம் ஒரு வெற்றுப் புன்னகை.
“மைத்ரீ!” சற்று குரலை உயர்த்தினான்.
அதில் கலைந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கண்ணீரை துடைத்து, அவளை மார்போடு அணைத்து ஆறுதல் சொல்ல துடித்த மனதை அடக்கினான். இனி எந்த உரிமையில் அவன் அதை செய்ய முடியும்? அன்று ஸ்கேரி ஹௌசில் அவனால் செய்ய முடிந்த ஒன்றை இன்று செய்ய முடியாமல் போனது ஏன்? அன்று, அவள் அவனுடையவள் என்ற உரிமை.. இன்று..... அவனால் பெருமூச்சை மட்டுமே பதிலாக்க முடிந்தது.
“இல்லை! இங்கிருந்து போறதுக்கு முன்னாடி, என்ன காரணம்னு....” கடைசி வார்த்தைகளை சொல்லும் போது குரல் வெகுவாக கீழிறங்கியது.
அவனுடைய வருத்ததை புரிந்து கொள்ள முடிந்தாலும் தன்னால் ஏதும் செய்ய முடியாமல் தவித்தாள் மைத்ரீ.
அவன் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து, “நான் ஒருத்தரை காதலிக்கிறேன்!”.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.