(Reading time: 17 - 33 minutes)

சரி உன்னை சமாதானப் படுத்தலாம் என வந்தால், நீ, நாம கல்யாணம் செய்துக்கலாமான்னு கேட்டு, என்னை அதிர்ச்சி அடைய வச்ச. நீ திடீரென்று கேட்டதும், எனக்கும், உனக்கு விளக்கமாக சொல்ல நேரம் அப்பொழுது இல்லாததால், அந்த சூழ்நிலையை சமாளிக்க, நான் அப்படி உன்னிடம் பழகவில்லை, வெறும் நட்பாகத் தான் பழகினேன் என்று கூற வேண்டியதாகி விட்டது. இருந்தும் உன்னை மேலே படி என்று சொல்லி தானே சென்றேன்.

வங்கி வேலையை முடித்து வந்து, உனக்கு தெளிவா விளக்கலாம்ன்னு நினைத்து வந்து பார்த்தால், உன்னை காணோம். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்.

அன்று உனக்கு எவ்வளவு வேதனையான நாளாக இருந்ததோ அதே அளவு எனக்கும், கஷ்டமா தான்டா இருந்தது. ஆனாலும் நீ சென்னை சென்று என்ன செய்கிறாய் என்று கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்டா.

அதனால் தான் நீ படித்து முடித்ததும், உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தேன். நீ என் அருகில் இருந்தால், உனக்கு தெளிவாக விளக்க முடியும் என எண்ணி தான் இங்கு வர வழைத்தேன். வந்த பின்பும் நீ என் மேல் கோபமாகத் தான் இருந்தாய்.

சரி உனக்கு முறையாய், நமது கல்யாணத்திற்கு முன் மொழிந்தால், நீ ரொம்ப எளிதாக முடியாது என்று கூறி சென்று விட்டாய். சரி என் காதலை உனக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்கு அப்போ தெரியலைடா.......

ஆனால் உன்னை காணோம் என்று ஆரிப் போன் செய்த பொழுது, கிளம்பி அந்த தீவை அடையும் வரை எனது உயிர் எனது கையில் இல்லைடா. அந்த நேரம் முடிவு செய்தேன், உன்னை என் கண் பார்வைக்குள் கொண்டு வந்து பின், என் காதலை உனக்கு விளக்கி கொள்ளலாம் என்று.

அதன் பின் வேலை செய்தது எல்லாம் எனது மூளை தானே தவிர, எனது மனம் அல்ல. அந்த தீவை அடைந்ததும், உன்னை தேடும் போதே, எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். அப்பொழுதும் உன் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய பிடிக்காமல் தான், உன் வாயேலேயே , நமது திருமணத்தை ஒப்புக் கொள்ள வைத்தேன்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்ன்னு நம்ம முன்னோர் சொல்லி இருக்காங்கடா........ ஆனா நான் ஒரே ஒரு பொய் தான்டா  சொன்னேன். ப்ளீஸ்டா புரிஞ்சிக்கோ.

உனக்கும், என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும், அது உனக்கும் தெரயும்டா.........  தெரிஞ்சதால் தான் அன்று அந்த தீவில் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்ன. என்று ஒருவாறாக சொல்லி முடித்து, “ஏதாவது சொல்லுடா” என்று கூறி  பூஜாவின் முகத்தையே பார்த்திருந்தான் இந்தர்........

சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்து விட்டு, ஒரு மெல்லிய புன்னகையுடன், “எனக்கு புரியுது ஜித்து, நீங்க இது எல்லாம் எனக்காகத் தான் செய்தீங்கன்னு, ஆனா என்னிடம் முதலிலேயே சொல்லி இருக்காலாம் தான.”

“நமது கல்யாண நாளின், தனிமையில் உன்னிடம் சொல்லாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், நம்ம கல்யாணத்திற்கு பின் நாம் தனியாக பேச வாய்ப்பே கிடைக்கவில்லையே. அதற்குள் உனக்கே தெரிந்து, நேற்று கிடைத்த தனிமையிலும் நீ என்னை சொல்லவே விடவில்லை.”

“கிளைமேக்ஸ் காட்சியில் பெரிய சண்டை வந்தா தானே நல்லா இருக்கும்.” என புனைகையுடன் கூறினாள் பூஜா........

“நீ முதலில் இருந்தே சண்டை போட்டு கொண்டு தானே இருக்கடா.” பதிலுக்கு இந்தர் பதிலுக்கு புன்னகையுடன் கூற.........

“அப்ப என்ன , என்னை சண்டைக்கரின்னு சொல்றீன்களா” என பூஜா அடுத்த சண்டைக்கு ரெடியாக........

“அம்மா, தாயே, நான் எதுவும் சொல்லவில்லை. சமாதானம், சமாதானம்.” என்று முறையிட........

பூஜாவும் கலகலவென நகைத்து “சரி வீட்டுக்கு போகலாமா” என கேட்டாள்.

இருவரும் கிளம்பி ஸ்பீட் யாட்சை, வந்தடைந்தனர். அது மிகவும் அழகாக இருந்தது. மூன்று தளமாக பிரிக்கப் பட்டு இருந்தது. அடித்தளம் குறுகி இருந்ததால், பின்புறம் இஞ்சின் அறையும், முன்புறம் படுக்கை அறையும் அமைந்து இருந்தது.  படுக்கை அறை சுற்றி கண்ணாடிகளால் அமைந்து படுக்கையில் படுத்தபடியே கடலை பார்க்கும் படி இருந்தது. நடுவில் படிக்கட்டும், அதன் ஒருபுறம் உடை வைக்கும் அலமாரியும், மறுபுறம் குளியல் அறையும் இருந்தது.

நடுத் தளத்தில் சமையல் அறை, அனைத்து வசதிகளும், அமையப் பெற்று இருந்தது. பெரிய குளிர் சாதன பெட்டியும், அதனுள், ஒரு வாரத்திற்கு சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தும் இருந்தன.  நடுவில் ஒரு பெரிய டேபிள் மேல் அடுப்பு பொருந்தி இருந்தது.  அங்கேயே அமர்ந்து உண்பதற்கு வசதியாக, சிறு ஸ்டூலும் அந்த மேஜையின் மறு பக்கத்தில் இருந்தது. ஒரு அழகிய மாடுலர் கிட்சன் அந்த சிறிய இடத்தில்  பொருந்தி அமைப்பாக இருந்தது.  

மீதி இருந்த பாதி தளத்தில் ஒரு வரவேற்பறை இருந்தது. அதில் அழகிய சோபாக்கள் போடப்பட்டு இருந்தது. அங்கும் சுற்றி கண்ணாடிகளால் ஆன சுவர்களாக இருந்தது. சோபாவில் அமர்ந்தபடி கடலை வேடிக்கை பார்க்கும் வண்ணம் இருந்தது. அதனை ஒட்டியே அதற்கு அடுத்து வட்ட வடிவ மேஜையும், நான்கு நாற்காலிகளும், அமர்ந்து உன்ன வசதியாக இருந்தது.  ஒரு படுக்கை அறை கொண்ட சொகுசு வீடு போல் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.