(Reading time: 17 - 33 minutes)

மேல் தளத்தில் படகை ஓட்டும் சுக்கான் இருக்கும் அறை இருந்தது. அதில் போட் காப்டன் அமர்ந்து படகை செலுத்தி கொண்டு இருந்தார். இந்த பெரிய யாட்சின் பின்னால் ஒரு கயறு கட்டப்பட்டு, அதில் ஒரு சிறு படகு இணைக்கப் பட்டு இருந்தது.

இரவு நேரம் முழு வெண்மதி வானில் இருந்து அவர்களை பார்த்து புன்னகைக்க, அவர்கள் நகரும் பொழுது அதுவும் உடன் நகர்ந்து அவர்களுடனே வருவது போல் இருந்தது. அதற்கு போட்டியாக நான்கைந்து டால்பின் மீன்களும், துள்ளி குதித்தபடி உடன் வந்தன. முதல் முறை என்பதால் பூஜா மிகவும் மகிழ்ச்சியாக அந்த டால்பின்களை கண்டு களித்தாள்.

கால் மணி நேர பயணத்திற்கு பின் படகு மெதுவாக ஓடி ஒரு இடத்தில் நின்றது. அது ஒரு ஆள் இல்லா தீவின் கரையாக இருந்தது. அந்த படகின் மாலுமி, இந்தரிடம் வந்து , “சார் இங்கு நங்குரம் இட்டு நிறுத்தி இருக்கிறேன். மிகவும் பாதுகாப்பான இடமாகவே இருக்கிறது. நான் கிளம்புகிறேன்” என்று கூறி அவரது உதவியாளருடன் கிளம்பி, பின்னால் கட்டப்பட்டிருந்த, சிறிய படகில் ஏறி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

பூஜாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை. “என்ன நடக்குது இங்க” என்று இந்தரை பார்த்து கேட்டாள்.

“முதலில் அம்மாவிடம் சொல்லிவிட்டு பின்பு உன்னிடம் சொல்கிறேன்” என்று கூறி சம்யுக்தாவை தொலைபேசியில் அழைத்தான்.

“அம்மா, நாங்க ரெண்டு பேரும், இப்போ நம்ம யாட்சில் தான் இருக்கிறோம். ரெண்டு நாள் இங்கே தங்கிட்டு வர்றோமா.” என கூறினான்.

“எங்க படகை நிறுத்தி இருக்க இந்தர்? என சம்யு கேட்க........

“கஷிதூ தீவு பக்கம் தான் மா. இங்க இருந்தா தான் போன் சிக்னல் கிடைக்கும் என்பதால்.” என இந்தரும் பொறுப்புடன் பதில் கூறினான்.

“சரி இந்தர் கண்ணா, பாத்து கவனமா இருங்க. வானிலை எல்லாம் சரியா இருக்கா என்று பாத்து கொண்டாயா? போட் காப்டன் எங்க தங்கி இருக்கார்?” என சரமாரியாக கேள்விகளை அடுக்கி கொண்டே போனார் சம்யுக்தா.............

“மா......... என்னால் சமாளிக்க முடியும். காப்டன் அஹமது வை, பக்கத்தில் உள்ள ரேசர்டில் தான் தங்க வச்சு இருக்கேன். நீங்க கவலை படாமல் இருங்க. இங்க வானிலையும் நல்லாவே இருக்கு” என்று கூறி அவர் பேச்சை நிறுத்த,  “பூஜா உங்களிடம் எதோ பேசணுமாம்” என்று போனை பூஜாவிடம் கொண்டுதான்.

திடீர் என்று அவன் அப்படி கூறி போனை கொடுத்தும் பூஜாவிற்கு, என்ன பேச என்றே தெரியவில்லை. எதோ சமாளித்து, “நாங்க வரும் வழியில் டால்பின் பார்த்தோம் அத்தம்மா, அதுவும் நம்ம போட் கூடவே ரொம்ப தூரம் வந்தது.” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

“ஆமாம்டா, இந்த கடல் பகுதியில் டால்பின் மீன்கள் அதிகம். அதை மீனவர்களின் நண்பன் என்று இங்கு சொல்வார்கள், யாரவது மீனவர்கள் கடலில் தெரியாமல் விழுந்து விட்டால், அந்த பகுதியில் டால்பின்கள் இருந்தால், உடனே வந்து காப்பாற்றி விடும். அதனால் எப்பொழுதாவது டால்பின்கள் வலையில் மாட்டிக் கொண்டால், மீனவர்களும் அதனை உடனே விடுவித்து விடுவார்கள்.” என்று விளக்கி சொல்லிக் கொண்டு இருந்தார் சம்யுக்தா..........

இவர்களை விட்டால் இப்படியே பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று, அவள் கையிலிருந்த கை பேசியை பறித்து, “மா சாப்டிங்களா” என்று அக்கறையாய் விசாரித்தான் இந்தர்.

“புரியுது இந்தர் கண்ணா, கவனமா இருங்க” என கூறி போனை அணைத்தார் சம்யுக்தா.

 “என்ன “ என்று கேட்ட அர்ஜுனிடம்...........

“உங்க பையன் பேச்சை நிப்பாட்டுங்கன்னு, சொல்றதுக்கு பதிலா, சாப்டிங்கலான்னு கேட்கிறான்.” என கூறி புன்னகைத்தார்.

“ஒரு அப்பாக்கு தான் பிள்ளையோட அவஸ்தை புரியும். உன்னை போல் நான் ஏதாவது மொக்கை போட்டேனா பார்,” என கூறி “சரி நாம் நம்முடைய டூயட்டை ஆரம்பிக்கலாம் வா” என கூறி கண் சிமிட்டினார் அர்ஜுன்.

பூஜா போட்டை  சுற்றி பார்த்து வியந்து போனாள். ரேசாடிலேயே சாப்பிட்டு கிளம்பியதால், வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அடுத்து பூஜா போனை எடுத்தாள், “அப்பா, அம்மாட்ட பேசிட்டு, அக்காவிடமும், ஜனனி ஏஞ்சல் கிட்டவும் பேசிடறேன்” என கூறி முடிக்கு முன் அவள் கையிலிருந்த போனை பிடுங்கி அதனை சுவிட்ச் ஆப் செய்தான் இந்தர்.

“இப்போ இருட்டிடுச்சு, காலையில் வீடியோ காலில் பேசினால் , அவர்களும் இதை பார்த்தது போலவும் இருக்கும்” என்று விளக்கமும் அளித்து அவளை கையோடு கீழ் தளத்தில் இருந்த படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் இந்தர்.

“நீ போய் குளிச்சுட்டு வாடா, உனக்கு மாற்று துணி அந்த அலமாரியில் உள்ளது.” என கூறி டிவியை உயிர்ப்பித்தான்.

பூஜா குளித்து முடித்து டவலை கட்டிக் கொண்டு, “ஜித்து என்னோட டிரஸ் எடுத்து கொடுங்க” என்று குளியல் அறை உள்ளிருந்து கேட்க........

“அங்க போட்டா ஈரமாகிடும். நீ வெளிய வந்து துணி போட்டுக்கோ, நான் குளிக்க போறேன்” என கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.