(Reading time: 12 - 23 minutes)

“அட போலே.. எல்லோரையும் தான் தள்ளி வுட நேரம் பார்த்துகிட்டு இருக்காங்க.. உனக்கு கொஞ்சம் முன்னாடி.. அம்புட்டுதான்..”

“ஹ்ம்ம். உங்களுக்கெல்லாம் எத்தம்லே.. “ என்றவன் “சரி சரி.. வாங்க ..போய் மிச்ச வேலையும் பார்த்துட்டு வரலாம்.. இப்போதைக்கு எஸ்கேப் ஆகி வந்துட்டேன்.. “ என்று எல்லோரையும் இழுத்து செல்ல,

பின்னாடி வந்த செந்தில் செழியனின் காதில் “காத்து கருப்பு அடிச்சது அவங்களுக்கு இல்லலே.. உனக்குதான்னு தோணுது.. அது இந்தூரூ காத்து மாறி தெரியல.. திருச்சிலே உன்ன பிடிச்சிட்ட மாதிரி இருக்கு “ என்று கூற

அவனை முறைத்த செழியன் “ வேணாம்.. ஏற்கனவே கொல வெறியிலே இருக்கேன்.. எங்கிட்ட வாங்கி கட்டிக்காத” எனவும், நல்ல பிள்ளையாய் நகர்ந்து விட்டான் செந்தில்.

நண்பர்களோடு நேரம் செலவழித்தவன், நள்ளிரவிற்கு மேல்

“சரி.. நான் கிளம்பறேன்.. நாளைக்கு மத்தியான சாப்பாட்டுக்கு மேலே நான் ஊருக்கு கிளம்ப போறேன்.. “

“ஏன் செழியா? நீ எப்போவும் வந்தா ஒரு வாரம் பத்து நாள் இருக்க மாதிரி தானே வருவே... இந்தவாட்டி ரெண்டு நாள் கூட முழுசா இல்லாம கிளம்புத..”

“திங்கள் கிழமை காலேஜ் திறக்கிறாங்க.. நான் பத்து நாளாவே காலேஜ் போகல.. நாளைக்கு பொழுதோட கிளம்பி போயிட்டா , ராத்திரிக்கு கொஞ்சம் ஒய்வு எடுத்துட்டு நாளனின்னு வேலைக்கு போயிருவேன்.. அதான்..”

“கூட ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டு வர மாட்டியா.. ? செந்தில் எல்லாம் மூணு நாள் இருக்கபோறதா சொன்னான்..”

“எலேய்.. அவன் தலை பொங்கல்ன்னு வந்துருக்கான்.. அதோட கல்யாணம் முடிஞ்சு அங்கே வந்தவன், திரும்ப இப்போதான் வாரான்.. அதான் அவனுக்கு விருந்து எல்லாம் இருக்கு அத முடிச்சு வாரான்.. எனக்கு வேலை இருக்கு.. காலேஜ்லே இந்த வருசம் ஆண்டு விழா சிறப்பா ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க.. அதோட பொறுப்பு எல்லாம் என்கிட்ட தான் இருக்கு.. “

“என்னவோ இந்த வாட்டி வந்ததுலேர்ந்து உன் நடவடிக்கையே சரி இல்லை.. எப்போ பாரு ஏதோ யோசனையிலே இருக்க.. என்னனு தான் தெரியல.. எலேய் செந்தில் உனக்கு எதுவும் தெரியுமா?”

வேகமாக செந்திலை பார்த்த செழியனின் எண்ணங்களை புரிந்து கொண்டவனாக

“அவன் சொல்லுறது நிசம்தான்.. அவனுக்கு வேலை ஜாஸ்தியாத்தான் இருக்கு.. காலேஜ் அவன விடமா கட்டி இழுக்குது “ என்று பதில் கூற , செழியன் செந்திலை நன்றாக முறைத்தான்..

யாரும் அறியாமல் பேச்சை மாற்றி விட்டு விட்டான்.

“செந்தில் .. நீ கிளம்பு ..பெரியப்பா ஏற்கனவே சொன்னாங்களே.. வீட்டுலே தங்கச்சி காத்துகிட்டு இருக்கும்.. நீ நேரங்காலத்தோடு போய் சேரு”

அவனும் கிளம்பியவனாக “இப்போ எல்லாம் செழியன் அடிக்கடி கேட்குற பாட்டு எது தெரியுமாலே உங்களுக்கு ?

“மலர்களே.. மலர்களே இது என்ன கனவா.. “

“மலரே .. குறிஞ்சி மலரே..

“மலரே மௌனமா..”

இது எல்லாம் தான்..” என்று போற போக்கில் ஒரு வெடியை கொழுத்தி போட்டு போனான்..

உடனே அவன் நண்பர்கள் அவனை கேள்வி மேல் கேள்வி கேட்க, பல்லை கடித்த படி நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலாக

“அந்த விளங்காதவன் ஏதோ சொன்னன்னுட்டு கேட்டுட்டு இருக்கீங்களே.. வாங்க வீட்டுக்கு போகலாம் “

என்று ஏதோதோ சொல்லி சமாளித்தபடி எல்லோரையும் கிளப்பி விட்டான்.

வீட்டிற்கு சென்றவன் எல்லோரும் உறங்கியிருக்க, தானும் தூங்க சென்றான். அப்போதுதான் நினைவு வந்தது மலரிடம் பேசவே இல்லியே என்று.. ச்சே.. என்று தன்னை நொந்தபடி படுத்து விட்டான்.

றுநாள் காலையில் எழுந்து வந்தவன் அவன் அப்பா தோப்பை பார்வையிட கிளம்புவதை பார்த்தவன்,

“அப்பா.. நான் இன்னிக்கு மதியம் ஊருக்கு கிளம்பறேன்.. “ என்று அறிவித்தான்.

“ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே ..”

“நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிருந்தேன் தானே..  வேலை இருக்குன்னு.. “

“அப்படின்னா.. ராத்திரி வண்டிக்கு போயிட்டு வாயேன்..”

“இல்லை.. நான் ராத்திரிக்குள்ளே ஊருக்கு போனாதான் காலையில் காலேஜ் போக சரியா இருக்கும்.. நீங்க அம்மா வேற இருக்க மாட்டீங்க.. நேரத்தோட கிளம்பறேன்..”

“சரிப்பா.. “ என்றுவிட்டு அவர் செல்ல.

“செழியா.. பலகாரம் சாப்பிட வா..”

“இதோ வாரேன்மா.. “ என்றவன் தன் அன்னையிடமும் விவரம் சொன்னான்.. அவன் சொல்லி முடிக்கவும், வாசலில் அவன் நண்பன் அழைக்கவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.