(Reading time: 17 - 34 minutes)

“உன்னை..” என செல்லமாக கோபித்து கொண்டார் பாட்டி. பின் தன் சேலையை யாரோ இழுக்கவும் கீழே நோக்கினார். அங்கே யமுனா, “பாட்டி என்னையும் கட்டிக்கோ..” என கூறவும், உடனே அமிர்தா, “கட்டிக்கோங்கனு சொல்லுங்க” என திருத்தினாள்.

“ம்ம், ஆமா ஆமா கட்டிக்கோங்க” என சொன்னாள் 4 வயது சிறுமியான யமுனா.

“சரிடா செல்லம்” என பாட்டி அவளைத் தூக்கி கொண்டாள். “உங்க பேரு என்ன என சொல்லுங்க பாப்போம்..”

“என் பேரு யமுனா..”

“ஸ்வீட் நேம், என கூறி உன் மகளாமா? கல்யாணம் ஆகிடுச்சா? ஆனா..” என யோசித்தவர் மனதில் கணக்கிட்டு கொண்டு, “இப்போ உனக்கு 20 வயசுதான இருக்கும்?..”  

“என் மகள் தான் பாட்டி, நான்தான் அவளுக்கு அம்மா” என்றாள், யமுனாவை பார்த்து கொண்டு..

ஆமா.. ஆமா.. என யமுனா மழலை குரலில் தலையை ஆட்டி கூறினாள். “அம்மு எனக்கு மட்டும் தான் அம்மா. யாருக்கும் கிடையாது..” எனவும் எல்லோரும் சிரித்தனர்.. பாட்டிக்கு தன் பேத்தியின் பதில் புதிராக இருந்தது. கழுத்தில் தாலி இல்லை, யமுனா தன் குழந்தை என்கிறாள், ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும்  இப்பொழுது கேட்கவேண்டாமென நினைத்தார்,இன்றுதான் வந்துள்ளாள், இன்றே அவளை கேள்விகளால் துளைத்தெடுக்க விரும்பவில்லை, மற்றவர்களுக்கும் அதே எண்ணம் இருந்ததால் அமைதி காத்தனர்..

“ஆனா இந்த யம்முக்குட்டி இனி எங்களுக்கும் சொந்தம்” என மின்விழியும் மீன்விழியும் அவளுக்கு எதிராக நின்று ஆஜராகவும் யமுனா அவர்களை பார்த்தாள், பின் தன் கண்ணை கசக்கவும், “என்ன குட்டி? தூக்கம் வருதா?.” என்றாள் மின்விழி.

“அதெல்லாம் இல்ல, நீங்க ஒருத்தரா? இரண்டு பேரா? ஒரே மாதிரி இருக்கிங்க” என யமுனா குழம்பினாள்.

“நாங்க இரட்டைபிறவிங்க, ஒரே மாதிரி இருக்கோம்டா தங்கம்” எனவும், ஓ என தலை ஆட்டினாள் யமுனா.

பின் அமிர்தாவிடம் திரும்பி, “அக்கா, நாங்க தான் ஆதிமூர்த்தி சங்கரிதேவியின் தவபுதல்விகள்” என்று  அமிர்தாவை கட்டிப்பிடித்து கொண்டனர், “எங்களுக்கு ஒரு அக்கா இருக்கிறார்கள் என்று தெரிந்தப்பின் நாங்க ரொம்ப ஹாப்பி.. இனி நாங்க வாங்கும் திட்டுகளில் இருந்து நீங்க காப்பாத்துவிங்க.. ஜாலி,ஜாலி, ஜாலி..” என மகிழ்ச்சியுடன் பேசினர். முதல் அறிமுகத்திலே இவ்வளவு அன்போடு பழகும் சகோதரிகளை கண்டு அமிர்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“அக்கா, இவங்க எல்லொருடைய இன்ட்ரோ வ நாங்க தறோம். கவனிங்க..”

“அப்படியா!. இங்க இருக்குறவங்க எல்லோருடைய  பயோடேட்டாவும் வாசுமாமாவும் தமிழும் சொல்லிட்டாங்க. நீங்க சிரமப்பட வேண்டாம், அபி அண்ணா எங்க?..” எனவும்,

“அவருக்கு 25  வயசுதான ஆகுது, அவர அண்ணானு கூப்பிடனுமா?..” என இருவரும்  கோரஸாக வினவினார்கள்.

உடனே அவர்களின் காதை திருகி “என்ன சொன்னிங்க?..” என அமிர்தா கேட்க, “ஐயோ அக்கா வலிக்குது விடுக்கா, உனக்கு தாத்தாவே பரவாயில்லை” எனவும் தாத்தா சிரித்தார்.

“அப்படிப்போடு, இவங்களுக்கு நீதான்மா சரி” என்றவர். “அபி வேலையா வெளியே போயிருக்கான்மா வந்துடுவான்..” என்றார் தாத்தா.

திநாதன்- நகநந்தினிதேவி மற்றும் ஆதிமூர்த்தி-சங்கரிதேவி என இரு தம்பதிகளுக்கும் ஒரேநாளில்தான் திருமணம் நடந்தது. அமிர்தா 5 வருடங்களுக்கு பிறகு தான் பிறந்தாள். ஆனால் அபியுக்தன் திருமணம் ஆன ஒரு வருடத்திலே ஆதிமூர்த்தி-சங்கரி தேவிக்கு பிறந்துவிட்டதால் அவ்வீட்டின் மூத்த மகன்வழிபேரன் அபியுக்தன் ஆவான்.

ஆறுமுகவேல் தாத்தாவிற்கு பலவிதமான எஸ்டேட்கள் இருந்தன. ஏற்காடில் பாதி எஸ்டேட் அவர் பெயரில்தான் இருந்தன. அதில் பழ வகைகளான பலா,அத்தி,நட்சத்திர ஆப்பிள் களும், மரவகைகளான தேக்கு,சில்வர்ஓக் வகைகளும். கருப்பு மிளகு,ஏலக்காய், காப்பி கொட்டை வகைகளும் அடக்கம். இவைகளை தன் இரு இளையமகன்கள் பொறுப்பில் விட்டிருந்தார். இதில் அபியுக்தன் தனியாக தன் சொந்த உழைப்பின் மூலம் ஆரஞ்சு,கொய்யா, நீர்ஆப்பிள் எஸ்டேட்களை சம்பாதித்திருந்தான். இவர்களின் சம்பாதிக்கும் ஒருபகுதி ஆறுமுகவேல் டிரஸ்ட் க்கு ஒதுக்கப்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி முதல் மருத்துவ வசதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆறுமுகவேல் டிரெஸ்ட் இவ்வீட்டின் பெண்களால் நடத்தப்படுகிறது,இதில் அன்பு இல்லம் நகநந்தினிதேவியின் பொறுப்பில் நடத்தபடுகிறது, கணவர் இறந்தப்பின் அன்புஇல்லத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சங்கரிதேவி, சிவச்செல்வி இருவரும் உடன்பிறந்த சகோதரிகள், வீடு மற்றும் தோட்ட அலங்காரம் முழுவதும் இவர்கள் கை வண்ணத்தில் அழகானது, இருவரும் நந்தினியை சொந்த சகோதரியாக பாவித்தனர். இம்மூன்று மருமகளுக்கும்  அனுபாமா என்றால் உயிர். இக்குடும்ப ஒற்றுமைக்கு இவ்வீட்டு பெண்களே காரணம். பின்னே பெண்களால் முடியாததுனு ஏதேனும் ஒன்று உண்டா? (ரொம்பநேரமா இக்குடும்பத்து intro குடுத்து bore-அடிக்க வைச்சுட்டேன், இனிமேலும் present கதைக்கு போகலைனா எல்லோரும் திட்ட ஆரம்பித்துவிடுவாங்க, அமிர்தா இப்போ என்ன பண்றானு பாக்கலாம்)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.