(Reading time: 17 - 34 minutes)

“எத்தனதடவ சொல்றது? பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடாதீங்கனு, அதுவும் இல்லாம உன் அக்கா இன்னிக்கு தான் இங்க முதன்முதலில் சாப்பிடறா, இப்படியா பொறாமை படுவிங்க” என்றார்.

“இல்ல பாட்டி, நாங்க அக்காக்கு ஊட்டிவிடலாம் என்று நினைத்தோம்” என பொய்யாய் அழுதார்கள் (தலையில் கொட்டிவிட்டதற்காக அழுகிறார்களாம்..)

“அதெல்லாம் முடியாது, நாங்க தான் என் பொண்ணுக்கு ஊட்டிவிடுவோம்” என்றனர் இருசித்திகள்..

இப்போது அனைவரும் சண்டையிட்டு கொள்ளவும், தாத்தா, “ஆல் ஆஃப் யூ சைலன்ஸ்” என உரக்க கூறினார். இப்போது டைனிங்ஹாலில் நிசப்தம் நிலவியது.

“இப்போ என்ன? அமிர்தாக்கு இப்போ யார் ஊட்டிவிடனும், அதுதான. இப்போ நான் ஊட்டுவேன், அப்புறம் ஏஜ்வைசா ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளைக்கு ஊட்டிவிடுங்க”, என அமிர்தாவுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். இதை அனைத்தையும் பார்த்த அமிர்தாவோ தன் தலைமேல் கைவைத்து கொண்டாள்.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு விட்டனர், யமுனா அனைவரிடமும் ஓடி விளையாடி சாப்பிட்டாள், பின் அலுப்பில் அவள் கண்கள் தூக்கத்தில் சொருக ஆரம்பித்ததை கண்ட அமிர்தா அவளை தூக்கி கொண்டு படுக்கையில் கிடத்த, அவள், “அம்மு நீயும் வா, நான் கட்டிப்பிடிச்சு தூங்கனும்” என சிணுங்க அவளுக்கும் சோர்வாக இருந்ததால் அவளும் அருகில் படுத்து தூங்க ஆரம்பித்தாள்...

நந்தினி தன் மகளைக் காணாமல் அறையில் சென்று பார்த்தால், இருவரும் கட்டிப்பிடித்து உறங்கி கொண்டிருந்தனர், இருவரில் யார் குழந்தை என சந்தேகம் தோன்றியது. தன் மகளை ஆசையுடன் பார்த்தார். அழகிய வட்டமுகம் நிலவைப்போல.. தான் கர்ப்பிணியாக இருந்தபோது தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த உரையாடலின் போது பெண்ணாக பிறந்தால் நிலவைக்குறிக்கும் பெயரை வைக்க விரும்புவதாக அவர் சொன்னது நினைவு வந்தது, எவ்வளவு உண்மை.. அமிர்ததரங்கிணி!, நிலவின் பெயர்... பின் அவளின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்து வெளியே சென்றார்..

கீழே அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், அவரும் அங்கே அமர்ந்து கொண்டார். பின் வாசு நடந்ததை கூறனாலார்..

“சிலமாதங்களுக்கு முன்பு தமிழ், பேஸ்புக்கில் நந்தினியின்  சாயலில் ஒரு பெண்-ஐ காண்பித்தான், என்னால் நம்பமுடியவில்லை.நந்தினிக்கு ஒரு பெண் இருந்தால் இப்படி தான் இருப்பாள் என நினைத்தேன், ஒருவேளை அதுதான் உண்மையாக இருக்குமோ என கூட யோசித்தேன், ஆனால் அது சாத்தியமில்லையே, பின் இது பற்றி நானும் தமிழும் கிட்டத்தட்ட மறந்தநிலையில்தான் சங்கரஐயா வந்து எனக்கு வழி காட்டினார், பின் நந்தினிக்கு குழந்தை பிறந்த ஹாஸ்பிடலுக்கு சென்று விசாரித்தபோதுதான் தங்கை நந்தினியின் குழந்தை இறக்கவில்லை எனவும், குழந்தை மாறிவிட்டது எனவும் தெரியவந்தது, நர்ஸ் தெரியாமல் மாற்றிவிட்டதாகவும்,பிறகு ரிப்போட் பார்த்து தான் தெரிந்தது எனவும், இது வெளியே தெரிந்தால்வேலை போய்விடும் என்பதால் இதை மறைத்து விட்டதாக நர்ஸ் கூற, பின் அந்த நர்ஸை மிரட்டி அவள் குழந்தை மாற்றிய அந்த குடும்பவிலாசத்தை வாங்கிக்கொண்டு பின் தமிழைக் கூட்டிக்கொண்டு நான் அமிர்தாவை அழைத்துக்கொண்டு வந்தோம்” என்றார்.

“ஆனால்” என இடைமறித்த வீட்டு பெண்கள் வேறு எதும் கேட்பதற்குள், “நான் முக்கிய கால் பண்ணனும்,  இப்போதான் ஞாபகம் வந்தது, எக்ஸ்கியூஸ்மீ” என எழுந்த வாசுதேவன், நந்தினியின் அழைப்பில் திரும்பினார்..

“அண்ணா ரொம்ப நன்றிணா, என் உயிரை திருப்பிக் கொடுத்துட்டிங்க” எனவும்,

“என்னமா, இப்படி பேசக்கூடாது, நிம்மதியாக இரும்மா”, என கூறி வெளியே சென்றார், உள்ளே அமர்ந்திருந்தவர்களுக்கு பல கேள்விக்கு விடைதெரியாமல் புலம்பினர், பிறகு தாத்தா,

“எல்லோரும் இதை விடுங்க, நம் பேத்தி நம்மிடம் நல்லபடியாக திரும்பி வந்ததே  போதும், குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அம்பாளுக்கு நன்றி சொல்லனும்” என அமைதியாக கூறினார்.. அவர் மனதிலும் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்தது.

வெளியே போனபோதுதான் பெருமூச்சு விட்டார் வாசுதேவன், “சில உண்மை மட்டும் சொல்லி இருக்கின்றேன், பல உண்மைகளை மறைத்துவிட்டேன். அது அமிர்தாவுக்கே தெரியாது, முழு உண்மை அறிந்தால் அவ்வளவு தான், எல்லாம் நன்மைக்கே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என நினைத்து,காரை எடுத்துக்  கொண்டு வெளியேறினார்..

அதேநேரம் சங்கரஐயா அம்பாளை வணங்கிக்கொண்டு இருந்தார். பின் அம்மனை பார்த்து புன்னகைத்தார், “அம்மா தேவி! பல உண்மைகள் வெளிவரும் நேரம் வந்து விட்டது. ஆனால் அந்த பொண்ணுக்கு ஆபத்து இருக்கிறதே.. எதும் நடக்காமல் நீதான் பார்த்துக் கொள்ளவேண்டும், இருப்பினும் நடப்பது எல்லாம் நன்மைக்கே. இன்னும் இன்னோர் உறவும் வந்து சேர்ந்து விட்டால் அக்குடும்பம் பூர்த்தியாகி விடும், அக்குடும்பத்தின் நெடுங்கால துயரங்கள் தீர அப்பெண்ணால் முடியும், அவளுக்கு வழி காட்டுமா, என்றும் நீயே அவர்களுக்கு துணை” என மனமுருக வேண்டிக் கொண்டார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.