(Reading time: 17 - 34 minutes)

மிர்தா சங்குவின் மொபைலை எடுத்துக்கொண்டு  ஓடினாள். அவள் பின்னே துரத்திக்கொண்டு ஓடிய சங்கு..

“அமு ஒழுங்காக என் மொபைலை தந்துடு..”

“தரமாட்டேனே..”

“என் செல்லம், தந்துடுடா.. உனக்கு பிடிச்ச பால்கோவா வாங்கிதரேன்..”

“எனக்கு வேண்டாமே..”

“ஏய்.. இப்போ வீட்டிலிருந்து கால் வரும், நான் அப்போ பேசுலனா திட்டு விழும்டி ப்ளீஸ்.. என் தங்கமில்ல, பட்டு இல்ல, தந்துடுமா..”

“அதுதான் தங்கமும் இல்லை பட்டும் இல்லைனு சொல்லிட்டயே போ.. நான் தரமாட்டேன்”.

“ஏய்.. ஏன்டி குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற.. இப்போது மொபைல தரப்போறயா? இல்லயா?..”

“மாட்டேன்..”

“அப்புறம் இனிமே உன்கிட்ட பேசமாட்டேன்..”

“ஹா..ஹா..ஹா.. இதுமாதிரி பலதடவை சொல்லிருக்க, ஆனா உன்னால என்கூட பேசாம இருக்கமுடியாது..”

போடி., என சங்கு சோகமாக அமர்ந்து கொள்ள..

“இந்தா உன் போன்.. என்னை என்ன பண்ண சொல்ற, நீ உன் வீட்டில் இருந்து போன் வந்தா என்னை மறந்துட்டு மணிக்கணக்குல பேச ஆரம்பிச்சுடற.. அப்படி என்னதான் பேசுவயோ..”

“என்னபண்றது? என் வீட்டுல எத்தனை பேரு இருக்காங்க.. எல்லோரிடமும் பேசறதுல நேரம் போயிடுது..”

“எனக்கு அதெல்லாம் தெரியாது இப்போ என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போறயா இல்லயா..”

“சரி.. சரி.. வா போகலாம்..”

“சங்கு..”

“என்னடி..”

“அப்போ நீ போன் பேசலயா?..”

“இல்லை, ஷாப்பிங் போயிட்டு வந்து பேசிக்கிறேன்..”

“உண்மையாவா?..”

“ஆமான்டி.. நீதான் எனக்கு முக்கியம்”

“சங்கு..”

“மறுபடியும் என்னடி?..”

“ஐ லவ் யூ டா செல்லம்..”

“ஐ லவ் யூ டூ ஸ்வீட்ஹார்ட்..”

உம்மா.. என கன்னத்தில் இதழ் பதித்தவள் சங்குவை இழுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினாள்.. இவள் செய்கையை கண்டு,

“லூசு! இந்தமாதிரி முத்தம் தராதேனு எத்தனதடவ சொல்றது!.. பாக்கறவங்க என்ன நினைப்பாங்க...”

“ஐ டோன்ட் கேர்..”

“போடி லூசு..”

“நான் லூசுனா நீயும் லூசுதான்” என கூறி காரின் டிரைவர் சீட்டில் அமிர்தா அமர..

“அம்மா தாயே நானே வண்டி ஓட்டுறேன், நீ வோண்டாம்மா..”

“முடியாது. நான் தான் ஓட்டுவேன்..”

“கடவுளே காப்பாத்து!....”

“நான் இருக்க பயமேன்..”

“அதுதான் என் பயமே..”

“உன்னை.. போ.. நான் உன்கூட கா.. பேசமாட்டேன்.” எனகூறி வண்டியை வேகமாக எடுத்து சிறிதுதூரம் சென்றவள்.. ப்ரேக் பிடிக்காமல் போகவே நேராக ஒரு மரத்தினில் மோதினாள்..

அமூ.. என சங்கு கத்த.... தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு கண் விழித்தாள் அமிர்ததரங்கிணி..

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.