(Reading time: 16 - 31 minutes)

“குட்டிம்மா! உங்களுக்குடா.”

“அச்சோ அப்பா! நான் பால்தான் சாப்பிடுவேன் என்று உங்களுக்குத் தெரியாதா?”

“சாரிடா செல்லம். உங்களைப் பார்த்த சந்தோசத்தில் நான் மறந்துட்டேன்.” சமாளித்தான்.

“பூமி! இந்தா உனக்குப் பால்.”

காந்திமதி கூப்பிட ஓடிப்போய் வாங்கிக்கொண்டு தந்தையின் அருகே வந்து அவனது மடியில் மீண்டும் அமர்ந்துகொண்டாள்.

முகிலனுக்கு மகளின் செயலைக் கண்டு ஆச்சர்யமாயிருந்தது.

தன்னைக் கண்டதும் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அப்பா என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டதை எண்ணிப்பார்த்தான்.

முதன் முறையாகப் பார்க்கிறோம் என்ற தயக்கம் அவளுக்கு கொஞ்சம் கூட இல்லையே.

அப்போது அந்த அளவிற்குத் தந்தையைப் பற்றி அவள் சொல்லி வைத்திருக்கிறாள்.

அங்கேயே நின்றால் கீழே விழுந்துவிடுவோமோ என

...
This story is now available on Chillzee KiMo.
...

ை தன் கைகளால் வருடினான்.

அந்தப் புகைப்படத்தில் அவனது முகத்தில் அவ்வளவாக எந்த உணர்ச்சியும் பிரதிபலிக்கப்படவில்லை. அவன் தன்னிலை மறந்திருந்த காலமாதலால் அவன் ஒரு பொம்மை போன்றுதான் நின்றுகொண்டிருந்தான்.

ஆனால் அருகே முகத்தில் வெட்கச் சாயலுடன் கன்னங்கள் சிவக்க நின்றிருந்தாள் தென்றல்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.