Log in

Login to your account

Username *
Password *
Remember Me
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 12 - 23 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்

Mazhai megam kalaintha vaanam

நிதர்சனாவின் உலகம் புதியதாக மாறியிருந்தது. அது அவளுக்கு பிரியமான உலகம். வயிற்றில் உள்ள ஐந்து மாத மித்துபேபி, அவளை கண்ணில் வைத்து காக்கும் க்ருபா அண்ணா,  அவளுடைய ஆலோசகர் ஸ்வீட் நந்தினி, ஆதரவாக பெரியம்மா, ஆறுதலாக பெரியப்பா, வாய்விட்டு சிரிக்க வைக்கும் குறும்புக்கார சுஸ்மிதா(?).. ம் சாராவை சேர்த்துக் கொள்ளலாம், அவள்தான் அலுவலகத்தில் அவளுடைய கேர் டேக்கர்.

அலுவலகம் செல்ல தயாராக நின்ற தங்கையை பார்த்த க்ருபா,  தங்கையின் முகத்தில் கண்ட நிம்மதியை கண்டு அவளிடம்.

“ம், மேடம் ஆல் ரைட் போலிருக்கிறது. கூலா இருக்கீங்க.”

“அதுதானே அண்ணா உங்களுக்கும் வேண்டும்”

“கண்டிப்பாக நீது… நீ சிரித்த முகமாக இருப்பதை காணவே விரும்புகிறேன்.”

“இனி இப்படித்தான் இருக்கும் அண்ணா. பழைய விஷயங்களை நினைக்கும்போது என் மேல்தான் தவறு என்ற குற்ற உணர்வு தோன்றுகிறது. இந்த தண்டனை தேவைதான் என்று வருத்தமும் வருகிறது. அழுகையும் கோபமும் வந்து என்னை நானே வருத்திக் கொள்கிறேன். அதைபற்றி நினைப்பதை மறந்துவிட்டு புதியதாக மாற முயற்சிக்கிறேன். மித்து பேபிக்காக என் உலகத்தையும் புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். அங்கே நுழைய எனக்கு பிடித்தவர்களுக்கு அப்படியே கேட் பாஸ் தந்துவிட்டேன். பிடிக்காதவர்களை புது மனிதர்களாக பார்க்க கற்றுக் கொள்கிறேன். சிலரை அனுமதிக்கவே போவதில்லை”

“நல்லது.  நிம்மதியாக இருக்க முயற்சிக்கின்றாய். சூப்பர்…” அவன் அடுத்த வார்த்தையை தொடரும் முன்,

“நீது உன்னை அழைத்துச் செல்ல அலுவலக கார் வருகிறதுபோல..”. வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.

“இது ஜோஸ்வாவின் கார் அல்லவா? என்று க்ருபா நினைக்கும்போதே ஜோஸ்வாவே காரிலிருந்து இறங்கி வந்தான்.

“இவனா பிக்-அப் செய்யப் போகிறான்?” க்ருபாவும் நிதர்சனாவும் கேள்வியாய் நிற்க, வாசலில் கால் வைத்தவன் முன் சுஸ்மிதா,

“சுஸ்மிதா குட்மார்னிங்”

“நான் சுஸ்மிதா இல்லை. ஹன்சிகா!”. என்று பதில்வர, அவன் குழம்பிப்போய் நின்றான்.

“பாட்டி, எப்போது பெயரை மாற்றினீர்கள்.” என்று க்ருபா  கேட்க, 

“எல்லாம் மித்து பேபிக்காகதான்டா அதுக்கு பல் இருக்காதல்லவா, சுஸ்மிதான்னு சொன்னால் வெறும் காத்துதான் வரும். ஹன்சுன்னு எளிதாக கூப்பிடலாம் அல்லவா?”

“பல் முளைக்காத பிள்ளை பேசுமாக்கும். டிவியில் செந்தூராவை பார்த்துவிட்டு பெயரை மாற்றிக் கொண்டு கதை விடுகிறீர்களா?.  பாட்டி நீங்க பெரிய கேடி.” என்ற க்ருபா, ஜோஸ்வாவிடம்

“வாங்க உள்ளே போகலாம்” என்றான். “சரி, அந்த தம்பிக்கு காபி போட்டு வருகிறேன்” என்று பாட்டி கிளம்பினார்.

“க்ருபா, உன் அப்பா இல்லையா? ஏனெனில் அவர் இருந்தால் காபியை தர விடமாட்டார்.” என்று ஜோஸ்வா சொல்ல,

“இல்லை, அப்படியெல்லாம் இல்லை, அன்றைக்கு ஏதோ ஒரு  நினைவில் இருந்தார்.”

“பரவாயில்லை, நான் இப்படியே கிளம்புகிறேன். நிதர்சனா நீங்கள் வருகிறீர்களா?”

“சார், நீங்கள் எதற்கு வந்தீர்கள். நானே வந்திருப்பேன்”

“இந்த வழியாக ஒரு வேலையாக வந்தேன். அப்படியே உங்களையும் அழைத்து செல்லலாம் என்று வந்தேன். மோஸ்ட்லி, டிரைவர் வேலுதான வருவார். இப்போது கிளம்பலாமா?”

காரில் செல்லும்போது அவளிடம் திரும்பி,” குட்மார்னிங்” என்றான்.

வழக்கமாக அவள்தான் முதலில் வணக்கம் தெரிவிப்பாள். இன்றைக்கு அவனுடைய திடீர் வரவால் குழம்பிப்போய் சொல்லவில்லை.

“சாரி சார். குட்மார்னிங்” அவன் சிரித்துக் கொண்டே, “அது உங்களுக்கல்ல, மித்துபேபிக்கு” சற்றே உயர்ந்த குரலில்

“மித்துபேபி குட்மார்னிங்” என்றான். இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நிதர்சனா தடுமாறினாள். ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள்.

“ஹாய்.. மித்துபேபி, உன் அம்மா என்னுடன் பேச மாட்டார்கள். முதலாளின்னு பயம். ஆனால், நீங்களும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிடுவோம் ஓகே”. இவன் குரலை அது கேட்டுவிடுமோ என்று பயந்ததுபோல் அவள் தன்னையுமறியாமல் வயிற்றின் மேல் கைகளை வைத்து மூடினாள்.

“அப்படியெல்லாம் நீங்கள் கேட் போட முடியாது நிதர்சனா. மித்து இஸ் மை ஃப்ரெண்ட். ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாச்சு” மென்மையான புன்னகை பரவ அவன் பேசினான்.

அப்போது ஆரம்பித்ததுதான் ஜோஸ்வாவிற்கும் மித்துபேபிக்குமான உரையாடல். நிதர்சனாவிடம்கூட அவன் பேசுவதில்லை.  நேரடியாக மித்துவிடம்தான் பேசுவது வழக்கமாக் விட்டது.

“குட்மார்னிங்!”

“எப்படியிருக்கீங்க!”

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்mahinagaraj 2017-12-13 12:27
Oo my god .....????!!! yikes :clap: :clap:
nama heroni sema smart .....
evanga love epdi start paniruppanga? apdi ena ena nadandu irukkum hero vettu perinju varakku??
waiting next episod mam...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-14 19:58
namma heroine namma maadhiriye irukkanum... smartaa..! next epila it will start
thank you mahinagaraj.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்madhumathi9 2017-12-13 05:00
:clap: really fantastic epi. Kruba eppadi kandu pidikka pogiraar endru paarppom. Adutha epiyai padikka miga aavalaaga kathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-14 19:57
Dear madhumathi Thank you very much..
Reply | Reply with quote | Quote
# mazaemegam kalaidha vaanamkodiyalam 2017-12-13 03:17
i like joshvas character..is he mithu baby dad
Your style of writing excellent?
Reply | Reply with quote | Quote
# RE: mazaemegam kalaidha vaanamசாகம்பரி 2017-12-14 19:56
Quoting kodiyalam:
i like joshvas character..is he mithu baby dad

Yes of-course. Thank you, very much,
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்Devi 2017-12-12 22:03
Very interesting update Sagambari (y) indha update il kidaitha clues vachu partha.. enakku sila guess..
1. Nidharsana Abishek kooda veliye sendradhil.. yedho oru sikkal irundhu irukka vendum.. adhil irundhu avalai meetadhu Josuva... aga irukkalam..
2. Jagan Neethuvai nambamal Abishek pechai kettu avalai vettai vittu anuppiyadhil aval Jousva vidam adaikkalam agi irukkalam
3. Andha party incident kku pin Josuva Neethu iruvarukkum sandai vandhu aval Jo vai pirindhu irukka vendum
idhu ellam nadakka innum sila scenes add agalam.. adhai therindhu kolla avalaga irukkiradhu.. &
excellent flow Sagamabari ungalukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 11:58
OMG, because of this Google Map everyone finds out the route of my story :-* .
Dear Nandhini, your gusses will be cleared in next episode. And thank you very much for your comments.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 12:00
Yes Devi, you are also catch the route. Thank you very much for your comment.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்Nanthini 2017-12-12 20:41
Kirubavirku varum athe kelvi enakkum thondriyathu. Joshua Nitharsanavin kanavar endral eppadi avangalal iyalbaga avarudan pesi pazhaga mudigirathu.

Munbu Nitharsana and probably Joshua vazhkaiyil nadanthathu therintha pirage intah kelvikana muzhu pathilum kidaikumni ninaikiren.

Joshua Mithu babyyidam kaattum anbum Kirubavin sandegam sarinu kaatuthunu ninaikiren.

mudichukkal avizha kaathirukkiren :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 11:54
Thank you Nandhini,
You are right, but one can suppress their emotions in-front of some persons... in some situations... in outside view it may be look like iyalbana actions. Yes, the knots will be cleared one by one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்AdharvJo 2017-12-12 20:19
:hatsoff: :hatsoff: :clap: :clap: ninga kadhai kondu pogum vidham simply superb...dialogues and screen play is amazing, funny & sarcastic counters with mild fragrance all around the two oh its 3 (mithubaby) :D :dance: Clumsy situation but diplomatically moved...confusions all around unmaya therindhu kola poraduvavan....Pokishamaga padhugakka ninaithavare unmai enavendru therindhu kolamal kutravali kundil nikka vaika porara :Q: ivarukku innum oru 40thu pakam thevai padum pole irukke :Q: Mr Generous Vs Honesty :D yaru win aga poranga know it would be win win scenario.... Ivanga loda family intro was :cool: Mr Jagan seythadhu 100% wrong FB therindhu kolamal no blaming on rest of the two :yes: :P No biased views ;-) :thnkx: for this cool & interesting update. Funniest of all Jo sathya-oda Neethu-vai serka ninaipadhu pavam avarum thaa ena panuvaru :D unmaiya therinjavanga thaa zip potta mouthu-k gum pottu votta vachi irukangale :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 11:49
Dear Adharv,
Thank you very much for this review. Mr.Generous Vs Honesty... Well said, These titles are suitable for my characters. That is their 'dharma' or policy. I like to say this story is completely revolved by the predictable and unpredictable human behaviour in certain situations. Rest in next epi.
Thank you very much for your delightful comments
appuram...
i am not a psychiatrist
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்saju 2017-12-12 20:02
NICE &INTERSTING UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 11:33
Thank you Saju. :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்U.Banu 2017-12-12 19:47
Super epi :clap: :clap: :clap:Kathai rompa super aha poguthu :dance: :hatsoff: Waiting for nexr epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 04 - சாகம்பரி குமார்சாகம்பரி 2017-12-13 12:02
Thank you Banu
Reply | Reply with quote | Quote
# Mazhai megam kalainda Vaanam by SagampariSahithya 2017-12-12 19:33
Hi
Excellent episode. Romba viru viruppa pogudhu. Waiting for the next episode. Happy writing. :dance:
Reply | Reply with quote | Quote
# RE: Mazhai megam kalainda Vaanam by Sagampariசாகம்பரி 2017-12-13 11:32
Thank you Sahithya you are welcome.
Reply | Reply with quote | Quote

Chitra Poll

Friends, ஒரு ரைட்டருக்கு முதல் கதை ரொம்ப ஸ்பெஷல். But அதுக்கு அப்புறம் எழுதுற கதைகள்ல அந்த முதல் கதையோட எதிர்பார்ப்பும் சேர்ந்துடு. அந்த விதத்துல ஒவ்வொரு ரைட்டரும் அதை எப்படி மேனேஜ் செய்றாங்க என்பதை அவங்களுக்கு உங்க வாய்ஸ் வழியா சொல்ல தான் இந்த ஜாலி polls.

 சித்ரா

முதல்ல நம்ம லிஸ்ட்ல வரவங்க சித்ரா (Chitra). அவங்களோட முதல் கதை 'உள்ளமெல்லாம் அள்ளி தெளித்தேன்'. காதல் , குடும்பம், காமெடின்னு நம்ம மனசையும் அள்ளிட்டு போச்சு. அதுக்கு அப்புறம் அவங்க முடிச்ச கதைகளில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை எதுன்னு அவங்களுக்கு சொல்லுங்களேன்.

டைம் - நான்கு நாட்கள். (22 July 6.30 PM) மறக்காம உங்க வோட்டை பதிவு செய்ங்க!
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From the Past

Promos

From the Past

Contests

Promos

From the Past

Contests

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-


Mor

AN

Eve
23
KVJK

MuMu

NIVV
24
UNES

PPPP

MMV
25
SPK

EMPM

-
26
ISAK

KaNe

NOTUNV
27
-

Ame

-
28
AA

NKU

-
29
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top