(Reading time: 14 - 27 minutes)

தே சமயம் வருணோ அணை உடைத்த வெள்ளமாக மாறிப் போயிருந்தான்.

“காயூ” என்ற அவனது அழைப்பு காதுகளுக்கு அருகில் ஒலிக்க மெல்ல திரும்பிய காயத்ரியை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.

“வருண்” சந்தோஷமாக அழைத்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அந்த அறையின் கதவு சாத்தி இருந்தது.

அவளை வேறு எதுவும் யோசிக்க விடமால் தன்னோடு இறுக அணைத்திருந்தான்.

ஒருவர் அணைப்பில் ஒருவர் எத்தனை நேரம் திளைத்திருந்தனரோ!! காயத்ரியின் போன் ஒலிக்க இருவரும் சட்டென விலகி நின்றனர்.

“அண்ணி!!!” மறுமுனையில் உற்சாகமாக வர்ஷினியின் குரல் ஒலிக்க காயத்ரி “வர்ஷினி” என்று கூறி ஸ்பீக்கரில் போட்டு விட்டாள்.

“அம்மு..எங்க இருக்க” வருண் குரல் கொடுத்தான்.

“வந்துட்டு இருக்கேன் அண்ணா” என்று சந்தோஷமாய் சொன்னாள்.

ஒரு மணி நேரம் முன்பு அழுது கரைந்தவள் என்றால் யாரும் நம்ப தான் மாட்டார்கள்.

அதே நேரம் அங்கே மண்டபத்தில் டாக்டர் சிவகுமார் சுமித்ரா ரவிசங்கர் தம்பதியினரை லக்ஷ்மி ராமசந்திரன் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

“டாக்டர் கணேஷ் ராம் பேரன்ட்ஸ்” என்று அறிமுகம் செய்து வைக்க ராமசந்திரன் லக்ஷ்மி இருவரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்.

“எங்க பையன் வருண் கணேஷ் ராம் பத்தி நிறைய சொல்லியிருக்கான். உங்க அறிமுகம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்” ராமசந்திரன் அவர்களை உபசரித்தார்.

ஸ்ரீதரை சந்திததுமே கணேஷ் தனது அன்னையை அழைத்து வர்ஷினி யார் என்று கண்டுபிடித்து விட்டதை தெரிவித்தான். இப்போது அவர்கள் செல்வது வர்ஷினி வீட்டு விழாவிற்கு தான் என்பதையும் சொல்லி தான் வர்ஷினியை சந்திக்க செல்வதாக கூறியிருந்தான்.

லக்ஷ்மி ராமசந்திரன் இருவரிடமும் பொதுவாக சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்த சுமித்ரா மெல்ல வர்ஷினியை பற்றிப் பேச்செடுத்தார்.

“எங்க பையனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கோம். உங்க பொண்ணு வர்ஷினியை கேட்கலாம்னு ஒரு எண்ணம்” சுமித்ரா நேரடியாகவே கேட்டுவிட்டார்.

“கணேஷ் பற்றி வருண் எப்போவும் உயர்வா சொல்வான். எங்க மருமகளும் ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருப்பா. நீங்க எங்க அம்முவை பெண் கேட்டது ரொம்ப சந்தோஷம்” லக்ஷ்மி சொல்ல ராமசந்திரன் மனைவியை பார்த்து என்ன இது என்பது போல கண்களாலேயே சைகை செய்தார்.

அப்போது அங்கே வருணும் காயதிர்யும் வர சுமித்ரா ரவிசங்கரை அடையலாம் கண்டு கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.

“மேடம் எங்களுக்கு ப்ரொபசரா இருந்தாங்க” சுமித்ராவை அறிமுகம் செய்து வைத்தாள் காயத்ரி.

“நம்ம அம்முவை பெண் கேட்டாங்க டாக்டர் கணேஷ்க்கு” லக்ஷ்மி சொல்லிக் கொண்டிருந்த போதே அங்கே பவானி ஜெயகுமார் வரவும் பரஸ்பர அறிமுக படலம் நடந்தேறியது.

அங்கு நடந்து கொண்டிருந்த உரையாடலை அறிந்த பவானி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

பவானியும் ஜெயகுமாரும் வர்ஷினி மேல் மிகுந்த பிரியம் கொண்டிருப்பதை அறிந்து சுமித்ராவுக்கு நிறைவாக இருந்தது.

“நல்ல விஷயம் பேசிட்டு இருக்கும் போது இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம். எங்க அம்முக்கு இப்போ கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை. எங்களை மன்னிச்சிடுங்க” ராமசந்திரன் கூறவும் காயத்ரி வருணை பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிட சொன்னாள்.

அப்போது அங்கே வருண் ஒரளவு தாங்கள் அறிந்தவற்றை கூறவும் ரவிசங்கரும் தங்கள் மகன் கூறியதை அனைவரிடமும் தெரிவித்தார்.

“இவ்வளவு நடந்திருக்கு. நம்மக்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை” ராமசந்திரன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

“நீங்க வருத்தப்படாதீங்க. அவ நிலைமையில் இருந்தும் கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும். சின்ன பொண்ணு தான் இல்லையா. நீங்க வருத்தப்படக் கூடாதுன்னு சொல்லாம விட்ட்ருக்கா” சுமித்ரா சொல்லவும் லக்ஷ்மி ராமசந்திரன் இருவரும் அர்த்தம் நிறைந்த பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

“ரொம்ப அறிவான பொண்ணு. ஒரு வருஷமா என்னோட தொழில் பூராவும் அவ தான் கவனித்துக் கொண்டிருக்கா. ஹாஸ்பிடல் டிசைன் செய்து கட்டியது முழுக்க முழுக்க அவ தான்” ராமசந்திரன் சொல்லிக் கொண்டிருக்க

“இந்த விழா ஏற்பாடு பூராவும் அம்மு தான் செய்தா. எங்களை ஒரு வேலை கூட செய்ய விடாம எல்லாத்தையும் அவளே தான் கவனித்துக் கொண்டாள்” ஜெயகுமாரும் பெருமையாக சொன்னார்.

“ஆனா இவ்வளவு அறிவும் திறமையும் இருந்தும் இப்படி முடிவு எடுத்து அவளும் கஷ்டப்பட்டு உங்க பையனையும் கஷ்டபடுத்தி இருக்கா” ராமசந்திரன் வருத்ததோடு சொல்லவும் அவரின் கரங்களை ரவிசங்கர் ஆதரவாய் பற்றிக் கொண்டார்.

அந்நேரம் அங்கே ராமுடன் உள்ளே நுழைந்தாள் வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.