(Reading time: 14 - 27 minutes)

தேவதை போல சிரித்த முகமாய் வந்தவளை கண்டு மனம் நிறைந்து போனார் சுமித்ரா.

“என்ன எல்லோரும் என்னை வரவேற்க நின்னுட்டு இருக்கீங்களா. இப்படியா வரவேற்பது...அதிரடியா ஒரு என்ட்ரி சாங்...பூ தூவி மாலை எல்லாம் போட்டு வரவேற்க வேண்டாம்” வந்ததும் வராததுமாய் வம்பு இழுக்க ஆரம்பித்தாள்.

யாரும் அவளுக்கு பதிலுக்கு பதில் பேசாமல் போகவே அங்கே இருந்த டாக்டர் சிவகுமாரை கண்டுகொண்டு அவரை நோக்கி சென்றாள்.

“டாக்டர் அங்கிள் வெல்கம். எப்படி இருக்கீங்க” என்றவள் அவர் அருகே சுமித்ரா ரவிசங்கர் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...எங்கன்னு நியாபகம் வரல. ஆன்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” சுமித்ராவின் கரம் பற்றிக் கொண்டாள்.

“நீயும் ரொம்ப அழகா இருக்க மா” அவளின் தலையை இதமாக வருடினார்.

வருண் கணேஷை அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்க பெரியவர்களின் பாதம் பணிந்து வணக்கம் சொன்னான்.

ராமசந்திரன் கணேஷின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.

எப்போதும் போல ஓர் புன்னகை புரிந்தான்.

சுமித்ரா ரவிசங்கருடன் அளவளாவிக் கொண்டிருந்த வர்ஷினி இதை எல்லாம் கவனிக்க வில்லை.

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள் ஆன்டி” வெளிப்படையாக சொன்னவளை அணைத்துக் கொண்டார் சுமித்ரா.

அவள் வரும் முன்னே அவளிடம எதுவும் கேட்டு சங்கடப் படுத்த வேண்டாம் என்று அனைவரும் முடிவு செய்திருந்தனர்.

எனவே ராமசந்திரன் அவளிடம் வந்து சுமித்ரா ரவிசங்கர் அவர்கள் மகனுக்கு அவளைப் பெண் கேட்பதாய் சொன்னார்.

“ஆன்டி எனக்கு ஏற்கனவே ஒரு ஸ்மார்ட் ஹான்ட்சம் பாய் பிரண்ட் இருக்கார்” என்றவள் கணேஷின் கைகளைப் பற்றி அவர்கள் முன் நிறுத்தினாள்.

வர்ஷினி இப்படி பட்டென்று போட்டு உடைப்பாள் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

தாங்கள் நியூயார்க்கில் சந்தித்ததாகவும் சில காரணங்களால் பிரிந்து இருந்ததால் எதுவும் சொல்லவில்லை என்றும் அவளாகவே கூறினாள்.

“சரி அப்போ இந்த பையனையே கல்யாணம் செய்துக்கோ. எங்கிருந்தாலும் வாழ்க” என்று சுமித்ரா சிரித்துக் கொண்டே கூற

“அம்மா” என்று கணேஷ் அவரை அணைத்துக் கொண்டான்.

“அம்மாவா” ஆச்சரியத்தில் விழித்தவள், “அத்தை நீங்க ரொம்ப மோசம்” என்று செல்லமாய் சிணுங்கினாள்.

“அப்போ கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடலாமா” ஜெயகுமார் கேட்க

“அது தான் ஏற்கனவே பிக்ஸ் செய்துட்டோமே” என்றாள் வர்ஷினி.

“வருண் காயத்ரி கல்யாணத்திற்கு தானே குறித்தோம். உனக்கும் கணேஷ் ராமிற்கும் கல்யாண தேதி பிக்ஸ் பண்ணிடலாம் இன்னிக்கே” என்றார் அவர்.

“எனக்கு கல்யாணம் வேண்டாம்” வர்ஷினி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“அறிவிருக்கா உனக்கு. என்ன பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறியா” லக்ஷ்மி கோபம் கொள்ள வருண் காயத்ரி இருவரும் என்ன அம்மு இது என்று அவளை கடிந்தனர்.

சுமித்ரா ரவிசங்கர் இருவரும் என்ன சொல்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க “உனக்கு கணேஷ் ராம் பிடிச்சிருக்குன்னு நீ தானே இப்போ சொன்ன” ராமசந்திரன் அவளிடம் இதமாக கேட்டார்.

“எனக்கு ராம் ரொம்ப பிடிக்கும் மாமா. ராம் மட்டும் தான் பிடிக்கும். ஆனா கல்யாணம் வேண்டாம் மாமா” வர்ஷினி சொல்ல கணேஷ் ராம் உட்பட அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க சுமித்ரா வர்ஷினியை ஆதரவாய் பற்றிக் கொண்டார்.

“எல்லோரும் வேலைகளை கவனிங்க. விழா ஆரம்பிக்க நேரம் ஆச்சே” என்றவர் “நான் என் மருமகளோட தனியா பேசணும்” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கே இருந்த ஓர் அறைக்குச் சென்றார்.

அவர் ஏதும் கேட்கும் முன்பே வர்ஷினி அவரை கட்டிக் கொண்டு அழுதாள்.

“அத்தை, என் அம்மா மாதிரியே எனக்கு பாப்பா பிறக்கும் போது நானும் செத்துப் போயடுவேனா” என்று அவள் கேட்க அதிர்ந்தார் அவர்.

“அப்படின்னு யார் சொன்னா உனக்கு”

“ராம் தான் ரிசர்ச் செய்து அன்னிக்கு சொன்னார் அத்தை” என்ற குண்டை வீசினாள்.

இதயம் துடிக்கும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.