(Reading time: 15 - 30 minutes)

இது எனக்கு ஏற்கனவே தெரியுமே என மனதில் நினைத்துக்கொண்ட அகிலன்,”அப்போ நாம் திருவாங்குடி விஷ்ணு கோயிலுக்கு போகலாமா..??”,என்று கேட்டது அகிலன்..

“நானே பயந்து நடுங்கறேன்..நீ வேற..??”,என்று எரிந்து விழுந்தாள்..

“ஏன் சுவடியில அங்க போக சொல்லி போட்டிருக்குன்னு தெரிஞ்சுகலாம்ல..??”

“எனக்கு குழப்பமா இருக்கு அகிலா..”

“ஏன்..??”

“என்னென்ன சொல்லத் தெரியலை..என்ன சுத்தி எதுவோ நடக்கற மாதிரி ஒரு நினைப்பு..”

“அந்த இடத்துக்கு போனால் ஒருவேளை உனக்கு விடை கிடைக்கலாம் இல்லையா..??”,மேலும் அவளை குழப்பியது அகிலன்..

“கெடைக்க வாய்ப்பிருக்கு..”,என்றாள் திணறலாக..

“அப்போ போலாமா..??”

“ஹ்ம்..வரும் வெள்ளியன்று போகலாம்..”,என்றாள் தியா அமைதியாக..

இப்பொழுது மர்ம புன்னகை ஒன்று அகிலனின் முகத்தில்..

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!

மேகம் முழிச்சு கேக்குதே!

கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே!

மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

முகத்தில் இளங்காற்று வீச பாடலை இரசித்தபடி மெதுவாக காரை செலுத்திக் கொண்டிருந்தாள் தியா..அருகில் அகிலன்..

“தியா..வலது பக்கம் ஒரு வளைவு வருது பார்..அதுல போகணும்..”,என்றது அகிலன்..

“சரி சரி டா..”,என்ற தியா அகிலன் சொன்ன வழியே செல்லத் துவங்கினாள்..

“அகிலா..இந்த ஊருல தங்க இடம் கிடைக்கும்ல..??”,என்று நூறாவது தடவையாகக் கேட்டாள் தியா..

“இது கிராமம் தியா..நீ பொண்ணு வேற..அதனால் கண்டிப்பா தங்க இடம் கிடைக்கும்..”,என்றது அகிலன் நம்பிக்கையுடன்..

“என்னமோ சொல்ற..”,என்ற தியா வரிசையாக கட்டப்பட்டுருந்த ஓட்டு வீடுகளைக் கண்டு வண்டியை நிறுத்தினாள்..

“தியா..நான் உன்னோட கைப்பையில் இருக்கேன்..நீ வலப்பக்கம் ஏழாவதாக இருக்கும் வீட்டிற்கு சென்று நான் நேற்று உன்னிடம் சொல்லிக் கொடுத்தது போல் பேசு..நீ தங்க வீடு ரெடி..”,என்றது..

அகிலனை ஒரு சைஸாக பார்த்தவள் தனது கைப்பைக்குள் அகிலனை வைத்து ஜிப்பை  க்ளோஸ் செய்து தோளில் மாட்டுக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் துவங்கினாள்..

அவளது லாங் ஸ்கிர்ட் டாப்ஸைக் கண்டு அவளை விநோதமாக பார்த்த ஒரு நடுத்தர வயது அம்மாள்,”யாரு புள்ள நீ..?? ஊருக்கு புதுசா..??”,என்று கேட்டார் ஒரு தினுசாக..

“ஆமாங்க மா..”

“யாரு வூட்டுக்கு வந்திருக்க..??”

“தேவவ்ரதர் வீட்டுக்கு..”

“பெரிய வூட்டு விருந்தாளியா..?? இப்படி சொக்கா போட்ருக்கப்பவே நெனச்சேன்..”,என்றார் அவளை நெட்டி முறித்தபடியே..

”ஆமா மா..அவங்க வீட்டுக்குத் தான் வந்திருக்கேன்..”,என்றாள் சற்று எரிச்சலாக..

அவளது எரிச்சலைக் கண்டுகொண்டு அப்பெண்மணியும்,“சரி தாயி..வெயில்ல ரொம்ப நேரம் நிக்காதீக..கருத்திடுவீக..”,என்று தனது கழுதை நொடித்த படி நடையை கட்டினார்..

“என்னடா இது இவங்க நம்மள்ள வெயில்ல நிக்கவெச்சு கேள்வி மேல கேள்வி கேட்டு பாடாபடுதிட்டு..என்னமோ நான் ஆசைப்பட்டு நின்னுட்டு இருக்கற மாதிரி பேசிட்டு போறாங்க..”,என முனுமுனுத்த படியே வீட்டை நெருங்கினாள்..

மற்ற வீடுகள் போலவே இந்த வீட்டை சுற்றிலும் முள்வேலி போட்டிருந்தனர்..

மாமரம் வேப்பமரம் புங்கைமரமென வீட்டை சுற்றிலும் பலவிதமான மரங்கள்..

மெதுவாக வேளிக்கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவள்,”ஐயா..யாராவது இருக்கீங்களா..??”,என்றாள் சத்தமாக..

சில நிமிடங்களுக்கு பின் வயதான ஒடிசலான ஒரு பெண்மணி கதவைத் திறந்து,”யாரம்மா நீ..?? என்ன வேண்டும்..??”,என்று கேட்டார்..

அவரைக் கண்டு புன்னகைதவள்,”பாட்டி..நான் தியா..சென்னையிலிருந்து வந்திருக்கேன்..மிஸ்டர் தேவவ்ரதரை பார்க்கனும் ..”,என்றாள்..

“உள்ளே வாம்மா..”,என அவளை உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தவர்,”ஒரு நிமிஷம் பொறு தாயி..அவரை கூப்பிட சொல்றேன்..”,என்று விட்டு,”மேகலை..மேகலை..”,என்று அடுக்களையை நோக்கி குரல் எழுப்பினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.