(Reading time: 15 - 30 minutes)

அவரது குரலைக் கெட்டு அவரசர அவசரமாக ஓடி வந்தாள் இருப்பத்தைந்து வயது பெண் ஒருத்தி..

“சொல்லுங்க பாட்டி..கூப்பிட்டீகளா..??”,என்றாள்..

“பெரியயைய்யாவைப் பார்க்க இந்தப் பொண்ணு பட்டணத்திலிருந்து வந்திருக்கு..அவுகளை கூட்டிட்டு வா..”,என்றார்..

தியாவைப் பார்த்து புன்னகைத்த அந்த பெண் மின்னலென பின்கட்டு வழியே தோட்டத்திற்குள் பிரவேசித்தாள்..

அவள் சென்றவுடன் கூடத்திற்குள் வந்த வயதான பெரியவர் தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது மனைவியை இந்த பெண் யாரென்பது போல் கைகளால் சைகை செய்து கேட்டார்..

தியாவை அவரிடம் அறிமுகப்படுத்திய பாட்டி தியாவிடம்,”இவர் என் கணவர் குமாரர்..நீ காணவந்திருப்பது இவரது அண்ணனை..”,என்றார்..

அவருக்கு வணக்கம் வைத்த தியா,”பாட்டி உங்க பேரை சொல்லலை நீங்க..”,என்றாள் புன்னகையுடன்..

அதைக் கேட்டு மெலிதாக சிரித்த் பாட்டி,”என் பெயர் அம்பிகாவதி தாயி..”,என்றார்..

“உங்க பெயர் ரொம்ப க்யூட்டா இருக்கு..”,என அவருக்கு ஐஸ் வைத்தவள்,”உங்க ஊரைப் போலவே”,என்றாள்..

“வாயாடி..”,என தியாவை நோக்கி சொன்ன குமாரர் தனது மனையாலிடம்,”பாப்பாக்கு சாப்பிட ஏதாவது கொடு தாயி..”,என்றார்..

அவரைத் தடுத்த தியா,”தாத்தா இப்போ தான் வரும் வழியில் செம கட்டு கட்டிட்டு வந்தேன்..இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டுக் கொள்கிறேன்..”,என்றாள்..

சரிம்மா என்பது போல் தலையசைத்தவர்,”தனியா வா இவ்ளோ தூரம் வந்த..??”,என்று கேட்டார்..

“ஆமாம் தாத்தா..நான் மட்டும் தான் வந்தேன்..”,என்றாள்..

“அம்புட்டு தூரம் தனியா வரலாமா..??காலம் கெட்டு கெடக்கு தாயி..”,என்றார் சற்று கோபமாக..அதில் அக்கறை மட்டுமே..

அவரது பேச்சில் கண்ணில் நீர் கட்டியது தியாவிற்கு..இருந்தாலும் சமாளித்துக்கொண்டு,”தாத்தா..நோ வர்ரீஸ்..இனிமேல் தனியா எங்கயும் போக மாட்டேன்..”,என்றாள்..

அப்பெரியவருக்கு இவளைக்கண்டவுடன் இறந்து போன தனது பெயர்த்தியின் நியாபகம்..

தனது பெயர்த்தியைப் போலவே பேசியவளை கண்டவுடன் பிடித்துவிட்டது அவருக்கு..

இன்னும் இன்னும் இவளுடன் வாயாட நினைத்தார்..

அதற்கு தடையாய் அங்கு அவசரமாய் வந்த மேகலை,”பெரியயைய்யா வந்திட்டாரு..”,என்றாள் அறிவிப்பாய்..

சுமார் எண்பது மிக்க ஒருவர் கம்பீரமாக அக்கூடத்திற்குள் நுழைந்தார்..

அவரைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த தியா வேக வேகமாக எழுந்து நின்றாள் தடுமாற்றத்துடன்..

தியாவைத் தனது கூரிய விழிகளால் பார்த்தவர் இருக்கரம் கூப்பி,” தேவவ்ரத ஆச்சார்யா..”,என்றார் கம்பீரமாக..

வணக்கம் நண்பர்களே..

சென்ற அத்தியாயத்தில் நீங்கள் கேட்டிருக்கும் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்..

இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்..

நன்றி..!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.