(Reading time: 15 - 30 minutes)

ன்றோடு தியா ஆச்சார்யாவிடம் வேலை செய்யத் துவங்கி நான்கு மாதம் கடந்திருந்தது..

இதுவரை அவரை கண்காணித்ததில் அவளுக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை..அதுவே அவளுக்கு ஒரு சோர்வை உருவாக்கியது..

கடந்த ஓரிரு நாட்களாக தனது சித்தாப்பா சொன்னது போல் நல்லதொரு டிடெக்டிவ் ஏஜென்சி நாடியிருக்கலாமோ என்றொரு நினைப்பு வேறு..

குட்டிபோட்ட பூனையை போல் நடைபயின்று கொண்டிருந்தாள் தனது அறையில்..

எதையாவது எடுத்து போட்டு உடைத்தால் தேவலை என அவளது மனம் அலைப்பாய்ந்தது..

அதை அடக்க வழியில்லாமல் தனது கப்போர்டை திறந்தவள் தனது துணிகளை பிடித்து இழுத்து கீழே போடத் துவங்கினாள்..

மூன்றாவது ரேக்கிலிருக்கும் துணிகளை இழுத்தவளுக்கு நங்கென்று எதுவோ கீழே விழும் ஓசை..

திரும்பிப் பார்த்தால் இரண்டாம் ஓலைச்சுவடி இருந்த மரப்பெட்டி..

ச்சை..என்று தனது கையால் தலையில் அடித்துக்கொண்டவள் அதனை கையில் எடுத்தாள்..

பெட்டி உடைந்து துணி கிழிந்து சுவடி மட்டும் வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது..

“இதை எப்படி நான் மறந்து போனேன்..”,என்று மீண்டும் தனது தலையில் அடித்துக்கொண்டவள் இப்படியும் அப்படியும் அதனை திருப்பிப் பார்த்துக்கொண்டே பால்கனியில் உள்ள சேரில் அமர்ந்தாள் இருளில் பெய்து கொண்டிருந்த மழையை வெறித்தபடியே..

“முதலில் இந்த சுவடியில் என்ன இருக்குன்னு தெரிந்துகொள்ள வேண்டும்..”,என தீர்மானம் செய்து கொண்டவள் யார் உதவியை இதற்கு நாடுவது என யோசிக்கத் துவங்கினாள்..

அவள் சுவடியை பார்த்துக்கொண்டிருந்த நேரம் வானில் மின்னல் வெட்டி சட்டென்ன மின்சாரம் துண்டிக்கப்பட்டது..

“ப்ச்..இதுவேற..”,என சலிதவள் அப்படியே சேரில் கண்மூடி பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்..

மீண்டும் ஒரு மின்னல் வெட்டு..வானில் அல்ல தியாவில் கையிலிருந்த ஓலைச்சுவடியில்..

கைகளில் உணர்ந்த வேப்பம் காரணமாக கண்விழிதவள் ஓலைச்சுவடியிலிருந்து வெளிச்சம் வருவதைக் கண்டு திகைத்துப் போய் அதனை மேஜையில் எறிந்தாள்..

சில நிமிடங்கள் அதனை சிறு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவள் வெளிச்சம் மறையாதது கண்டு மேஜையருகே சென்று சுவடியை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

சில நொடிகளுக்குப் பிறகு சுவடியிருந்து,”அகிலனுடன் திருவாங்குடி விஷ்ணு கோயிலுக்கு செல்..”,என்ற எழுத்துக்கள் மின்னி மறைந்தது..

தான் கண்ட எழுத்துக்கள் பிரம்மையோ என திகைத்து நின்றவளை மீண்டும் ஓலைச்சுவடியில் தோன்றிய மின்னல் வெட்டு நடுங்க வைத்தது..

அதிலிருந்து வந்த ஒலி,”அகிலனுடன் திருவாங்குடி விஷ்ணு கோயிலுக்கு செல்..”,என்று இருமுறை ஒலித்து ஓய்ந்தது..

அதை கேட்டு ஓரடி பின் சென்றவள் சுவரில் இடித்து நின்றாள் உடல் நடுங்க..

அவளது பயத்தை தெளிவிப்பது போல் மெழுகுதிரியுடன் தியாவின் முன் தோன்றியது அகிலன்..

“தியா..என்னாச்சு..??ஏன் இப்படி நடுங்கற..??”

“அ..கி..லா..அந்த சு..சுவடி..”,என்பதற்கு மேல் பேச முடியாமல் மயங்கி சரிந்தாள் தியா..

றுநாள் கண் விழிதவளுக்கு தான் நேற்று கண்டது நினைவா கனவா என புரியாமல் குழம்பினாள்..

மெல்ல தனது கட்டிலை விட்டு எழுந்து நின்றவளை கண்டு பறந்து வந்த அகிலன்,”இப்போ எப்படி இருக்க தியா..??”,என்று கேட்டது..

“இ..இப்போ பரவாயில்லை அகிலா..”,என்றாள் சோர்வாக..

தனது சிறகை மூடி திறந்த அகிலன் ஒரு சின்ன கிண்ணத்தில் அவளுக்கான சூப்பை வரவழைத்து அவளது கையில் திணித்து,”இந்தா இதை குடி..கொஞ்சம் தெம்பா இருக்கும்..”,என்றது..

“தேங்க்ஸ் டா..”,என்று அதனை வாங்கி அமைதியாக பருகத்துவங்கினாள் பலவித சிந்தனையுடனேயே..

“அகிலா..நேத்து எப்படி நீ கரக்டா வந்து சேர்ந்த..??”,என்று கேட்டாள் தியா..

“நேத்து பௌர்ணமி தியா..மறந்திருச்சா உனக்கு..??அன்னைக்கு தானே உன்னை நான் எப்பொழுதும் பார்க்க வருவேன்..”,என்றது அகிலன்..

“ச்ச..இருந்த குழப்பத்தில் மறந்தே போயிட்டேன் டா..”,என்றாள் தியா பாவமாக..

லேசாக சிரித்த அகிலன் அவளிடம் முதல் நாள் தியா பார்த்துக்கொண்டிருந்த ஓலைச்சுவடியை நீட்டியது..

அதனை அகிலனிடம் இருந்து பறித்தவள்,இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துவிட்டு அவனிடம் நேற்று நடந்தவற்றை அவனிடம் ஒரு பதற்றத்துடன் விவரித்து முடித்தவள்,”எனக்கெனவோ பயமா இருக்கு டா..”,என்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.