(Reading time: 15 - 30 minutes)

“ஓ..தாத்தாகிட்டயும் பாட்டிக்கிட்டையும் இதைப் பற்றி சொன்னயாடா..??”

“சொல்லலாம்னு தான் முதலில் நினைத்தேன் சித்தப்பா..ஆனால் எதுவோ ஒன்று சொல்ல விடாமல் தடுக்குது..”,கவலையுடன்..

“இப்போதைக்கு சொல்ல வேண்டாம் டா..அண்ணா அண்ணியைப் பற்றி இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கிட்டு சொல்லலாம்..”

“நானும் அதேதான் நெனச்சேன் சித்தப்பா..நாம அவங்க கேஸை ரீ-ஒப்பன் பண்ணி சொல்லி மனு போடலாமா கோர்ட்ல..??”

“அவசரம் வேண்டாம் டா..நிதானமா செய்யலாம்..”

“ஏன் சித்தப்பா..??”

“எந்த அடிப்படையில் ஆச்சர்யாவை குற்றவாளியா நிறுத்தமுடியும் கண்ணா ஒரு ஆதாரமும் இல்லாமல்..??”

“......................”

“நீ குற்றவாளின்னு சொல்ற ஆள் சாதாரனமானவர் இல்லை..உலக பிரசித்தி பெற்ற ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர்..சும்மா போய் கேஸை ரீ-ஒப்பன் பண்ணனும்னு சொன்னா பன்னிருவாங்களா..??”

“......................”

“கண்டிப்பா ஏதாவது ஒரு தடயம் விட்டிருப்பான்டா அவன்.. கண்டிப்பா சீக்கிரம் மாட்டுவான்..”,என்றார் கோபமாக..

“நான் அவர்கிட்ட தான் ப்ராஜெக்ட் செய்யப்போறேன் சித்தாப்பா..”,என்றாள் தியா அமைதியாக..

“வாட்ட்ட்..??”,அதிர்ந்து போனார் வேணு..

“ஆமா சித்தப்பா..முடிவு பண்ணிட்டேன்..”

“உனக்கென்ன குட்டி பைத்தியமா..??”,என்று கேட்டார் கோபமாக..

“இல்லை சித்தப்பா..எனக்கு அம்மா அப்பா வேணும்..அவர்க்கிட்ட வேலை செய்தால் தான் அவங்களைப் பற்றி ஏதாவது க்ளூ கெடைக்கும்..”

“நீ ரொம்ப ரிஸ்க் எடுக்க நினைக்கிறடா..அவருக்கு உன்னைப் பற்றிய விபரங்கள் தெரிஞ்சிருசுன்னா என்ன பண்றது..??”

“அவருக்கு என்னைப் பற்றி தெரிவது நல்லது தான் சித்தப்பா..அவர் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக நினைக்கட்டும்..”

“டேய்..நாம் ஏதாவது ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் மூவ் பண்ணலாம் டா..நீ இதில் நுழைய வேண்டாம்டா..”,கெஞ்சலாக..தான் சொல்வதை அவள் கண்டிப்பாக கேட்க மாட்டாள் என அறிந்தவராக..

“இல்லை சித்தப்பா நான் பார்த்துக்கறேன்..”,என்றாள் தீர்க்கமாக..

ஏதேதோ பேசி அவளது மனதை மாற்ற நினைத்த வேணுவிற்கு அவள் ஏமாற்றத்தை மட்டுமே நல்கினாள்..

பிரணதீசனிடம் இதை பற்றி சொல்ல வேண்டாம் என மனதில் நினைத்தவர் இவளது பேச்சைக் கேட்டு அதிர்ந்து அவரிடம் இதை பற்றிக் கூரிவிடலாமென முடிவெடுத்து அவருக்கு அழைப்பு விடுத்தார்..

ஆனால் பிரணதீசன் அவரது அழைப்பை ஏற்றால் தானே..

நேராக அவரை சென்று பார்க்க ட்ரை செய்தவருக்கு தோல்வி மட்டுமே மிஞ்சியதேன்பதை சொல்லவா வேண்டும்..

அதற்குள் தியா மயா எழில் மூவரும் ஆச்சார்யாவிடம் இன்டர்ன்ஷிப் செய்ய ஆரம்பித்திருந்தனர்..

ழில் மற்றும் மயா ஆச்சார்யாவிடம் வேலை செய்வது உற்சாகத்தை ஏற்படுத்தியது..

இருவரும் தினம் தினம் புதிதாக ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள துவங்கி இருந்தனர்..

அவரிடம் வேலை செய்வது கடினாமாக இருந்தாலும் அவரிடம் வேலை செய்வதை ஏதோ ஆஸ்கர் கிடைத்ததுபோல் கொண்டாடிக் கொண்டிருந்தனர்..

இவ்விருவருக்கும் முற்றிலும் மாறாக இருந்தது தியாவின் மனநிலை..ஏனோ தானோவென்று அவரிடம் வேலை செய்தாள் தியா..

அவரைக் காணும்போதெல்லாம் தனக்கு வரும் கோபத்தை அடக்க பெரும்பாடு படத் துவங்கினாள்..

அவர் செய்யும் செயல்களை கண்கொத்திப் பாம்புபோல் கவனித்து கொண்டிருத்தாளேயொழிய வேலையை கற்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தாள்..

தியாவின் மாற்றம் சில நாட்களுக்குப் பிறகே மற்ற இருவரின் கவனத்தை ஈர்த்தது..

ப்ராஜெக்ட் முடியும் வரை அவளது தாத்தா ஊட்டிக்கு அவளை வர வேண்டாம் என சொன்னதால் அவள் டிஸ்டர்பாக இருக்கிறாள் என மனதில் முதலில் நினைத்தவர்கள் அவளது நடவடிக்கையில் மாற்றம் கண்டு அவளிடம் உனக்கு என்ன பிரச்சனை என நேரடியாக கேட்டனர்..

அந்நாள் வரை தனது பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருந்தவள் அன்று தான் சுற்றம் உணரத் துவங்கினாள்..

தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் தன்னையே கவனிப்பது போல் பிரம்மை ஏற்பட்டது..

அந்த பிரம்மை அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் இறுக செய்து அவளது இயல்பையே மாற்றியமைத்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.