(Reading time: 17 - 34 minutes)

“எங்களை எல்லாம் பார்த்தா மரியாதை கொடுக்க தோனலியோ?”

“நாம எல்லாம் யூத்க்கா.. அக்கான்னு சொன்னாலும் எனக்கு நீங்க பிரெண்ட் மாதிரி?”

இப்போது போன் முதலில் பேசியவர் கைக்கு போயிருக்க

“அப்படின்னா. நான் அங்கிள் கடேகரியா ?”

“சார்.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல.. என்னை விட்டுடுங்க சார்..”

“சரி.. சரி.. பொழச்சு போ.. “

“சார்.. அந்த பெர்மிஷன் விஷயம்..”

“எனக்கு உங்க வண்டி நம்பர், டிரைவர் டீடைல்ஸ் , அப்புறம் உங்க குரூப் மெம்பெர்ஸ் பெயர் எல்லாம் மெசேஜ் அனுப்பு.. நான் ஒருமணி நேரத்துலே கன்பார்ம் பண்றேன்..”

“ரொம்ப நன்றி.. சார்.. நீங்க டீடைல்ஸ் கேப்பீங்கன்னு எல்லாம் ரெடியா இருக்கு.. டிரைவர் விவரம் மட்டும் சேர்த்து உங்களுக்கு ஒரு ஐஞ்சு நிமிஷத்துக்குள்ளே அனுப்பறேன்..” என்றபடி வைத்தான்..

எதிர்பக்கம் என்ன பேசினார்கள் என்று தெரியாவிட்டாலும், செழியன் பேசியதை பார்த்துக் கொண்டு இருந்த மூவரும் அவனின் பாவனைகளை பார்த்து வியந்தனர்.

செந்தில் “யார்கிட்டேருந்து போன் செழியன் ?”

“இந்த பாரெஸ்ட் ரைட் விஷயமா எனக்கு தெரிஞ்ச ஆபீசர்கிட்டே பேசினேன்..”

“அது தெரியுது.. அக்கான்னு சொன்னியே.. அவ்ளோ க்ளோஸ்ன்னா எனக்கு தெரியாமல் இருக்காதேன்னு கேட்கறேன்..”

“உனக்கு தெரியாதுடா.. இவங்கள என் ஆராய்ச்சி படிப்பு விஷயமா வந்து இருந்தப்ப பழக்கம்.. ரொம்ப நல்ல டைப்.. “

“சரி.. அப்போ நாளைக்கு நாம போறதிலே எந்த பிரச்சினையும் இருக்காதே..”

“அவர் சொன்னார்ன்னா நிச்சயம் பெர்மிஷன் கிடைக்கும்.. அதனாலே எந்த சந்தேகமும் வேண்டாம்.” என்று கூறியவன், டிரைவரிடம் பேசி அவர் விவரம், லைசென்ஸ் நம்பர் வரைக்கும் வாங்கி அனுப்பினான்.

இவர்கள் இந்த வேலை முடிக்கவும், மற்றவர்கள் திரும்ப ஆரம்பிக்கவும் சரியாக இருக்கவே, எல்லோரும் பஸ் நிற்கும் இடம் சென்றனர்.

அங்கிருந்து அனைவரும் நேராக தொட்டபெட்டா சென்றனர். அத்தனை நேரம் நன்றாக வெயில் அடித்து இருக்க , இவர்கள் தொட்டபெட்டா நோக்கி ஏற ஏற மேகம் மூட ஆரம்பித்து இருந்தது..

சற்று நேரத்தில் குளிர் மெல்ல ஊடுருவ ஆரம்பிக்க, என்ன செய்ய என்று யோசித்தனர். நல்ல வேலையாக சற்று தூரத்திலே ஒரு டீ கடையை பார்த்துவிட்டு, டிரைவரே வண்டியை நிப்பட்டினார்.

அவர் இறங்குவதற்குள் , மற்ற எல்லோரும் இறங்கி சூடாக டீ ஆர்டர் செய்து இருந்தனர். அங்கேயே பஜ்ஜி, வடை என்று போட்டு கொண்டு இருக்க, அதையும் ஆர்டர் செய்து ஆளுக்கு ஒரு ப்ளேட் எடுத்துக் கொண்டனர்.

அங்கே அருகிலே அழகான வியு பாயிண்ட் இருக்க, எல்லோரும் சென்று அங்கே போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.

பஸ்ஸில் இருந்து இறங்கும்போதே கவனித்தான். மலர் முகம் எல்லாம் சற்று வெளிறி இருக்க, ஸ்வெட்டர் போட்டும் உடல் நடுங்குவது தெரிந்தது.. நல்லவேளையாக ஜீன்ஸ் அணிந்து இருந்ததால் சற்று தாக்கு பிடித்தாள். ஆனாலும் மற்றவரை காட்டிலும் கொஞ்சம் நடுக்கம் அவளிடம் தெரிந்தது.

செந்திலிடம் சொல்லி அவன் மனைவியை அவளிடம் அனுப்ப சொல்ல எண்ணியிருக்க, அதற்குள் வளர்மதியே அவளை கவனித்து விட்டு, அவள் அருகில் சென்றார்.

“என்ன ஆச்சு.. மலர்.. குளிர் ஜாஸ்தியா இருக்கா?”

“ஆமாம்கா.. என்ன செய்ய தெரியல ?”

“இரு.. உனக்கு சீக்கிரம் டீ வர ஏற்பாடு பண்றேன்.. “ என்று அவர் திரும்பும்போது , செழியனே இரண்டு கிளாஸ் டீ உடன் வந்தான்.

“வளர்மதி மேம்.. இந்தாங்க டீ. அவங்களுக்கும் குடுங்க...”

“நானே அங்கே வரத்தான் திரும்பினேன் செழியன்.. உனக்கு டீ?“

“இருக்கட்டும் கா.. நான் போய் வாங்கிகறேன். நீங்க குடிச்சுட்டு பஸ்க்கு போயிடுங்க..“

“சரி..” என்றபடி இருவரும் தேநீர் குடித்தனர். வளர்மதி அறியாதவாறு செழியன், கண்களால் மலரிடம் எப்படி இருக்கு என்று கேட்க, மலரும் கண்களை மூடி திறந்து பரவாயில்லை என்று பதில் கொடுத்தாள்.

சற்று பெரிய கூட்டம் என்பதால் கொஞ்சம் லேட் ஆகவே., கும்பலாக பிரிந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

டீ குடித்து முடித்ததும் மலர் பஸ்சிற்கு சென்று விட்டாள். சற்று நேரம் கழித்து செழியன் பஸ்சிற்கு வர, அங்கே மலர் கடைசி சீட்டில் சுருண்டு படுத்து இருந்தாள்.

மலரின் அருகில் வந்தவன், அவள் அருகில் வந்து

“மலர்” என்று அழைத்தான்.

அவள் திடுக்கிட்டு எழவும்,

“ஹேய்.. ரிலாக்ஸ்.. நாந்தான்.டா ‘ என,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.