நேற்றை விட இன்று சற்று தெளிவாக இருந்தாள் மலர். அவளையே கவனித்துக் கொண்டு இருந்தாலும், மற்றவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தான் செழியன்.
அந்த பாரெஸ்ட் ஆபீஸ் வரை மட்டுமே இவர்கள் பஸ்.. அதற்கு மேல் பிரைவேட் வண்டிகள் அனுமதி கிடையாது என்பதால், இரண்டு வேன் மற்றும் ஒரு ஜீப் எடுத்துக் கொண்டனர்.
வழக்கம்போல் இங்கும் ஜீப் ரைடில் இவர்கள் நால்வர் கூட்டணியே ஏறியது. எல்லோருக்கும் அங்கே டோக்கேன் வழங்கபட்டிருக்க, எதற்கும் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை..
இரண்டு மணி நேரம் காட்டிலும், மற்ற நேரங்கள் அங்கிருந்த அணைக்கட்டுக்கள், பழங்குடியினரின் அருங்காட்சியகம் இது எல்லாம் பார்க்க கொடுக்கப்பட்டு இருந்தது.
எல்லோரும் ஒரே நேரத்தில் பயணம் செய்தால் சற்று சங்கடம் என்பதால் , ஒவ்வொரு வண்டியும் இடைவெளி விட்டு சென்று இருந்தது. மற்ற வேன் எல்லாம் சென்று இருக்க, இவர்கள் ஜீப் மட்டும் வேறு ஒரு ஜீப் வருவதற்காக காத்து இருந்தார்கள்.
கொஞ்ச நேரம் பொறுத்த அதிகாரிகள், முன்னாடி சென்ற ஜீப் ரிப்பேர் ஆகி இருக்கும்.. அதனால் வர தாமதம் ஆனாலும் ஆகலாம் என்று கூறியவர்கள், இந்த ஜீப் டிரைவரிடம் டூல்ஸ் பாக்ஸ் மற்றும் டோ ரோப் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஒருவேளை அங்கே வைத்து சரி செய்ய முடியாமல் போனால் , வண்டியை இழுத்து வரும் ஏற்பாட்டுடனும் சென்று இருந்தனர்.
இவர்கள் செல்லும் வழி எல்லாம் உரக்க பேசாமல், சற்று மெதுவாக ஆனால் இலகுவாக , ஒருவரை ஒருவர் காலைவாரி விட்டு பேசிக் கொண்டே சென்றனர்.
செந்தில் ஜீப்பில் செல்வதால்
“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா “ என்று பாட, எங்கிருந்தோ ஒரு சற்று பெரிய மரகுச்சி வந்து அவன் மேல் விழுந்தது..
செழியன் “ அடேய்.. உன் பாட்ட இதோட நிறுத்து .. இல்லை .. அந்த ஊட்டி பாறையே உன் மேல் வந்து விழும் “ என்று கலாயிக்க,
செந்திலோ “ போடா.. உனக்கு பொறாமை.. என் குரலை கேட்டு ஏ.ஆர்..ரகுமான் 2..0 எநதிரன்லே ரஜினி சார்க்கு பாட்டு பாட கூப்பிட்டு விடுவார்ன்னு.. “
“இது.. இந்த பூமிக்கே தாங்காதுடா.. சுனாமி.. வந்து சின்னா பின்னமாயிடும் பார்த்துக்கோ “
‘போடா.. அந்த ஆண்டவனே என் பக்கம் இருக்கான்..”
“ஐயா.. ராசா... தெரியாம சொல்ல்லிடேன்.. விட்டுடு.. வலிக்குது.. அழுதுடுவேன்..”
“சரி சரி.. “
இந்த வம்புகளுக்கு நடுவில் காட்டிற்குள் வந்து இருக்க, இப்போது சுற்று முற்றும் மிருகங்கள் தெரிகிறதா என்று பார்த்தனர்.
அந்த ஜீப் டிரைவர்.. விலங்குகள் தண்ணீர் குடிக்கும் இடம், அதன் நடை பாதைகள் எல்லவாற்றையும் காண்பித்துக் கொண்டு வர, சற்று தூரத்தில் காட்டு இலாகா ஜீப் தனியாக நிற்பதை பார்த்தார்கள்.
அது வழியில் இல்லாமல் உள்ளே தள்ளி நின்று இருக்க, பச்சை வண்ணத்தில் இருந்ததால் அங்கிருந்த இலை தழைகளோடு சேர்ந்து நிற்பதே தெரியாமல் இருந்தது.
எல்லோரும் இறங்கி அங்கே செல்ல எண்ணுகையில், செழியன் பெண்கள் இருவரையும் வண்டியிலேயே இருக்க சொல்லிவிட , மற்ற மூன்று ஆண்களும் அருகே சென்றனர்.
உள்ளே செல்ல செல்ல தான் தெரிந்தது.. வண்டி ரிப்பேர் ஆகவில்லை.. எந்த விலங்குகளிடமும் மாட்டவில்லை என்று..
அங்கே உள்ளே எட்டி பார்க்க, ஜீப் டிரைவர் கட்டி போடப்பட்டு இருக்க, அங்கு நான்கு ஆண்கள் அமர்ந்து ஏதோ ஒரு மேப் வைத்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்த டிரைவரை காப்பாற்றுவதற்காக இந்த ஜீப் டிரைவர் செல்ல முயற்சிக்க, அவரை தடுத்த செழியன், சற்று நேரம் அமைதியாக யோசித்தான்.
அங்கிருந்து என்ன பேசினாலும் எதிரிகளுக்கு கேட்டு விடும் என்று எண்ணியவன், இப்போது வந்தது போல் திரும்பி சென்றாலும், அவர்கள் கவனம் இங்கே திரும்ப வாய்ப்பு இருப்பதாக தோன்றியது..
சற்று நேர யோசனைக்கு பின் தன் மொபைலில் தன்னை சத்தம் வராமல் போட்டோ எடுத்துக் கொண்டவன், அந்த ஜீப் டிரைவர் கட்டப்பட்டு இருப்பதையும். அந்த நால்வரும் குழுவையும் போட்டோ எடுத்தான்.
அவனிடம் நல்ல அட்வான்சான அப் ஒன்று இருந்தது.. அது கிட்டதட்ட டிஸ்கவரி சேனலில் ஊர் சுற்றுபவர்கள் வைத்து இருக்கும் அப் போலே. இந்த மெசேஜ் யாருக்கு அனுப்புவது என்பதுதான் பிரச்சினை. இவன் மொபைல் மட்டுமே இந்த அப் இருப்பதில், இந்த காண்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும்.
நிறைய பிரெண்ட்ஸ் , அதிகாரிகள் தெரியும் என்றாலும், யாரும் இங்கே உடனே வரக்கூடிய நிலையில் இல்லை.. அதோடு இவன் அனுப்பும் படங்களை மட்டுமே பொருத்தி பார்த்து அக்ஷன் எடுக்க வேண்டும்..
சற்று நேரம் யோசித்தவன் முகம் பிரகாசம் அடைந்து, அந்த போட்டோஸ் எல்லாம் ஒரு நம்பருக்கு மட்டும் அப் மூலம் அனுப்பி வைத்தான்.. அனுப்பி விட்டு வெறுமனே கால் மட்டும் செய்ய, அந்த பக்கம் இருந்தவர்
“ஹெலோ. திஸ். இஸ் கேப்டன் அர்ஜுன்.. “ என்ற குரல் கேட்க, செழியனோ எதுவும் பேசாமல் இருந்தான்.
தொடரும்!
{kunena_discuss:1126}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.