(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 35 - தேவி

vizhikalile kadhal vizha

ர்ஜுன்.. குரல் கேட்டும் , செழியன் எதுவும் பேசாமல் இருக்கவும், மீண்டும் போனை பார்த்த அர்ஜுன் ..

“ஹலோ.. செழியன்.. ? லைன்ல இருக்கீங்களா?” என வினவ, இப்போதும் பதில் இல்லை.

மேலும் இரண்டு மூன்று ஹலோ சொல்லியவன், எந்த பதிலும் இல்லையென்று, போன் அணைத்தான்.. ஏன் செழியன் கால் செய்துவிட்டு பேசவில்லை என்ற யோசனையோடு மீண்டும் போன் பார்க்க, ஒவ்வொரு போன்க்கும் உள்ள தனி அட்வான்ஸ் அப் .. திரையில் ஒளிர்ந்தது.

ஐபோனில் ஒவ்வொரு ஐபோன் உபயோகிப்பவர்கள் காண்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களுக்கு , ஷேர் ஆப்ஷன் கொடுத்தால், அவர்கள் இருப்பிடத்தை காண்பிப்பது போல் அர்ஜுன் உபயோகிக்கும் கைபேசியிலும் உண்டு. செழியனிடமும் அதே மாடல் கைபேசி உள்ளதால் இருவருக்கும் அந்த அப் அவ்வப்போது எதாவது செய்திகள் தொடர்ந்து அனுப்பி கொண்டிருக்கும்.

அப்படிதான் ஏதோ என்று எண்ணிக் கொண்டு அந்த அப் ஓபன் செய்ய, அதில் வரிசையாக செழியன் புகைப்படங்கள் அனுப்பி இருந்தான். அதை பார்த்த அர்ஜுன்

“ஒ.. காட்.. “ என்றபடி போட்டோக்களை மீண்டுமாக பார்த்தவன், அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினான்.

அங்கே அவன் டீம் வந்து சேருவதற்கு முன்னால் , அர்ஜுன் பற்றி உங்களுக்கு சில வரிகள்

பாயும் மழை நீயே கதையின் நாயகன் அர்ஜுன். நம் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவன் கார்கில் போரில் பங்கு கொண்டு, சாதுர்யமாக செயல்பட்டு இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்தவர்களில் முக்கியமானவன்.. அந்த வெற்றிக்கு பிறகு மேலும் சில வருடங்கள் இந்திய எல்லையில் பணியாற்றி விட்டு தற்போது ஊட்டி மில்டரி ரெஜிமேண்டிற்கு சீப்பாக இருப்பவன். அவனுடைய டீமில் ராகுல் , சுபத்ரா , நிஷா இன்னும் சில வீரர்கள் முக்கியமானவர்கள். சுறா என்றழைக்கப்படும் சுபத்ரா அவனின் மனைவி.. செழியன் இந்த அவலாஞ்சி ட்ரிப்பிறகு பெர்மிஷன் வாங்கி தரும்படி கேட்டது  இவர்களிடம் தான்.  

ராகுல், நிஷா , சுபத்ரா மூவரும் அர்ஜுனின் உத்தரவை கேட்டு அவனை சந்திக்க சென்று கொண்டுருக்கையில்

“ஹேய்.. கூஸ் .. என்னடி.. இன்னிக்கு நம்ம நரசிம்மா.. காலையிலே.. மாநாடு கூட்டி இருக்கார்... யாராவது.. தூக்கி அடிக்க போறாங்களா ?”

“அடியே.. சுறா.. ஒரு கேப்டன் மாதிரி பேசுடி.. இன்னும் சின்ன புள்ளயாவே பேசிட்டு இருக்க.. “

“சுறா... என்னிக்கும்.. சுறா தான்.. ஒரு நாளும் ப்ளூ வேல் ஆக மாட்டா..?”

“இப்போ இந்த கேவலமான டயலாக் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“அதாண்டி.. நான் எப்போவும் சுறா மாதிரிதான் இருப்பேன்.. ப்ளூ வேல் மாதிரி டெரர் ஆக மாட்டேன்.. எப்படி நம்ம பஞ்ச்?”

“தூ.. கேவலமா இருக்கு. வேகமா வா.. இல்லாட்டி கர்னல்.. அதுக்கும் சேர்த்து கிரௌண்ட ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓட சொல்லுவார்”

“ஹ.. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. “

“உனக்கு ஏன் பயம்.. ? கர்னல் உன் ஹஸ்பெண்ட் .. அவர் இங்கே உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்தா நீ வீட்டுலே போய் அவர வச்சு செய்வ.. நான் எதுக்கு நடுவில் மாட்டிக்கணும்.. ?”

“விடு.. டார்லிங்.. உனக்கு கிடைச்ச அடிமைய நீ சரியா கவனிக்கறதில்லை.. அதான் உனக்கு இவ்ளோ காண்டு..”

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்த ராகுல்

“ஆத்தாடி.. சுறா.. உனக்கு ஏன் இந்த கொலைவெறி.. உனக்கும் அவளுக்கும் பிரச்சினைனா உங்களோட முடிச்சுக்கோ.. நடுவில் டிப்ஸ் கொடுக்கறேன்னு.. எனக்கு ஏழரைய கூட்டாத ... மகராசி.. “

“ஹி ஹி.. “ என்று சிரித்தவள் “உங்களையும் மாநாட்டிற்கு வர சொல்லிருக்கரா..? அப்படின்னா ஏதோ பெரிய விஷயம் போலவே.. ?”

அதற்குள் அர்ஜுன் அறையின் அருகே நெருங்கி இருக்கவே , மூவரும் வேகமாக வந்து அவனுக்கு சல்யூட் வைத்தனர்.

அவர்கள் மூவரையும் நேராக பார்த்தவன் , தன் போனில் வந்து இருந்த போடோக்களை ப்ரொஜெக்டர் மூலமாக பெரிய திரையில் போட்டு காண்பித்தான் அர்ஜுன்..

அவன் எந்த வார்த்தைகளும் பேசவில்லை. சுபத்ராவும், நிஷாவும் போட்டோவையே பார்த்துக் கொண்டு இருக்க, ராகுலோ முதல் தடவை பார்த்த உடன் கேட்ட கேள்வி

“போட்டோ கிடைத்து எவ்ளோ நேரமாகுது..?”

“இப்போதான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்..”

“இப்போ நம்ம ரெஸ்க்யு ஆபரேஷன் எப்போ ஆரம்பிக்கணும்..? போர்ஸ் எவ்ளோ வேணும்..?”

இவர்கள் பேச ஆரம்பித்த உடன் அதை கவனித்த சுபத்ரா, நிஷா இருவரும் அர்ஜுனை பார்த்தனர்.

“வெயிட்.. அதுக்கு முன்னாடி. நமக்கு சரியான இடம் தெரியனும்..”

“அவலாஞ்சி பாரெஸ்ட் தானே.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.