இதற்குள் மலர், செல்வி இருவரும் சென்றவகளை இன்னும் காணோமே என்று அவர்களை தேடி வந்தனர். அவர்கள் சென்று இருந்த பாதையை பார்த்து இருந்ததால், அதை பின் தொடர்ந்தவர்கள், சற்று தூரத்தில் அவர்களை கண்டனர்.
அவர்களை கண்டதும் சத்தமாக அழைக்க முயல, அதற்குள் அவர்களை கண்டு விட்ட செழியன் இருவரையும் பார்த்து இன்னும் பதட்டமடைந்தான்.. மலர் குரல் உயர்த்த முயல்வதைக் கண்டவன், அவளிடம் தலையை மறுப்பாக ஆட்டி வாயில் விரலை வைத்தான்..
முதலில் புரியாமல் நின்றவள், பின் மெல்ல புரிந்தவளாக, செல்வியையும் எச்சரிக்கை செய்து மெதுவாக அடி மேல் அடி வைத்து அங்கிருந்த ஆண்கள் அருகில் சென்றனர்.
இதற்குள் இருபது நிமிடம் கடந்து இருக்க, திட்டமிட்டபடி , அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி இறங்கிய அர்ஜுன் டீம், காட்டிலாகா அதிகாரிகளின் துணையோடு அவர்களை ரவுண்டு அப் செய்து நெருங்கி இருந்தனர்.
ஒரு ஹெலிகாப்ட்டர் செல்லவும், அவசரம் அவசரமாக தங்கள் நிற்கும் இடங்களில் அப்படியே படுத்த அந்த நால்வர் கும்பல், அது தங்களை தாண்டி செல்லவும், எழுந்து நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
இப்போது அவர்கள் பேசுவது கேட்கும் தூரம் செழியன் & டீம் சென்று இருக்க, அப்போதுதான் அந்த அப் உதவி மிக சரியாக அர்ஜுனை சென்று சேரும் என்று கொஞ்சம் அருகில் சென்று இருந்தான்.
ஒருவன் “இங்கே என்னமோ தப்பா இருக்கிற மாதிரி தெரியுது?”
இரண்டாமவன் “எனக்கு அப்படி தோனலையே?”
“இல்லை இந்த.. நேரம் இங்கே ஹெலிகாப்ட்டர் போக வேண்டிய அவசியம் என்ன?”
“டேய்.. அது யாராவது மிலிடரி ட்ரைனிங்காக இந்த வழியா சென்று இருப்பாங்க..”
மற்றொருவனும் “இல்லைடா.. எனக்கும் சரியா படல.. நாம இந்த ஆபரேஷன் இன்னொரு நாளைக்கு வச்சிக்கறது தான் சேப்.”
அதற்கு இரண்டாமவன் “இல்லைடா.. இனிமேல் அது முடியாது.. இப்போ நாம இந்த டிரைவர உயிரோடு விடவும் முடியாது.. கொல்லவும் முடியாது..”
“ஏன்.. அவனை கொல்றதில் என்ன பிரச்சினை..?”
“அவன் செத்து இருப்பதை பார்ததா பாரெஸ்ட் ஆபீசர்ஸ் அலெர்ட் ஆகிடுவாங்க.. மிருகங்கள் அடிச்சா மாதிரி செட்டப் செய்தாலுமே,, டூரிஸ்ட் விசிட் ஸ்ட்ரிக்ட் பண்ணிடுவாங்க.. சோ நமக்கு இந்த மாதிரி வாய்ப்பு திரும்ப கிடைப்பது கஷ்டம்.”
“ஹ்ம்ம்.. இப்போ நம்ம மிஷன் எப்போ முடிக்கிறது..?’
“இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணலாம். இப்போ உள்ளே போயிருக்கிற ரெண்டு பஸ்சும் வெளியே போக இன்னும் அரை மணி நேரம் இருக்கு . அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாவே இருக்கலாம்..”
“அந்த பஸ் இந்த வழியா வந்தா இந்த ஜீப் நிற்கிறதை பார்க்க மாட்டங்களா?”
“இல்லை . அது முடியாது. .ஏன்னா.. இங்கே போவதற்கு ஒரு பாதை.. வருவதற்கு ஒரு பாதை.. அதனால் இந்த வழியா வர மாட்டாங்க”
“அப்போ வேற ஜீப் வர வாய்ப்பு இருக்கும் இல்லியா?”
“அதுவும் குறைவு தான்.. அங்கிருந்து வரும் ஒரு ஜீப் திரும்பி வரும்வரை, அடுத்த ஜீப் வராது.. அதோடு முதல் ஜீப் ஏன் வரவில்லை என்று இவர்கள் தேடுவதற்கு முன்னாலே நாம் நம் வேலையை முடித்து விடுவோம்..”
“இப்போ நம்ம பிளான்.. இங்கிருக்கும் பவர் ஸ்டேஷன்க்கு வெடி வைக்கணும்.. அதனால் இங்கிருந்து ஊட்டிக்கு போற மொத்த பவர் சப்ளையும் கட் ஆகிடும். இந்த வெடி சத்தத்திலே இங்கிருக்கும் பாறைகள் அதிர்வு கொடுத்து, ஒரு நிலசரிவு ஏற்படும். இதனால் இந்த ஊட்டி குறைந்த பட்சம் ஒரு மாதம் ஸ்தம்பித்து விடும்.. இந்த மீடியா, அரசாங்கம் எல்லோர் கவனமும் இங்கிருக்கும் போது இதே மாதிரி சின்ன சின்ன பிரச்சினைகளை அங்கே அங்கே நடத்திட்டு இருக்கணும். அரசாங்கம் உள்நாட்டு பிரச்சினைகளில் மூழ்கி இருக்கும்போது, எல்லையிலே தங்கள் வேலைய காட்டுவாங்க நம்ம நாட்ட சேர்ந்தவங்க.. இதுதான் பிளான்..”
“டேய்.. இப்போ யார் உன்கிட்ட இத விலாவரியா பேச சொன்னா.. யாருக்காவது கேட்டுடுச்சுன்னா வம்புதானே..”
“யாருக்கு கேட்கும்.. அப்படி கேட்டுட்டா.. அவங்களையும்.. இந்த டிரைவரோட சேர்த்து பரலோகம் அனுப்பிட வேண்டியதுதான்..”
இதை பார்த்தும், கேட்டும் கொண்டு இருந்த செழியன் மற்றும் அவனை சேர்ந்தவர்கள் திடுக்கிட்டு பார்த்தார்கள். நல்லவேளையாக அவர்கள் குரல் கேட்கும் அருகில் வந்தவுடனே தன் செல் கேமரா ஆன் செய்து எல்லாவற்றையும் ரெகார்ட் செய்தான்.
இப்போது செழியனின் கவலை எல்லாம் அர்ஜுன் எப்போ வருவார் என்பதே.. அவர்கள் எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன் வந்து விட்டால் எந்த சேதமும் இல்லாமல் தவிர்க்கலாமே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
இதை பற்றி பெண்களுக்கு தெரியாததால், இருவரும் மிரண்டு கலங்கினர். செல்வி தன் கணவனின் அருகில் சென்று அவனின் தோளில் முகம் புதைக்க, மலரோ என்ன செய்வது என்று அறியாமல் கலக்கத்தோடு செழியன் அருகில் சென்றாள்.