(Reading time: 16 - 32 minutes)

செழியனின் நினைவு முழுதும் அர்ஜுன் இருக்க, மலரின் கலக்கத்தை அவன் கவனிக்கவில்லை. மலர் சில வினாடிகள் அவன் அருகில் நின்றவள், தன்னை அறியாமல் அவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அதன் பின்னரே சுதாரித்து கொண்ட செழியன், மலரின் முகத்தில் பார்வை பதிக்க, அதில் இருந்த கலக்கத்தை  கண்டு, ஒரு கையால் வீடியோ எடுக்கும் பாணியில் போனை வைத்து இருந்தவன், மறு கையால் மலரை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அந்த நாசக்கார கும்பல் அங்கேயே அமரவும், செழியன் வீடியோ எடுப்பதை நிறுத்தி விட்டு, பெண்கள் இருவருக்கும் அவன் போனில் வந்த செய்தியை காண்பித்தான். அதை படித்த பின் இருவர் முகத்திலும் சற்று தெளிவு வந்தது. ஆனாலும் இருவரும் அவரவர் துணையை விட்டு நகரவில்லை.

இதற்கிடையே அர்ஜுன் & டீம் ஒருவழியாக அந்த கும்பல் இருக்குமிடத்தை அடைந்து விட்டனர்.

எல்லோர் கன்னேக்டிங் கருவியும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்தான். கால்களில் பூஸ்ட் அணிந்து இருந்ததால் சருகுகளில் மிதிபடும் சத்தம் கேட்கும் என்று, எல்லோரையும் மெதுவாக நடந்து வர சொல்லிருந்தான் அர்ஜுன். அதனால் திட்டமிட்ட நேரத்தை விட ஐந்து பத்து நிமிடங்கள் கூடுதலாகி விட்டது.

அவன் செழியன் நிற்குமிடம் வந்தவுடன் , முதலில் அங்கிருந்த நபர்களை பார்த்தவன், அதிருப்தியில் செழியனை பார்த்தான். அவனின் பார்வையை புரிந்து கொண்டவனாக செழியன் உதட்டை பிதுக்க, ம்ச்ச்.. என்று தன் கோபத்தை உணர்த்தினான்.

அவர்களை மறந்தவனாக, தன் ப்ளுடூத் மூலம் ஒன், டூ, த்ரீ சொல்லவும், நால்புறமும் இருந்து வீரர்கள் அவர்களை ரவுண்டு அப் செய்யவும் சரியாக இருந்தது.

அர்ஜுன்க்கு எதிர்புறமிருந்து ராகுல் தலைமை வகிக்க, இருவரும் அந்த நாசக் கும்பலை நகர்ந்தனர்.

அர்ஜுன் தன் மிடுக்கான குரலில் “ஹான்ட்ஸ் அப்..” என

அவர்கள் சுதாரித்து தங்கள் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த சயனைடு எடுக்க முயன்றனர். இதை எதிர்பார்த்து இருந்த அர்ஜுன்

“பாய்ஸ்..” என குரல் கொடுக்க

வேகமாக வந்த நால்வர் அவர்களின் கையை பின்னால் பிடித்து முறுக்கினர். அவர்களில் ஒருவன் சற்று திமிறி, சோல்ஜரை தள்ளி விட்டு ஓடினான்.

அந்த பக்கம் அருகில் இருந்த செழியன், அவனின் காலை தட்டி விட, மூர்க்கமானவன், செழியனை அந்த கடத்தப்பட்ட ஜீப் கம்பியில் மோதினான். செழியன் சுதாரித்து விலகினாலும், அதில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி அவன் கையை கிழித்து விட்டது.

இதை கண்ட மலர் பதறி செழியன் அருகில் ஓடி வர, அவளை பிடித்துக் கொண்டான் அந்த கும்பலில் இருந்தவன். அவன் கையில் ஒரு கத்தி வேறு இருந்தது. அதை மலரின் கழுத்தில் வைத்து இருந்தான்.

அனைவரும் செய்வது அறியாது நிற்க, இப்போது செழியன் உடல், உள்ளம் அனைத்தும் பதறியது. சட்டென்று அவனை கிழித்த கம்பியாலே அந்த தீவிரவாதியின் கையில் அடிக்க, அவன் கையை உதறும்போது சற்று தள்ளி விழுந்தாள் மலர்.

அவள் விழுந்த இடம், சற்று பாசி பிடித்து இருக்க, அங்கிருந்த எழுந்து விட எண்ணியவள், அதிலேயே வழுக்கி விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் உருள, அவள் கை , கால் எல்லாம் நன்றாக சிராயித்து இருந்தது.

அர்ஜுன் இவர்களின் எந்த போராட்டத்தையும் கவனிக்காதது போல் இருந்தான். அவன் மட்டுமல்ல அவர்கள் டீமே.. அவ்வாறு தான் இருந்தது.

மலரை பிடித்து இருந்தவன் அடி வாங்கிய வலியில் இருக்கவும், அதை சாதகமாக்கிய அர்ஜுன் , அந்த தீவிரவாதியை உதைத்து கையில் விலங்கு மாட்டினான்.

எல்லோரையும் பிடித்து ஜீப்பில் ஏற்றியவன், காட்டிலாக அதிகாரிகளிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு வர, அங்கே சுபத்ரா மலருக்கு முதல் உதவி செய்து கொண்டு இருந்தாள்.

அப்போது செழியன் அருகில் சென்ற அர்ஜுன் “அறிவிருக்கா உனக்கு? நான் ஏன் உனக்கு மெசேஜ் அனுப்பினேன்.. ? இப்படி யாரும் மாட்டிக்க கூடாதுன்னு தானே.. நீ என்னடா என்றால் ஒரு கூட்டமே கூடிட்கிட்டு இருக்க. ?”

செந்தில் அவசரமாக “ சாரி.. சார்.. அவன் எங்களை திருப்பி போகத்தான் செழியன் சொன்னான்.. ? நாங்கள் தான் கேட்கவில்லை.. சாரி.. எங்களால்தான் உங்களுக்கு கஷ்டம் ஆகிடுச்சு..”

“முதலில் ஒன்னு புரிஞ்சிக்கோங்க.. இந்த மாதிரி கும்பல பிடிக்கிறதுதான் எங்க வேலை. நாங்க அதில் கவனம் செலுத்தனும்னா மத்தவங்க இதில் தலையிடாமே இருந்தாலே எங்க வேலை சுலபமா இருக்கும்.. இப்போ தேவை இல்லாம ரெண்டு பேருக்கு காயம்.. நாங்க பழகினவங்க.. எங்க வேலைய சரியா செய்வோம்.. உங்களாலே அது முடியாது..”

அதற்குள் சற்று தெளிந்து இருந்த மலர் “சாரி சார்.. நீங்க சொன்ன மாதிரி எங்களாலே உங்க வேலைக்கு இடைஞ்சல்தான் வந்திருக்கும்.. நீங்க சொன்ன யோசனையே இனிமே பின்பற்றுகிறோம்” என்று கெஞ்சுதலாக சொல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.