Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகா

Aathibanin kaadhali

நாளை திருவிழா என்பதால் சாயங்காலமே ஊரில் உற்சாகம் பிறந்துவிட்டது.

ஊரில் ஆங்காங்கு இருந்த கம்பத்திலும் மரத்திலும் மைக்செட் போடப்பட்டிருந்தது.

தெருவிற்கு தெரு சீரியல் பல்புகளால் மாலை மாலையாக தெருவின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வீட்டையும் வெள்ளை அடித்து வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது.

மக்களும் திருவிழாவுக்காக பலவேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

திருவிழாவுக்காகவே அந்த ஊரில் வாணவேடிக்கை நடத்தப்படும் அதற்கு தேவையான பட்டாசுகள் விற்பனையகத்தில் ஆண்களின் கூட்டம் மொய்த்திருந்தது.

பெண்கள் தங்கள் வீடுகளில் கலர் கோலமிட பல வண்ண மாவுகள் விற்கும் கடைகளில் குழுமியிருந்தார்கள்.

டைலர் கடைகளில் சில பெண்கள் சண்டை போட்டுக்கொண்டும் அவரிடமிருந்து துணிகளை பெற்று கொண்டும் இருந்தனர்.

இரவு பொழுது வந்தும் ஊர் அடங்காமல் ஒரே அமர்க்களமாக இருந்தது.

பெரிய பெரிய பேனர்களில் அம்மன் உருவங்கள் அச்சிடப்பட்டு ஒவ்வொரு தெருவிலும் நடப்பட்டிருந்தது.

கோவில் இருந்த தெருவில் பலவகையான கடைகள் போடப்பட்டு எல்லா கடையிலும் வீட்டுக்கு தேவையான பொருட்களும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் போடப்பட்டிருந்தது.

கோவிலில் மட்டும் மக்கள் விழித்து கொண்டு கோயிலை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

இந்த ஏற்பாடுகள் முழுவதும் திலீபனும் பரதனும் செய்து கொண்டிருந்தனர்.

அவர்கள் பெரிய தனக்காரர்கள் என்பதால் திருவிழா செலவை அவர்களே எடுத்துக்கொண்டனர்.

ஆளாளுக்கு ஒவ்வொரு வேலைகளை செய்து முடிக்கவே விடிந்துவிட்டது.

ஆதிபன் தன் பங்கிற்கு கோவிலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சப்ளை செய்து கொண்டிருந்தான்.

அவனுடைய நிலத்திலிருந்து காய்கறிகள் தேங்காய் அரிசி பலவிதப் பூக்கள் வாழை மரங்கள், வாழை இலைகள் என தன்னால் என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தான்.

தாத்தா கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் கோதானம் செய்வதால் அதற்காக அவன் பக்கத்து ஊருக்கு சென்று பசு கன்னுக்குட்டியோடு குட்டியாணை வண்டியில் ஏற்றிக்கொண்டு டிரைவரின் சீட்டின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு வந்தான்.

வரும் வழியில் வெண்பாவின் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த ஆதிராவை பார்த்துவிட்டு வண்டியை நிறுத்தி வெளியே இறங்கி வந்து ஆதிராவை பார்த்துக் கொண்டே

”மணி 9 ஆகுது வெளிய உட்கார்ந்து என்ன பண்றா இவ” என அவன் நினைத்துக்கொண்டான்.

அவளோ ஊர் முழுக்க திடீரென நடந்த புது புது ஏற்பாடுகளை கண்டு அதை பற்றி பேசிக்கொண்டிருந்தாள் வெண்பாவிடம்

ஆதிபன் வெண்பாவை பார்த்து

”வெண்பா மணி என்னாகுது காலையில திருவிழாவுக்கு போக வேணாமா போய் படுத்து தூங்கு” என கூறவும் அவள் எழுந்து கொள்ள

ஆதிரா வீம்புக்காக அவனிடத்தில் வந்தாள்

”ஆதிபன் அத்தான் இதுஎன்ன”

”ஏன் உனக்கு கண்ணு தெரியல பசுமாடு”

”அது தெரியுது அத்தான் இதை எதுக்கு நீங்க பிடிச்சிகிட்டு வர்றீங்க”

”நாளைக்கு தாத்தா கோவிலுக்கு கோதானம் செய்வாரு அதுக்காக கொண்டுவந்திருக்கேன்”

”ஓ அப்படியா நீங்க என்ன தானம் செய்யலாம்னு இருக்கீங்க அத்தான்”

”என்னால முடிஞ்சத என் நிலத்தில விளையறத தானம் செய்றேன்”

”அப்ப நானும் தானம் பண்ணலாமா அத்தான்”

”நீயா உன்கிட்ட என்ன இருக்கு”

”பணம் இருக்கு அத்தான்”

”சரி பண்ணு கடவுளுக்கு செய்றத விட ஏழைகளுக்கு செய் புண்ணியமாவது கிடைக்கும்”

”புண்ணியம் வேணாம் அத்தான் அதுக்கு பதிலா நான் மனசுல நினைக்கறது வேணும்” என அவள் சொல்லவும்

”என்னது”

”உங்களுக்கே தெரியும் அத்தான்”

”இல்லை எனக்கு தெரியல”

”போங்கத்தான் உங்களுக்கு ரொம்ப குசும்புதான்” என சொல்லிவிட்டு வீட்டிற்குள் ஓடிவிட்டாள்

அவள் ஓடுவதை பார்த்த ஆதிபன் வெண்பாவை முறைக்க அவளும் உள்ளே ஓடிவிட்டாள்.

அவனும் தலையில் அடித்துக்கொண்டு கோவிலுக்கு சென்றான். அங்கே பரதன்

”என்ன அண்ணா எவ்ளோ நேரம் எப்ப வேலைய முடிக்கறது எப்ப தூங்கறது எப்ப எழறது எப்ப திருவிழாவை பார்க்கறது”

”டேய் இருடா ஏண்டா இத்தனை கேள்வி கேட்கற”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகாShanthi S 2018-01-12 07:49
nice update sasireka.

Athiban marriagela sikkal vanthathal aathira avarai kalyanam seiya vendiyathagi vitatha?

But first episodela avanga happy aga illaiye. one yearla enna nadaka poguthu?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகாmadhumathi9 2018-01-12 05:10
Super epi waiting to read more. :clap: (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகாsaju 2018-01-11 20:20
superrrrrrrrrr
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகாAdharvJo 2018-01-11 19:35
Hot n spicy argument ma'am :cool: oru vazhiya boogambamb varama escape agitanga :dance: cheeky Aadhira :hatsoff: thiruvizha scene nala irundhadhu ma'am adha indha uncles vandhu spoil panitingale facepalm heroada pulambals interesting :D idhu ena pudhu kadhai ponnu love solluvangalam ivaru sollamataram :grin: panchayatha kutungaya :P BTW ippo heron ena age indha 15yrs idikidhey :Q: :thnkx: for this super cool epi. Happy festival ma'am.

Yeah who is DAT murachifying guy...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 10 - சசிரேகாசசிரேகா 2018-01-11 20:33
நன்றி
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top