(Reading time: 16 - 32 minutes)

“இந்த போட்டோ வந்த பின் எனக்கு ஒரு கால் வந்தது.. அட்டென்ட் செய்தேன்.. ஆனால் யாரும் பேசவில்லை.. சோ அங்கே இருப்பவர்கள் சேப்டி முக்கியம். அவர்களை ரவுண்டு அப் செய்வது ரகசியமாக இருக்க வேண்டும்.. இப்போ சரியான இடம் தெரியாமல் நாம் சுற்றினால் டைம் வீணாவதோடு , அந்த கும்பல் அலெர்ட் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.. தெளிவான பிளான் வேண்டும்.. அதுவும் உடனடியாக..“

இப்போது அந்த படத்தை இன்னும் சற்று ஊன்றி கவனித்தனர் அந்த நால்வர் குழு.. இரண்டு நிமிடங்கள் சென்று இருக்கையில் சுபத்ரா அர்ஜுனிடம்

“சார்.. நான் ஒரு பத்து நிமிஷம் சிஸ்டம் உபயோகித்து கொள்ளவா ?” என்று வினவ, அவளை நேராக பார்த்தவன்

“கோ அஹெட் ..” என்றான்.

அந்த போட்டோவை டவுன்லோட் செய்தவள் , சற்று நேரம் மேப் வைத்து ஏதோ ஆராய்ந்தாள். எல்லாம் முடித்துவிட்டு

“சார்.. இந்த இடம் .. பாரெஸ்ட் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட அரைமணி நேரம் தூரத்தில் இருக்கும்.. இவர்கள் நிற்கும் விதம், அந்த கடத்தப்பட்ட ஜீப் இதை எல்லாம் பார்த்தால், இது டூரிஸ்ட்களை அழைத்து செல்லும் பாதையில் இருந்து கொஞ்சம் தான் தள்ளி இருக்ககூடும்.. ரொம்ப உள்ளே சென்று இருந்தால் இவர்கள் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பு இல்லை.. இதன் அருகே உள்ள லேன்ட் மார்க் எது என்று பாரெஸ்ட் ஆபீசரிடம் கேட்டால் நாம் நெருங்குவதற்கு எளிதாக இருக்கும்..”

என்று கடகடவென்று சொல்லி முடிக்கவும், அவளை பாராட்டும் விதமாக பார்த்துவிட்டு

“எஸ்.. ஷி இஸ் ரைட்.. என்னுடைய பிளானும் கிட்டத்தட்ட இதுதான்.. ஆனால் இந்த ஆபரேஷனிற்கு காட்டிலாகா துரையின் உதவி தேவை. நிஷா.. உடனடியாக அவர்களை கான்பாரன்ஸ் காலில் தொடர்பு கொள். & ராகுல் நம்முடைய ஆபரேஷன் என்னவென்றால் . பாரெஸ்ட் அதிகாரிகளோடு, ஒரு இருபது வீரர்கள் ஹெலிகாப்டரில் செல்லவேண்டும். குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன் நாம் பாராசூட் மூலம் குதித்து ஸ்பாட்டை நெருங்க வேண்டும். அதன் பின் மிஷன் ஸ்டார்ட் செய்ய வேண்டும்..”

“எஸ்.. அப்படின்னா நான் இப்போதே போய் டிஸ்சாஸ்டார் ரிலீப் டீமில் உள்ளவர்களில் பெஸ்ட்டை தயார் செய்கிறேன்.. நாங்கள் எப்போது தயாராக இருக்க வேண்டும்?”

“நிஷா .. நம்ம எல்லோர் தொடர்பு கருவிகளும் சரியா இருக்கானு பார்த்து, அதை செயல்படுத்தவேண்டிய பொறுப்பு உங்களுக்கு..”  என்றவன்

“சுபி..” என்று ஆரம்பித்தவன் தன்னை சற்று சமாளித்துக் கொண்டு “சுபத்ரா.. நீங்க ராகுல் கூட சேர்ந்து அந்த ரிலீப் டீம் ரெடி பண்ணுங்க... இன்னும் அரை மணி நேரத்தில் நாம் கிளம்ப வேண்டும்..” என்று உத்தரவிட்டான்.

“ராகுல்.. நீ ஹெலிகாப்ட்டர் பக்கம் சென்று , அதில் பாராசூட், நமக்கு வெபன்ஸ் எல்லாம் தயார் செய்து வை..” என்று எல்லோரையும் அனுப்பினான்.

“நிஷா.. பாரெஸ்ட் ஆபீசர்ஸ் கான் கால் ரெடியா?” என

“எஸ்.. சார்.. “என்று தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவும்

அவர்களிடம் நிலைமையை விளக்கினான் அர்ஜுன்.. அவர்களும் குறுக்கிடாமல் கேட்டுவிட்டு

“சார்.. இது .. காட்டுக்குள்ளே நடக்குற விஷயம்.. இதை எங்க டிபார்ட்மென்ட் தான் பார்த்துக்கணும்.. எங்களாலே முடியலை என்றால் தான் நாங்க உங்க ஹெல்ப் கேட்கணும் அதான் ப்ரோசீஜர்.. இப்போ நீங்க நேரடியா இறங்கினா நாங்க எப்படி எங்க மேலதிகாரிகளுக்கு பதில் சொல்றது.?”

“எஸ்.. உங்க நிலைமை புரியுது.. ஆனால்.. தகவல் தெரிஞ்ச பின் நாங்க சும்மா இருக்க முடியாது.. நம்மகிட்டே டைம் ரொம்ப குறைவு.. என்னோட கணிப்பு என்னனா அவங்க ஆட்களை வச்சு மிரட்ட போறதா தோணலை.. வேற ஏதோ மோடிவ் இருக்கு. இப்போ நாம மத்தவங்களுக்காக யோசிச்சு, மிக பெரிய சிக்கலுக்கு இடம் கொடுக்க கூடாது. “

“புரியுது சார்.. இருந்தாலும் இதில் நம்ம வொர்க் சேர்ந்து செய்வதற்கு பெர்மிஷன் வாங்கினியான்னு கேட்பாங்களே..”

“பெரிசா ஒன்னும் பிரச்சினை வராது.. ரெண்டு விசாரணை வைப்பாங்க.. அதுக்கு பதில் சொல்லிட்டா விட்டுட்டு போயிடுவாங்க.. இப்போவும் நாங்க தனியா செய்யபோறதில்லை.. உங்க கிட்டேர்ந்து குறைந்த பட்சம் நான்கு பேராவது வேணும்.. அப்போதான் சரியான இடத்திற்கு செல்ல முடியும்.. “

அவனின் பேச்சில் தெளிந்த பாரெஸ்ட் ஆபீசர், ரேஞ்சர் இருவரும் அர்ஜுன் கேட்டபடி நான்கு பேரை அனுப்பியவர்கள், இவர்களும் ஜீப்பில் கிளம்பி அந்த இடம் நோக்கி சென்றனர்.

செழியன் பிளான் செய்தபடி அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் டீம் ஹெலிகாப்ட்டர் ஏறி இருக்க, அதற்கு முன் தாங்கள் இன்னும் இருபது நிமிஷத்தில் வருவதாகவும், செழியன் மட்டும் அங்கே இருக்க வேண்டும் என்றும் , மற்றவர்களை மெதுவாக சென்று விடுமாறும் மெசேஜ் எழுதி அதை போட்டோ எடுத்து அதே அப் மூலம் அனுப்பி வைத்தான்.

ர்ஜுன் மெசேஜ் பார்த்த செழியன் , அதை செந்திலிடமும், இவர்கள் வந்த ஜீப் டிரைவரிடமும் காண்பிக்க, இருவரும் தலையாட்டி செல்ல மறுத்தனர். இவர்களின் பேச்சுக் குரல் அந்த நால்வருக்கும் கேட்க கூடாது என்று எண்ணி சைகை மொழியில் பேசிக் கொண்டு இருந்தார்கள். செழியன் எவ்ளோ சொல்லியும் கேட்காதவர்கள், அங்கேயே இருக்க, செழியன் கையை பிசைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.