(Reading time: 16 - 31 minutes)

தனக்குள் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு. நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளுடன் அவன் முகம் பார்த்தாள் அனுராதா. ஏதோ ஒன்று சரியில்லை என அவனுக்கும் உறைக்க

‘என்னசும்மா?’  அவனது பதற்றமான குரலில் சற்றே சிரமபட்டு புன்னகைத்தாள் அவள்.

இப்போதே, இந்த நொடியே அவனுடன் வாழ்ந்து முடித்துவிட வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. கால்கள் பூமியை விட்டு நழுவுவது போல் இருக்க இப்போது அவன் மீதான காதல் இன்னமும் நூறு மடங்கானது போலிருந்தது அவளுக்கு.

அவனது சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு ‘லவ்......’ ஏதோ சொல்ல முயன்றவள் அவனோடு சேர்ந்து அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டு அப்படியே அவனது தோள்களில் மயங்கி இருந்தாள்.

தே நேரத்தில்

அங்கே ரகுவின் வீட்டில் கட்டிலில் உறங்கிப்போயிருந்தான் ரகு. அவனுருகில் வந்து அமர்ந்தாள் ஸ்வேதா. இரண்டு மூன்று நாட்களாகவே சீக்கிரம் உறங்கி விடுகிறான் அவன். காலை எழுவதும் கொஞ்சம் தாமதமாகவே.

எப்போதும் இரவு வெகு நேரம் கைப்பேசியையோ, கணினியையோ துழாவிக்கொண்டிருப்பானே இப்போதெல்லாம் என்னாவாயிற்று இவனுக்கு? கேள்வி எழுந்தாலும் அதற்கான பதிலும் உடனடியாக கிடைக்கத்தான் செய்தது அவளுக்கு.

கிரிக்கெட்டை விடுவது அவனுக்கு மிகப்பெரிய வலிதான். அந்த வலி தரும் அழுத்தத்திலிருந்து தப்பிக்கத்தான் தன்னை தூக்கத்துக்குள் தொலைத்துக்கொள்கிறான் அவன்.

‘அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இந்த வலி சில நாட்களில் மறைந்து போகும்தான். வேண்டாம். இந்த பாழாய் போன கிரிக்கெட் மட்டும் வேண்டாம்!’ சொல்லிகொண்டாள் தனக்குள்ளே.

ஒரு முறை அவனை தீர்கமாக பார்த்துவிட்டு அவனது அலமாரியின் அருகில் சென்று எதையோ துழாவ ஆரம்பித்தாள் ஸ்வேதா. நிமிடங்கள் கடக்க கட்டிலில் கண்மூடி கிடந்தவனின் குரல் எழுந்தது.

‘வீட்டிலே ஒரு கிரிக்கெட் பால் இல்லை. எல்லாத்தையும் சின்ன பசங்களுக்கு  கொடுத்திட்டேன்’ சொன்னான் அவன். அவன் குரலில் அவள் விக்கித்து போய் திரும்ப புன்னகையுடன் அவளை பார்த்தபடியே படுத்திருந்தான் ரகு.

அவசரமாக அலமாரியை மூடிவிட்டு அவள் திரும்ப அவளை வாவென கைநீட்டி அழைத்தான் அவன். மெல்ல நடந்து அவனருகில் வந்து அமர்ந்தாள் ஸ்வேதா. மெல்ல விழிகளை நிமிர்த்தி அவனை பார்த்து நன்றியுடன் புன்னகைத்தாள் ஸ்வேதா.

அன்று இவன் வீட்டுக்கு வந்து திரும்பும் போது ஹரிஷ் சொன்ன சில வார்த்தைகளை இவன் கேட்டதின் பலன் இவை எல்லாம். அருமையான நண்பன் அவன்.

‘தேங்க்ஸ் ஹரிஷ்..’ மனதிற்குள் அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டபடியே எழுந்து அமர்ந்தான் .ரகு.

அருகில் அமர்ந்தவளின் முகம் நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்துக்கேட்டான் அவன்

‘நான் கொஞ்ச நேரம் உன் கையை பிடிச்சுக்கலாமா? மெதுவாக அவனை நோக்கி நீண்டது அவள் கரம். அதை எடுத்து தனது கன்னத்தின் மீது வைத்துக்கொண்டான் ரகு.

‘நான் உன்கிட்டே ஒண்ணு கேட்கலாமா?’

‘ம்...’ விழிகள் நிமிராமல் வந்தது பதில்.

‘உனக்கு என்கிட்டே ரொம்ப பிடிச்சது எது?’

‘ம்?’ என்ன சொல்வதென தெரியாமல் அவள் திகைக்க

‘ரகுங்கிற பேர் கரெக்டா?’ நிறையவே திடுக்கிடல் அவளிடம்

‘நான் கிரிக்கெட்டர்னு தெரிஞ்சும் நீ என்னை அதனாலேதான் கல்யாணம் பண்ணிகிட்டே கரெக்டா? அவன் கேட்க அவள் விழிகள் நிரம்பி இருந்தன.

தே நேரத்தில்

அங்கே அந்தமானில் கண் விழித்திருந்தாள் அனுராதா. நிறையவே குழப்பம், தலை சுற்றல், தலை வலி என எல்லாம் சேர்ந்து அழுத்த விழிகளை சுழற்றினாள் எங்கிருக்கிறோம் என்பதை அறிய.

‘அனும்மா... இப்போ எப்படிடா இருக்கு?’’ அவன் குரல் அவளை வருடியது. ‘டாக்டர் வர சொல்லி இருக்கேன் இப்போ வந்திடுவாங்க’

அவள் தலை அவன் மடியில் இருக்க கட்டிலில் படுத்திருந்தாள் அவள். அவன் தங்கி இருக்கும் அறை போலும் அது. நடந்தவை ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மெல்ல எழுந்து அமர்ந்தாள் அனுராதா.

‘என்னாச்சு அனும்மா திடீர்னு மயங்கிட்டே நீ?’ என்றான் அவன் ‘பயமுறுத்திட்டியேடா.’

‘அது அன்னைக்கும் அப்படித்தான் ஆச்சு ஹரிஷ்’

‘எப்போமா?’

‘அன்னைக்கு நீ ஃபைனல்ஸ்லே ஹாட்ரிக் எடுக்க போனப்போ ரகு கேட்ச் பண்ணது மட்டும் தெரியும் எனக்கு. அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு கொஞ்ச நேரம் தெரியாது’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.