(Reading time: 18 - 35 minutes)

மெல்லிய சத்ததில் காரில் ஒலித்த பாடலை ரசித்துக் கொண்டே நெரிசலான சாலையில் லாவகமாக சென்று கொண்டிருந்தாள் ருத்ரா. சாலையில் கவனம் செலுத்தியவள் தனது செல்ஃபோன் சிணுங்கவும் ஸ்பீகரை ஆன் செய்தாள்.

“ஹாய்..டாக்டர் ருத்ரா ஹியர்”

“சுத்தம்..நீ டாக்டருன்னு சொன்னா யாரு நம்ம மாட்டுறாங்களா? அதான் இப்படி டாக்டர் ருத்ரானு ஏளம் போடுறியா?” என விறுவிறுப்பு நிறைந்த குரலொன்று கேட்கவும், அந்த குரலுக்கு சொந்தக்காரன் கார்முகிலன்தான் என நொடிபொழுதில் புரிந்து கொண்டாள் ருத்ரா.

“டேய் கார்கி.. ஒரு நிமிஷம் இரு, குடை வெச்சுருக்கேனானு பார்க்குறேன்.. நீயெல்லாம் எனக்கு ஃபோன் பண்ணுறியே.. பெரிய விஷயம்தான்..மழை வந்து நான் நனைஞ்சிட போறேன் ”என்றாள் அவள். நக்கலையும் தாண்டி அதில் ஒரு கசப்புணர்வு கலந்திருப்பதை உணர்ந்தான் கார்முகிலன். கார்முகிலனின் மௌனமே அவனது எண்ணத்தை எடுத்துக்காட்டிட ருத்ராவே இயல்பாக பேசத் தொடங்கினாள்.

“சொல்லுடா என்ன விஷயம்?”

“நீ இப்ப உடனே வீட்டுக்கு வரனும் ருத்ரா..”

“உங்க வீட்டுக்கா?”

“ஆமா..”

“சுயோதசேனாவுக்கா?”

“ருத்ரா!” பொறுமையிழந்த குரலில் அவன் பெயரை அழைக்கவும்,

“இந்த விஷயம் உன் ப்ரண்டுக்கு தெரியுமா?” என வினவினாள்.

“எல்லாருக்கும் தெரியும்..ஆக்சுவலி ஒரு பிரச்சனை..”என்று நடந்ததை சொல்லி முடித்தான் கார்கி.

“ஓ காட்.. சரி நான் உடனே வரேன்..”

“ஹேய் அந்த பொண்ணுக்கு மாத்து துணியும் வாங்கிட்டு வா.. உன்ன மாதிரி தான் இருக்கா பார்க்குறது.. சோ உனக்கு வாங்குற மாதிரி வாங்கிட்டு வா..”

“ம்ம் சரி..”

“எதுக்கோ ரெண்டு மூணு ட்ரெஸ் ஏ வாங்கிட்டு வா..” என்று கார்முகிலன் சொல்லிட,

“நீங்க இதல்லாம் பண்ணனும் அவசியமே இல்லையே கார்கி.. ஹாஸ்பிட்டலுக்கு இல்லன்னா ஃபோலிஸ்கு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல?”

“இப்போ ஒரு உயிரை காப்பாத்தனும்..அது மட்டும்தான் எங்க நோக்கம்.. மிச்சத்தை அப்பறம் யோசிக்கிறோம்..” . ஒவ்வொரு பதிலையும் அவன் பன்மையில் சொன்ன விதத்தில் ருத்ராவிற்கு ஏக்கமாக இருந்தது. அந்த மூவரோடு இணைந்து நால்வராக அவளுக்கு ஆசைத்தான். ஆனால் கதிரவன் மனம் வைக்க வேண்டுமே? மைன்ட் வாய்சில் கொஞ்சம் புலம்பி தீர்த்தவளை கடமையுணர்வு ஒவர்டேக் செய்திட

“சீக்கிரம் வந்திடுறேன்” என்று ஃபோனை வைத்தாள். கதிரும் பிரபாவும் ஆளுக்கொரு ஹேர் ட்ரையரை கொண்டு அவளது கூந்தலையும் புடவையையும் உலர்த்தி கொண்டிருக்க கார்கியும் அவர்களோடு இணைந்து கொண்டான். மருந்திற்கும் ருத்ராவைப் பற்றி பேச்செடுக்கவில்லை கதிரவன். தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்தே ஆகவேண்டிய சூழ்நிலை அவனே அவனை நிறுத்திக் கொண்டான்.

ன்னும் பயப்பட வேணாம்.. இன்னும் சில மணி நேரத்துல கண் முழிச்சிருவாங்க.. இந்த லேப்லட் எல்லாம் வாங்கிடுங்க. இப்போதைக்கு ஃபீவர் இல்ல.. பட் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு..” என்று சொன்னதுமே ஆட்சேபிக்கும்படி தலையாட்டினான் பிரபஞ்சன்.

“நோ வே.. கார்கி, கதிர் ரெண்டு பேருக்குமே சொல்லுறேன் ..அந்த பொண்ணு கண்ணு முழிச்சதுமே அவளோட நகை புடவை எதுவும் மிஸ் ஆகாம திருப்பி தந்து அனுப்பி வைக்கனும். தேவைப்பட்டா நாமளே ட்ராப் பண்ணுவோம்.. மத்தபடி அவளை அவளே பார்த்துக்கட்டும்..” என்றான் கறாராக. அவர்கள் இதுவரை செய்ததேபெரிதுதான் என்று ருத்ராவுக்குமே தோன்றிட அவள் எதுவும் மறுத்து பேசவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் மீண்டும் அந்த பெண்ணைப் பார்த்தாள்.

கவலை என்பதை அறியாத சாந்தசொரூபமான முகம்.

“ஹ்ம்ம் இந்த பொண்ணு லக்கிதான்” என்று கதிரை பார்த்து முறைத்தபடி சொன்னாள் ருத்ரா.

“ரொம்ப தேங்க்ஸ் ருத்ரா..”

“இட்ஸ் ஓகே பிரபா”

“இல்ல, டாக்டரா இருந்து நீ பண்ணதுக்காக மட்டுமில்ல.. அந்த பொண்ணுக்கு ட்ரேஸ் மாத்திவிட்டு, யூ ஆர் க்ரேட் ..அதுமட்டுமில்ல..சில வாரம் முன்னாடி நீ வரன்னு சொன்னப்போ வேணாம்னு சொல்லி உன்ன ஹர்ட் பண்ணோம்.. ரொம்ப சுயநலமாத்தான் இப்போ கூப்பிட்டோம்..ஆனாலும்,நீ வந்து இவ்வளவு பண்ணிருக்க” என்று பிரபஞ்சன் சொன்ன விதத்தில் கதிரவனுக்கு அவள் முகத்தை பார்க்கவேண்டுமென தோன்றியது.

“ஒருத்தன் பேசாமல் கொல்லுறான்.. ஒருத்தன் பேசியே கொல்லுறான்..நீ செண்டிமெண்டா பேசி கொல்லுற.. இப்படியே பேசி வெறும் கையோடு அனுப்பி வைக்காம என் ஃபீசை கொடுங்கடா” என்றாள் ருத்ரா. கார்கியும் பிரபாவும் விழிகளாலேயே பேசிகண்ணடித்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.