(Reading time: 18 - 35 minutes)

“கார்கி நீ கொடுத்துடு டா”என்று பிரபா கண் சிமிட்ட,

“டேய் நான் இனிமேதான் காசை ட்ராவ் பண்ணனும்..”

“என் ப்ர்சை நான் இனிமேதான் தேடனும்..சரி நீ ருத்ராவுக்கு காஃபி கொடுத்து பேசிட்டு இரு” என்று பிரபா ப்ர்சை தேட செல்பவன் போல நடிக்க,

“நான் கொடுக்குறேன்” என்று பர்சை எடுத்தான் கதிரவன். பணத்தை அவன் நீட்டும்போது மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அவன் முகத்தை பார்த்தாள் ருத்ரா. கதிரோ, எதையும் வெளிக்கட்டாமல் ,”தேங்க்ஸ்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட கார்கி, ருத்ராவின் தலையில் லேசாக தட்டிவிட்டு “ ஓய், உனக்கு ஃபீஸ் எல்லாம் தேவையா?” என்றான்.

“போடா ..இது என் ஆளு கொடுத்தது” என முகம்மிளர அவள் சொல்ல,

“வேணாம் ருத்ரா.. உன் மனச மாத்திக்க முயற்சி பண்ணு” என்றான் கார்கி. அவ்வளவு நேரமாக விளையாட்டாய் வம்பளந்தவன் கொஞ்சமும் சிரிப்பில்லாத குரலில் சற்று அழுத்தமாகவே அதை சொல்ல,ருத்ராவிற்கு என்னவோ போலாகிவிட்டது.

“டேய் ஏன்டா நீ வேற? ருத்ரா ரொம்ப தேங்க்ஸ்மா..நீ கிளம்பு”என அவளை அனுப்பி வைத்தான் பிரபா.

“ஏன்டா மச்சான் அவளை அழ வைக்கிற? அவ சின்சியரா இருக்கானு உனக்கு தெரியலயா?”

“நம்ம கதிரோட பிரச்சனை உனக்கு தெரியாதா?”

“அவனை அப்படியே விட முடியாது..”

“அதுக்கு அவனும் ஒத்துழைக்கனும் பிரபா.. அவனுக்காக நாம கல்யாணமே பண்ணிக்க போறதில்லனு நிறைய தடவை சொல்லி இருக்கோம்.. ஒரு தடவையாச்சும் இறங்கி வந்திருக்கானா அவன்?” என்று கார்முகிலன் வினவ பிரபஞ்சனுமே யோசனையுடன் மௌனமாகினான்.

“சரி விடுடா பார்த்துக்கலாம்” என கார்முகிலன் தனது அடையாள புன்னகையொன்றை சிந்திட பிரபாவுமே அவனை பின் தொடர்ந்தான்.

கதிரவன், அந்த பெண்ணின் அருகிலேயே அமர்ந்திருக்க, பிரபஞ்சனும் கார்முகிலனும் சமையல் வேலையில் இறங்கி இருந்தனர்.

நானா தான வீணா போனா சரியே இல்லையே

ஹேய்.. நா நா காணா போனா வழியே இல்லையேஅனிருத்தின் குரலில் பாடல் ஒலிக்க பிரபாவும் கார்கியும் இரட்டிப்பு கலகலப்போடு அந்த பாடலில் இலயித்துக் கொண்டே சமைத்தனர்.

நண்பர்களுடன் எப்போதும் போல இணைந்து கொள்ள துடித்த கதிர்,

“இந்த பொண்ணு கண்ணை முழிச்சா தேவலயே” என்று முணுமுணுத்தான்.

ஒரு பட்டாம்பூச்சிய விட்டா பாருடா எட்டாத தூரத்துல” என இருவரின் குரலும் சேர்ந்தே ஒலிக்க, இவள் இப்போதைக்கு எழுவதாக தெரியவில்லை என்றெண்ணி சமையலறைக்கு விரைந்தான்.

அடியே முன்னால போறவன்,

பின்னால தாக்காத என்று கதிரின் பாட்டும் இணைய அவன் கையில் கத்தியை திணித்து வேலையொன்றை ஏவினான் கார்கி.

“கொய்யா.. ஏதோ எஞ்சாய் பண்ணுறீங்கனு வந்தா, எனக்கே வேலை தர்றியா நீ?”

“நீ இல்லையேனு தான் மச்சான் எஞ்சாய் பண்ணோம் அதான் வந்துட்டியே”-பிரபா.

“மச்சி யூ டூ?”

“என்னமோ புதுசா சூடு சொரணை வந்துட்டமாதிரி நடிக்காத மச்சான்” என கார்கியும் ஒரு பக்கம் வாரினான். கலகலப்பு பேச்சும்,கைகலப்புமாக சமையல் வேலையை முடித்திருந்தனர் மூவரும்.

பிரபாவும் கார்கியும் சோம்பலுடன் சோபாவில் சரிய ஏதோ ஒரு உந்துதலில் அந்த பெண் இருக்கும் அறைக்கு சென்றான் கதிரவன். இன்னும் கண்விழிக்காமலே அவள் இருக்க, சற்றுமுன் அறையில் கலைத்து வைத்திருந்ததை எல்லாம் அடுக்க தொடங்கினான் கதிரவன்.

ய்” என்று பிரபஞ்சன் குரல் உயர்த்தி கத்திய வேகத்தில், கார்முகிலன் அந்த அறைக்கு ஓடி வர, கதிரவன் தூக்கிவாரி போட தனக்கு பின்னால்போகும் பிரபாவின் பார்வையை தொடர, அவனது பின் மண்டையை குறிவைத்து அடிக்க எடுத்த பூஜாடியை கீழே இறுக பிடித்துக் கொண்டு முறைத்தாள் அந்த பெண்.

“யாரை அடிக்க வர? அவன் யாரு தெரியுமா?” என்று உருமிய பிரபாவை கதிர், கார்கி இருவருமே தடுத்து கொண்டிருந்தனர். எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ. தங்களுக்கு எந்த விதத்திலும் பரிட்சயமே இல்லாதவள் தனது நண்பனை கை ஓங்குவதா?

“டேய் விடுடா.. வெளில போ..”என்று பிரபா மீண்டும் கத்த அந்த பெண்ணின் முகத்தில் லேசான தடுமாற்றம் கூட இல்லை. பிரபஞ்சன், கதிரவன், கார்முகிலன் மூவரையும் ஆராய்வதைப் போல பார்த்து கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.