(Reading time: 18 - 35 minutes)

“தப்பு லீலா.. உன்னை ஏதாச்சும் பண்ணனும்னு நினைச்சா, உன் நகையை எல்லாம் எடுத்துட்டு நீ மயக்கத்துல இருக்கும்போதே எங்கயாச்சும் விட்டுருக்க மாட்டோமா? ஒரு டாக்டரை அழைச்சிட்டு வந்து,

ஏன் இதையெல்லாம் பண்ணனும்?” என்றபடி கதிரவன் தண்ணீரை நீட்டிட அவனை கேள்வியுடன் பார்த்தாள் லீலா.

“ஜூஸ் கொடுத்தால் அதுல ஏதாச்சும் கலந்திருக்கேனானு நீ கேட்ப. அதான் சாதாரண தண்ணி கொண்டு வந்தேன்.. நான் கதிரவன்.. பிரபா உன்மேல கோபப்பட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்குறேன். நீ என்னை அடிக்க வந்ததாலத்தான் அவன் கோபப்பட்டான்.”

“பின்ன கடத்திட்டு வந்தவனுக்கு ஆரத்தியா எடுக்கனும்?”

“நாங்க கடத்தல”

“அதை நான் நம்பல..”

“உனக்கு என்னத்தான் வேணும்..” இருவருமே கோரசாக கேட்கவும் உடல்நிலை ஒருபக்கம் படுத்தி எடுக்க, தலையில் கைவைத்துக் கொண்டாள் லீலா.

“தயவு செஞ்சு என்னை தனியா விடுங்க..”

“அப்படியெல்லாம் விட முடியாதும்மா” என்று பெண்ணின் குரல் தூரத்தில் இருந்துகேட்க கையில் ஃபோனும் நின்றிருந்தான் பிரபஞ்சன். சற்றுமுன்பு காணாமல் போயிருந்த அவனது புன்னகை இப்போது திரும்பியிருந்தது.

ஃபோனில் வீடியோ காலில் பேசினாள் ருத்ரா. லீலாவிடம் ஃபோனை நீட்டிய பிரபா நண்பர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறினான். நடந்ததை ருத்ரா சொல்லி முடித்தாலும் லீலாவிடம் தெளிவில்லை.

“நீங்க இங்க வரமுடியுமா டாக்டர்? எனக்கு கால் வலிக்கிறதே..” என்றாள்.

“கண்டிப்பா வரேன். அதுவரைக்கும் பயப்படாமல் இருங்க..நாங்க இருக்கோம்..” என்று ருத்ரா தன்னை அவர்களோடு இணைத்துக் கொள்ள லீலா அமைதியாகவே இருந்தாள்.

“நாங்க சாப்பிட போறோம்.. நீயும் சாப்பிடுறியா ?இல்ல சந்தேகம் தீர்ந்ததும் சாப்பிடுவியா?” தலையை மட்டும் அறை வாசலில் நீட்டி புன்னகையுடன் வினவினான் பிரபஞ்சன். மனதில் நிறைந்திருந்த சஞ்சலங்கலுக்கு நடுவில் அவனது பாவனை அவளுக்குள் நிதானத்தை தந்தது. “கடத்தல்காரனா இருந்தா என்ன?எல்லாம் போயிடுச்சு இனி எதுக்கு அழுது வடியனும்?பயந்து புலம்பனும்?என்னத்தான் பண்ணிடுவானுங்க பார்ப்போம்” என்று ஒரு முடிவுக்கு வந்தவள்,

“ பசிக்கிது.. சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள். லீலாவின் பதில் மற்ற இருவருக்குமே கேட்டது.

“ஹை சேர்ந்து சாப்பிடலாமா? அப்போ நாம ப்ரன்ட்ஸா?” என்று கதிரவன் இப்போது தலையை நீட்ட,

“ என் சாப்பாட்டில் மட்டும் எதையாச்சும் கலந்துட்டீகன்னா? அதான் சேர்ந்தே சாப்பிடலாம்னு சொன்னேன்..” என்றாள் லீலா.

“ரொம்ப தெளிவு மச்சான்” என்று முணுமுணுத்தபடி மூவரும் உணவைக் கொண்டு வந்தனர். அவளால் நடக்க முடியாமல் போக அவர்கள் அதே அறையில் சாப்பிட தொடங்கினார்கள்.

“உங்க வீட்டுல பெரியவங்க யாருமில்லையா?”

சாப்பிட்டுக் கொண்டே லீலா கேட்ட முதல் கேள்வியே, மூவரையும் அடுத்த வாய் சாப்பிட விடாமல் நிறுத்தியது.

“ என்ன பதிலே காணோம்?”

“ வேற கேள்வி இருந்தா கேளு” என்றான் பிரபா.

“நீங்க எல்லாம் என்ன பண்ணுறீங்க?”

“உன்னை பத்தி எதுவும் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு நீ மட்டும் ஏன் இத்தனை கேள்வி கேட்குற?”

“ நான் கேட்குற எந்த கேள்விக்கும் பதில் சொல்லலியே?”

“ நீ இன்னைக்கு வந்துட்டு இன்னைக்கே போக போற பொண்ணு! நீ எங்களை பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றான் பிரபஞ்சன்.

“நான் இன்னைக்கே போகுறேன்னு யாரு சொன்னா? உங்கனாலதானே நான் இப்போ இந்த நிலைமைல இருக்கேன்? அப்போ இதை சரி பண்ணவேண்டியது உங்க கடமைதான்.. அவ்வளவு சீக்கிரம் நான் இங்க இருந்து போக மாட்டேன்..” என்று ஒரே போடாக போட்டாள் லீலா.

தொடரும்...

Episode # 01

Episode # 03

Go to Vellai pookkal ithayam engum malargave story main page

{kunena_discuss:1166}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.