(Reading time: 20 - 39 minutes)

எனவே கடினமாக முகத்தை வைத்துக்கொண்டு நான் சொன்னால் சொன்னதுதான். உனக்கு நான் எனக்கு நீ என்பது முடிவாயிடுச்சு. இந்த ஆதித் ஒன்றை செய்யனும் என்று முடிவெடுத்துட்டா அதை யாராலும் நிறுத்த முடியாது நான் டிசைட் செஞ்சுட்டேன் நம்ம கல்யாணம் அடுத்தவாரம் தான் என்று ,இப்போ நீ என்ன செய்ற ஹாஸ்ட்டலில் போய் உன் திங்க்ஸ் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வேகட் செய்து ரெடியாகு. இனி நீ இங்கிருப்பது உனக்கு பாதுகாப்பு அல்ல. அந்த மினிஸ்டரின் மகன் ரொம்ப டேஞ்சரானவன் ஜாக்கிரதையா இரு. எனக்கு ஒருமணிநேரம் வெளியில் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து உன்னை என் வீட்டிற்கு கூப்பிடுகொண்டு போகிறேன் என்றவன் ட்ரைவிங் சீட்டில் இருந்து இறங்கி அவள் உட்கார்ந்திருந்த பக்கம் வந்து அதன் கதவை திறந்தான்.

ஏய்.. அழகி இன்னும் நமக்கு கல்யாணம் ஆகல அதற்குள் என்னை வேலை வாங்க ஆரம்பிச்சுட்ட என்று அவள் ஹாஸ்ட்டல் வந்தும் இறங்காமல் யோசனையுடன் காரிலேயே இருந்தவளின் பக்கமிருந்த கதவை திறந்தவன் கிண்டலுடன் கேட்டான்.

ஆனால் பல குழப்பத்தில் இருந்த அழகி அவனின் கேலியில் லயிக்கமுடியாமல் சீரியஸாக கூறினாள், நடக்காத ஒன்றை பற்றி நான் யோசிப்பதே கிடையாது என்றாள். அதற்கு ஆதித் என்கிட்டையே சவாலா...? என்றான். உடனே அவள் முகம் வேதனையில் சுருங்கியது. சாவால் விடும் நிலையில் நான் இல்லை. அதுவும் உங்களிடம் சவால் விடனும் என்று நான் நினைக்கவே மாட்டேன். அதற்காக நீங்க சொல்வதற்கெல்லாம் தலையாட்டவும் மாட்டேன் என்று கூறினாள். பின் அந்த நரேனின் மொபைலை நீங்கள் ஆன் செய்து அதில் இருந்த என் வீடியோவை டெலிட் செய்திட்டீங்களா? என்று கேட்டாள்

அதற்கு அவன் ஒருநிமிஷம் என்று அவளிடம் கூறியவன் தன காரினுள் எட்டி அதில் இருந்த நரேனின் போனை எடுத்தான் பின் அவளுடன் இணைந்து நடந்தபடி அதன் கவரினுள் இருந்து தான் உடைத்து வைத்திருந்த அந்த மேமரிகார்டை எடுத்து அவளிடம் காண்பித்தான் டெலிட் மட்டும் செய்யல அந்த மெமரி கார்டையே உடைச்சுட்டேன் என்றான்.

அவன் கையில் வைத்திருந்ததை பார்த்தவள் கண்கள் கலங்கியது யார் இவன் எனக்கு கடவுளால் அனுப்பப்பட்ட இரச்சகனா என்று மனதில் நினைத்துக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் ஆதித். இது என்னை ரொம்ப டிஸ்டப் செஞ்சது. ஆனா இதில் இருந்து நான் மீண்டுட்டேன் என்பதை சந்தோசமாக ஜீரணிக்க கூட முடியாமல் வேலை போய் என் வீட்டிலும் என்னை புறக்கணித்ததால் உங்களுக்கு மீண்டும் தொந்தரவாக வந்துவிட்டேன் என்று விரக்தியுடன் கூறினாள்.

உடனே ஆதித் நோ அழகி. நான் உன்னை தொந்தரவாக எப்போதும் நினைக்க மாட்டேன் என்று கூறினான். அதற்கு சோர்வாக சிரித்தவள் ஆதித்திடம், அந்த மொபைலில் வேறு என்ன இருந்துச்சு அந்த மொபைல்ல எங்க பாஸ் எதுக்கு என்னிடம் அதை கேட்டு மிரட்டுனாங்க என்று கேட்டாள்,

அதற்க்கு ஆதித் ம்...அந்த மாதேஷும் அந்த நரேனும் சேர்ந்து பொறுக்கி வேலை பார்த்து, அதை அவங்களே ரெகார்ட்வேறு பண்ணியிருகிறாங்க. அதுமட்டும் வெளியாச்சு அவங்க முகத்திரை எல்லோர் முன்பும் கிளிஞ்சுடுமிள்ள, நீ அதை எல்லாம் இப்போ யோசிக்காத அந்த விஷயத்தை நான் டீல் பண்ணிகிடுவேன். ஆனா இத நீ என் கிட்ட கொடுத்ததுக்கு உன்ன ஏதாவது பண்ணனும் என்று அவங்களுக்குத் தோணும். ஆனா நீ என்னுடையவள் எனறு தெரிந்ததால் உன் மேல கைவைக்க யோசிப்பாங்க, இருந்தாலும் நீ என்னுடைய இடத்தில், பாதுகாப்பாக இருப்பதுதான் உனக்கு இப்போ சேப் என்று கூறிக்கொண்டே அவனும் ஹாஸ்டலுக்குள் நுழைய வருவதை பார்த்த அழகுநிலா, “நீங்க எங்க... என் கூட உள்ள வருகிறீர்கள், உள்ள மற்ற ஆண்களுக்கு அனுமதி கிடையாது. நீங்க கிளம்புங்க நான் போய்கொள்வேன் என்றாள்.

அதற்கு ஆதித் இங்க ஸ்டே பணியிருக்கிறவங்களுடைய கார்டியன் வரலாம்ல, நான் தானே இனி உனக்கு எல்லாம் என்று கூறியவன், அவளுடன் உள்ளே நுழைந்தான். ஆதித் அங்கு இருந்த ரிசப்சனுக்கு அவளுடன் சென்றான் அங்கிருந்த அந்த விடுதியின் நிர்வாகி அழகுநிலாவுடன் வந்திருக்கும் ஆதித்தை பார்த்தபடி இவங்க உங்க அண்ணன் கிடையாதே கார்டியனை தவிர மத்த ஆண்களை உள்ள கூப்பிட்டுக்கொண்டு வரக்கொடாது என்று தெரியுமில்லையா அழகுநிலா? என்று கேட்டார்

அதற்கு அவள் பதில்கூறும்முன் ஆதித் “ஹாய் மேடம் ஐ ஆம் ஆதித்தராஜ் ஜானகி பில்டர்ஸ் எம் டி. அழகுநிலா இஸ் மை பியான்ஷி. next நெக்ஸ்ட்வீக் எங்களுக்கு மேரேஜ் அதனால இன்னைக்கு ரூமை வெக்கேட் பண்ணி உங்கள் அமௌன்ட்யை செட்டில் பண்ணிடலாம் என்று தான் நாங்க வந்தோம் என்று கூறிவிட்டான்.

அவன் அவ்வாறு கூறியதும் அழகுநிலா அவனை முறைத்துப் பார்த்தாள். ஆதற்குள் அப்படியா ரொம்ப சந்தோசம் அழகுநிலா அட்வான்ஸ் ஹாப்பி மேரீட் லைப் toடு யூ ,என்று அழகுநிலாவிடம் வாழ்த்துகூறினாள் அந்த ஹாஸ்ட்டல் நிர்வாகி அம்மா.

அவர்களிடம் அதற்குமேல் மறுத்து பேசமுடியாமல், மையலாக அவர்களின் வாழ்த்துக்கு நன்றியோ மறுப்போ சொல்லமுடியாது புன்னகை மட்டும் செய்தால் அழகுநிலா.

அவளின் சிரிப்பையும் மழுப்பளையும் பார்த்து விசமத்துடன் ஆதித், அவளின் கன்னத்தை தொட்டு அதன் மென்மையை சோதித்தபடி ஓகே பேபி நான் என் வேலையை முடிச்சுட்டு வருகிறேன் நீ உன் திங்க்ஸ் எல்லாம் பேக் செய்துட்டு ரெடியா இரு என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.