மேலும் நான் டென்சனில் இருப்பதால் அதை பற்றி கேட்டதற்கு பிறகு பார்க்கலாம் நான் அதை டீல் செய்துகொள்வேன் என்று ஆதித் சொல்லிவிட்டார். ஆனால் அந்த மினிஸ்டரின் மகன் ஆபத்தானவனாக இருப்பதால் என்னால் வேறு எங்கும் செல்ல முடியவில்லை. கூடிய சீக்கிரம் ஓர் பாதுகாப்பான இடம் தேடிக்கொண்டு போய்விடுவேன் அதுவரை என்னை ஜானகி ஆண்டிகூட தங்கவைப்பதாக ஆதித் கூறியதற்கு நான் சரி என்று கூறிவிட்டேன். நீங்க என் நிலையை புரிந்திருப்பீர்கள் என்று நினைகிறேன் வர்ஷா, ஆதித்தை நான் அவர் வீட்டில் தங்குவதால் இனி நீங்கள் சந்தேகப் படமாட்டீர்கள் என்று நினைகிறேன் என்று கூறினாள்.
அதற்கு வர்ஷா யா.... நான் தான் யோசிக்காமல் எங்க இருவருக்குள்ளேயும் பிரச்னையை பெரிதாக்கிவிட்டேன். ஆதித் என் மேல் ரொம்ப கோபமாக இருக்கிறார். அதனால்தானோ என்னவோ என்னை காயப்படுத்துவதற்காக உன்னுடன் நெருக்கமாக இருப்பதுபோல் என்னிடம் இன்று காண்பித்திருக்கிறார். நான் போய் மறுபடி ஆதித்திடம் பேசி சாரிகேட்டால் எங்களுக்குள் உள்ள பிரச்சனை சரியாகிடும் என்று நினைக்கிரேன் என்றாள்.
வர்ஷா அவ்வாறு கூறியது அழகுநிலாவிற்கு ஏனோ உவப்பானதாக இல்லை இருந்தும் அதை ஒதுக்கி வர்ஷாவிடம் கூறினாள், நீங்க ஆதித்தை கண்டிப்பா போய் பார்த்து பேசுங்க வர்ஷா , எனக்கு உதவிய ஆதித்துக்கும் உங்களுக்கும் இடையே என்னால் பிரச்சனை வந்துருச்சே என்று உறுத்தலாக இருந்தது. நீங்க இரண்டுபேரும் பழையபடி சேர்ந்தால் எனக்கும் சந்தோசமே என்றால் அழகுநிலா.
அப்பொழுது அழகுநிலாவிம் மொபைல் ஒலி எழுப்பியது எனவே வர்ஷா ஓகே நீங்க பேசுங்க நான் கிளம்புறேன் என்னிடம் உண்மையை நீங்கள் சொன்னதற்கு ரொம்ப தாங்ஸ் என்றவள் எழுந்து வெளியேறினால்
அழகுநிலா தனது மொபைலில் அவளது தோழி சுமதி பெயர் பார்த்ததும் அவளுக்கு ரமேஷ் மூலம் விஷயம் தெரிந்துவிட்டது என்பதை உணர்துகொண்டாள் அதைathai அட்டன் செய்தபடி தனது ரூமிற்கு நடந்துகொண்டே பேச ஆரம்பித்தாள்.
அழகுநிலா, ‘சுமதி’ என்று சொன்ன மறுநிமிடம், நிலா....,என்னென்னவோ சொல்கிறார் ரமேஷ். நீ இதுவரை எதையுமே ஏன என்னிடமும் விசுவிடமும் சொல்லவில்லை. இப்போ எங்க இருக்கிற என்று படபடவென கேள்வி கேட்டாள்.
அதற்கு அழகுநிலா உங்களிடம் சொல்லக்கூடாது என்று நன் நினைக்கவில்லை. ஆனா சொல்லனும் என்று நான் நினைத்தநேரம்தான் உனக்கும் விசுவிற்கும் உள்ள லவ் உங்கவீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து அப்ப பிரச்சனையில் நீங்க இருபதாக பட்டது. அதற்குப்பின் நீ வேலைக்கு வந்தபோது உங்க கல்யாண ஏற்பாடு அப்படின்னு போயிருச்சு. அதனாலத்தான் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது என்றவள், ஆனா இப்போ உங்க இராண்டு பேருடைய உதவி எனக்கு தேவை என்றாள்..
அப்பொழுது அவளிடமிருந்து விசு என்னிடம் கொடு நான் பேசுகிறேன் என்று மொபைலை பறித்தவன் நிலா எதுவென்றாலும் சொல்லு செய்திடலாம் என்றான். அதற்கு அழகுநிலா விசு இந்த விசயத்தில் எனக்கு பிரச்சனை கொடுப்பவர்கள் அரசியல் பணம் அதிகாரம் எல்லாம் உள்ளவர்கள் எனவே உங்களிடம் நான் வெளிப்படையாக உதவிக்கு வந்து நின்றால் அவர்கள் உங்களை எளிதாக தாக்க முடியும். அதனால் நான் இப்பொழுது ஜானகி பில்டர்ஸ் எம் டி மிஸ்டர் ஆதித் அவரோட பாதுகாப்பில் இருப்பதுதான் நல்லது. ஆனால் எனக்கு நீங்க சென்னையை விட்டு தொலைவில் ஏதேனும் ஒரு வேலையை நம் நண்பர்கள் மூலம் சீக்கிரமாக எனக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் அது போதும் என்றாள்.
உடனே விசு கூறினான் அழகுநிலா ரமேஷ் சொன்னார் மிஸ்டர் ஆதித் உன்னை கல்யாணம் செய்யப்போவதாக, நீ என்னடானா.. வேலைக்கு ஏற்பாடு செய்யணும் என்று சொல்ற என்றான்.
அதற்கு அழகுநிலா, ஆதித் ஏற்கனவே வர்ஷா என்பவளை காதலிக்கிறார். அதனால் இந்த பேச்சை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை இன்னும் கொஞ்ச நேரத்தில் கூப்பிட அவர் வந்துவிடுவார் மற்ற விசயங்களை பிறகு நான் பேசுகிறேன் என்றவள் ஆதித் கூறிய ஒன்ரைமணி நேரம் ஆகப்போவதை உணர்ந்தவள் தன்னுடைய திங்க்ஸ்சை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.