(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 13 - தீபாஸ்

oten

ழகுநிலா காரில் பின் சீட்டில் அமர்ந்து அவள் வைத்திருந்த அந்த அக்ரீமென்ட் டாக்குமென்டில் முக்கியமான குறிப்புகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தாள். ட்ரைவிங் செய்துகொண்டிருந்த மாதேசின் அருகில் உட்கார்ந்திருந்த வசந்த் மாதேசிடம் இன்றைய நிகழ்ச்சிக்கு தான் ஏற்பாடு செய்திருந்தவற்றை கூறிக்கொண்டே வந்தான்.

ஓரிடத்தில் கார் நின்றதும் எதுக்கு “இங்க நிறுத்தின மாதேஷ்” என்று வசந்த் கேட்டான். அதற்கு மாதேஷ் என்னுடைய கெஸ்ட் ஒருத்தரை பிக்கப் செய்வதற்காக என்று சொல்லிக்கொண்டே காரின் கண்ணாடியை இறகிவிட்டான்.

ஹாய்... மாதேஷ்! என்றபடி வந்தவள் வர்சாவேதான், அவளை பார்த்ததும் அழகுநிலா இது வர்ஷா தானே என்று அவளை பார்வையால் ஆராய்ந்தாள். வர்ஷா அன்று மாலில் டைட் ஜீன்சும் கையில்லாத டிசர்ட்டும் போட்டு இருந்தவள், இன்று நெட் சேரியில் அதன் பார்டரில் உள்ளதுபோல் அழுத்தமான சிலீவ்லெஸ் ப்ளவ்ஸ் அணிந்து அதற்கு மேட்சாக காதில் பெரிய ஜிமிக்கியுடன் free பிரீஹேர்ஸ்ட்டைலில் வந்திருத்தவளை பார்த்து மாதேஷ், “வர்ஷா இது என்னுடைய பிரண்ட் அண்ட் and பிஸ்னஸ் பார்ட்னர் வசந்த் என்று அவனின் அருகில் அமர்ந்திருந்தவனை அறிமுகப்படுத்தினான். பின் அழகுநிலா உட்கார்ந்திருந்த பின்சீட்டின் கதவை அவளுக்கு திறந்துவிட்டவன் ஏறுங்க வர்ஷா போய்கிட்டே பேசலாம் என்று கூறினான்.

பின்னால் ஏரிய வர்ஷா தன் பக்கத்தில் தன்னை பார்த்தபடி ஒரு ஜீவன் அந்த காரினுள் உட்கார்ந்திருப்பதே தனக்கு தெரியவில்லை என்ற பாவனையில் கால்மேல் கால்போட்டு அலட்சிய பாவனையுடன் அமர்ந்தவள் ட்ரைவ் செய்துகொண்டிருந்த மாதேசிடம் பூஜை எத்தனை மணிக்கு தொடங்கும் மாதேஷ், நீங்க சொன்ன அந்த லான்ட் லோகேசனில் இடம் கிடைப்பது அவ்வளவு ஈசி கிடயாதுதானே! அங்க லான்ட் வாங்கறதுக்கே பெரிய பட்ஜெட் தேவைப்படுமே! என்று மேற்கொண்டு பேசப் போனவளிடம் மாதேஷ், என் டாட் நினைத்தால் எங்க வேண்டுமென்றாலும் இடம் வாங்கிவிடுவார் வர்ஷா, நான் இங்கு இடம் வேண்டுமென்று கேட்டதும் வாங்கிகொடுத்துட்டார், ஆனால் இதுகூட இந்த பில்டிங் கட்ட எனக்கு லோன் அரேஞ் பண்ண மட்டும் தான் அவர் எனக்கு ஹெல்ப் செய்வேன் என்று சொல்லிட்டார்.

இதை நான் சக்சஸ்புல்லா நடத்திக் காட்டினால்தான் நான் சென்னையில் இருக்க எனக்கு வாய்ப்புத்தருவார். இல்லாவிட்டால் என் ஊரில் இருக்கிற பிஸ்னசை பொறுப்பு எடுத்துக்கொண்டு ஊர் பக்கம் வந்திடனும் என்று கண்டிசன் போட்டிருக்கிறார் என்றான். .பின் வசந்தை பார்த்து டேய்வசந்த் உன்னை நம்பித்தான் நான் இதில் இறங்கியிருக்கேன் என்றான்.

மாதேஷ் நேற்றே வர்ஷாவை தற்ச்செயலாக சந்திப்பதுபோல் சந்தித்து அவளை தன் பூமிபூஜைக்கு அழைத்தான். முதலில் மறுக்கத்தான் நினைத்தாள் ஏனெனில் அன்று ஆதித்துக்கு கோபத்தை கொடுப்பதற்காக மாதேஷுடன் இணைந்து ஆட முடிவெடுத்தவள் ஆதித் வர்ஷாவிடம் கோபமாக பேசி வெளியேறிய மறு நொடி மாதேஷிடம் இருந்து விலகிய வர்ஷா “சாரி மாதேஷ் ஆதித்தை கோபப்படுத்துவதற்காகத்தான் உங்களுடன் ஆட வந்தேன் நான். இதுவரை ஆதித் தவிர மற்ற ஆண் நண்பர்கள் யாருடனும் இணைந்து ஆடியதில்லை. நான் கிளம்பறேன்” என்று வெளியேறிவிட்டாள்.

மாதேசுகு வர்ஷாவை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது நாகரீகமாக இருந்தாலும் ஆண்களை எட்டவே நிறுத்தி வைப்பவள் என்று சிலநாட்கள் தொடர்ந்து அவளை கண்காணித்ததின் மூலம் தெரிந்துகொண்டான். ஹய் சொசைட்டிக்கு தேவையான நாகரிகத்தோற்றம், ஜொள்ளு பார்டிகளை எட்டவே நிறுத்தும் அவளின் தோரணை, கொட்டிக்கிடக்கும் அவளின் அழகு, இந்தமாதிரி அழகுதேவதையின் காதலை தக்கவச்சுக்க தெரியாத முட்டாள் ஆதித் என்ற எண்ணம் அவனுக்கு உருவாக ஆரம்பித்திருந்தது. மேலும் ஆதித்தின் முன் அவள் வெறுப்பை காண்பித்தாலும் அவனின் பிரிவு வர்சாவை வலிக்கச் செய்வதை உணர்ந்த மாதேசுக்கு ஆதித்தின் மேல் பொறாமையை ஏற்படுத்தியது. அவளை அந்த வருத்தத்தில் இருந்து மீட்கவேண்டும் எனற எண்ணம் ஏற்பட்டது. ஏனோ! அவனை அறியாமல் வர்ஷாவின் மேல் மாதேஷ் மையல் கொள்ள ஆரம்பித்தான்

ஆதித்துடன் அழகுநிலா இருந்த போட்டவை, வர்ஷாவிடம் காட்டி உன் அன்பிற்கு அருகதையில்லாதவன் அந்த ஆதித் என்று அவளிடம் கூறி அவனை தூக்கி தூரப்போடுவதில் வருத்தம் கொள்ளாதே! என்று சொல்ல நினைத்தான் மாதேஷ்.

பூமிபூஜைக்கு வர்ஷாவை மாதேஷ் இன்வைட் செய்ததும் அவள் வர மறுக்கப் போவதை உணர்ந்த மாதேஷ் வரமுடியாதுனு சொல்லிடாதீங்க வர்ஷா! நான் முதல் முதலாக தனியா ஆரம்பிக்கப்போற பிஸ்னஸ் இது, என் அம்மா ஊரில் இருந்திருந்தால் அவங்களைத்தான் நான் என் பில்டிங் தொடங்க முதல் கல் ஊன்ற சொல்லியிருப்பேன். ஆனால் அவங்க இங்க இல்லாததனால் என் வெல்பிசரா என் மனசுக்கு பிடிச்ச நீங்க வந்து அதை செய்யணும் என்று ஆசை படறேன் என்று கூறிவிட்டான்.

அவன் வார்த்தையை மறுத்து பேசமுடியாமல் அப்படி நான் என்ன ஸ்பெசல் உங்களுக்கு என்று கேட்டவளிடம், தேவதைகளுக்கு அவங்க தேவதை பெண் என்று தெரியாது என்று கூறியவன், அதுக்குமட்டுமில்லை ஜானகி பில்டர்சிடம்தான் நாங்க பில்டிங் கான்ராக்ட். பூமிபூஜையின் அன்றைக்கு சைன் பண்ணப்போறோம். அங்க வருகிற ஆதித்துக்கு அங்கு உங்களை பார்த்து எவ்வளவு பெரிய பொக்கிசத்தை அழகு பெட்டகத்தை மிஸ் பண்ணியிருக்கிறோம் என்று ஏங்க வைக்கலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.