(Reading time: 22 - 43 minutes)

அதற்கு ஆதித், “ஆமாடா” இனி நீ அவளை உரசிப்பார்கனும் என்று நெனச்சாகூட உன்ன இல்லாமல் ஆக்கிடுவேன் என்று அவன் சட்டையை பிடித்து இழுத்துக் கூறினான்.

இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை கேட்ட அழகுநிலாவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நரேனின் போனுக்கும் மாதேசுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும் அந்த நரேனின் போனை கைப்பற்ற முயன்றவர்களில் மாதேசும் ஒருவன் என்றும் அந்த போனில் ஆதிச் சொன்னதுபோல் வில்லங்கமான பதிவு வேறு இருக்கிறது போல என புரிந்துகொண்டவள், தான் வேலை பார்த்த இடம் தனக்கு இத்தனை ஆபத்தான இடமா? என்று நினைக்கும் போதே அவளுக்கு படபடப்பாக வந்தது

ஆட்டோவில் இருந்து இறங்கிய குமரேசனுக்கு அழகுநிலா ஆதித்தின் கைபிடியில் இருப்பதை பார்த்ததுமே உடைந்துவிட்டான் அதுவும் தான் அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை முரளிதரனிடம் தன தங்கை நேற்று கோவிலுக்கே போகவில்லை நான் கூட அன்று பேசும் போது ஆபீசில் தான் இருக்கிறேன் என்று சொன்னாள். அவ நெருப்பு போன்றவள் என்று கூறி அவளிடமே வாங்க உங்களுக்கு சந்தேகம் இருந்தால் விசாரித்து விடலாம் என்று கூறி இரவே பஸ் ஏறி சென்னை வந்த குமரேசன் முரளிதரனை அழைத்துக்கொண்டு அழகுநிலா வேலை பார்க்கும் ஆபீசுக்கு வந்தான் . ஆபீஸ் ரிசப்சனில் அவளை விசாரித்ததும் அவள் கம்பெனி நியூ பில்டிங் சைட்டுக்கு போயிருப்பதாக கூறினார்கள்.அந்த அட்ரஸ் கேட்டு அங்கு வந்த குமரேசன் அங்கு நிலவிய சூழ்நிலையில் அதிர்ந்து நின்றுவிட்டன

மேலும் மாதேஷ் அவ என்ன உன் வருங்கால பொண்டாட்டியா என்று கேட்டதும், “ஆமாம்” என்று ஆதித் சொன்னதிற்கு பின்னாவது, தன தங்கை மறுத்து ஏதாவது சொல்லுவாள் என்று ஒருநிமிடம் அழ்குநிலாவை பார்த்தவன்’ அவள் அந்தமாதிரி எதுவும் சொல்லாமல் உறைந்து நின்றதை பார்த்து வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவளது கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டு “நம்ம குடும்ப மானத்தையே கப்பலேத்திடியே!, இப்படி நீ... செய்வேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லையே” என்றான்

மாதேசின் சட்டையைப் பிடித்து ஆதித் இழுத்தநேரத்தில் அழகுநிலாவை குமரேசன் அடிக்கவும் “அண்ணே” என்ற அழ்குநிலாவின் சத்தத்திலும் திரும்பி பார்த்த ஆதித் மாதேசின் சட்டையை விட்டுவிட்டு “யேய் நீயெல்லாம் மனுசநாயா ஒரு பெண்ணை அதுவும் தங்கச்சியை போய் பிரச்சனையில் இருக்கும் போது என்ன ஏதுன்னு விசாரிக்காம கைநீட்டுற” என்று குமரேசனை பார்த்து கோபத்தில் கண் சிவக்க கர்ஜித்தான்.

உடனே குமரேசன் ஆத்திரத்துடன் என் தங்கச்சி மனச கெடுத்து அவக்கூட ஊர் சுத்தனதுமில்லாம என்னைய கேள்விவேற கேட்குற நீ? என்று கோபத்துடன் அவனை அடிப்பதற்கு கை ஓங்கினான் குமரேசன், உடனே அழகுநிலா வேகமாக ஆதித்தின் முன் வந்து நின்று அண்ணே அவர்மேல நீ கைய வச்ச அடுத்த நிமிஷம் உன் தங்கையை உசுரோட பார்க்கமாட்ட என்று தன் அண்ணன் ஆதித்தை அடித்துவிடுவானோ! என்ற பதட்டத்தில் நெருப்பாய் நின்றாள் அழகுநிலா. .

அழ்குநிலா அவ்வாறு கூறியதும் குமரேசன் ஓங்கிய கை, இயலாமையுடன் கீழே இறங்கியது. அழகுநிலாவிடம் அவனுக்காக இந்த அண்ணனையே எதிர்க்க, உயிரைவிட துணியுர அளவு நீ போய்டியா அழகி? என்றதும், இல்ல அண்ணே என்று மேற்கொண்டு அழகுநிலா பேசப்போவதை தடுத்து, இனி உனக்கும் நம்ம வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஊருபக்கம் வந்து எங்க மிச்சமீதி கௌரவத்திற்கும் உளைவச்ச.... பிறகு ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டோம்! என்று கூறி விறுவிறுவென்று அவன் வந்த ஆட்டோவில் சென்று ஏறி போயேவிட்டான் குமரேசன்.

அண்ணனின் வார்த்தைகளில் அதிர்ந்துபோய் அப்படியே சிலையாக நின்றுகொண்டிருந்த அழகுநிலாவை பார்த்து இளக்காரமாய் சிரித்த மாதேஷ், ஆதித்திடம் “நேத்து வரை வர்ஷா” அவ உனக்கு போரடித்தும் இன்னைக்கு இவ, இவபோரடித்ததும் நாளைக்கு யாரோ? உன் அம்மா புத்திதானடா உனக்கும் என்று கூறினான் மாதேஷ் .

அவ்வளவுதான் ஆதித்துக்கு வந்த கோபத்தில் ஒரு எட்டில் மாதேசின் அருகில் போனவன், ஒரே எத்து விட்டு அவனை சுருள விழ வைத்தான், பின் அவனை மற்றவார்கள் பிடிக்க முயன்றும் விழுந்தவனை காலால் மேலும் இரு உதை உதைத்தவன், “பேசுவ என் அம்மாவை பத்தி பேசுவ” இனி பேசின உன்னை தொலச்கிகட்டிடுவேன் என்று அவன் திமிறிக்கொண்டு மாதேசை பின்னி எடுத்துவிட்டான்

வசந்தும் மற்றவர்களும் மிகுந்த சிரமப்பட்டு மாதேஷை ரத்தக் காயத்துடன் மீட்டு காருக்குள் திணித்தனர் .

ஆதித் அங்கு நின்றுகொண்டிருந்த அழ்குநிலாவை பார்த்தான் அவள் கண்ணீருடன் தன அண்ணன் போன பாதையையே பார்த்துக்கொண்டு இருந்த அழ்குநிலாவின் அனாதாரவான நிலையை பார்த்தவன் அவளிடம் வந்தான்,

“ஏய்” அழாத. நான் இருக்கேன் வா! எல்லாம் சரியாகிடும் என்று அவளை கை பிடித்து தன காருக்கு கூட்டிக்கொண்டு போய் கார் கதவை திறந்து அவளை உட்காரவைத்தபோது தனக்கு பின்னல் நின்று கொண்டிருந்த ரமேஷை திரும்பி பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான், உடனே ரமேஷ், சார்! அழகுநிலா ரொம்ப அப்செட் ஆகி இருக்காங்க. அவங்க என்னுடைய பிரன்ட். அவங்கள நல்லா பாத்துக்கோங்க சார்! என்றான்.

உடனே ஆதித், நீங்க கவலை படாதீங்க, அவ எனக்கும் முக்கியமானவ தான் என்றவன். தன பி ஏ வை பார்த்து உங்களை இவர் என்று ரமேஷ்சை காட்டி, நம்ம ஆபீசில் ட்ராப் பண்ணிடுவார் உங்களை என்றான். உடனே அவன் சார் அப்போ இன்னைக்கு நம்ம சைன் பண்ண வேண்டிய கான்ராக்ட் என்று இழுத்ததும் ஆதித் அவனிடம் “ இந்த டீல் நல்லபடியா முடியாதுன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்” சோ லீவ் இட் என்றான்..

ஆனால் அழகுநிலா இவர்களின் சம்பாசனை எதுவும் கவனிக்கும் நிலையில் இல்லை. தன அண்ணன் தன்னை தவறுதலாக நினைத்து விட்டுச்சென்ற அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கண்ணீர் வடியும் கண்களுடம் தன் வீடு இனி தன்னை ஏற்காது என்பதனை ஜீரணிக்க முடியாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் இருந்த கார் அவளின் ஹாஸ்டல் நோக்கி போய் கொண்டிருந்தது. ஆதித் அவளை சமாதானப்படுத்தாமல் அடுத்து என்ன செய்ய? என்ற யோசனையுடன் ட்ரைவ் செய்துகொண்டிருந்தான் .

----தொடரும்----

Episode 12

Episode 14

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.