(Reading time: 22 - 43 minutes)

மேலும், இப்போ யாருக்காக உங்களை வேண்டாம் என்று சொன்னானோ அவள் சாதாரண என் ஸ்டாப். ஆனால் நீங்க ஒரு வி ஐ பி என அவங்களிடம் அன்று காண்பித்துவிடுவோம் வர்ஷா. அதற்காகவாவது நீங்க வாங்க பூமிபூஜைக்கு என்று கட்டாயப்படுத்தினான் .

வர்ஷா அன்று மாலில் சரியாக அழகுநிலாவை பார்க்கவில்லை. அவளின் சைடு மட்டும் பார்த்திருந்தாள். என்னை விடவா அவள் பேரழகியா? ஆதித்தை வீழ்த்தும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கு அவளிடம் என்று பார்க்க ஆசை பட்டாள். மேலும் தனது ஆதித்தை தன்னிடம் இருந்து பிரித்த அழகுநிலாவின் மேல் அளவுகடந்த துவேசம் பிறந்தது வர்ஷாவிர்க்கு. எனவே பூமிபூஜைக்கு போய் தன் கோபம் தீர அவளை இகழ்ச்சி படுத்தவேண்டும் என்ற வன்மம் பிறந்தது.

எனவே, வித் பிளசர். நீங்க எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கூப்பிடுவதற்காகவாவது நான் கண்டிப்பாக வருகிறேன் என்றவள், அப்போ அங்க உங்க ஸ்டாப் அழகுநிலாவும் உங்க பில்டர் ஆதித்தும் அங்கு நான் வந்தால் பார்க்கலாம் தானே? என்ற கேள்வி எழுபினால் வர்ஷா.

கண்டிப்பா பார்க்கலாம் வர்ஷா. அதுமட்டுமில்லை இத பாருங்க என்று படியில் ஆதித் கைபிடியில் ஏறும் அழகுநிலாவின் போட்டோவை காண்பித்தான். அதை பார்த்த வர்ஷாவிற்கு ஆதித்தின் மேல் கோபமும் அழ்குநிலாவின் மேல் வண்மமும் எழுந்தது. மேலும் அவளை ஜூம் செய்து பார்க்கும் போதுதான் அன்று மாலில் தனக்காக் வாங்கிய நகையை அழகுநிலா போட்டிருப்பதை பார்த்தவளுக்கு உடலெல்லாம் எரிந்தது.

அப்பொழுது மாதேஷ் கூறினான், உங்களை போல தேவதைகளின் அருமை தெரியாதவன் இந்த ஆதித். இவன் உங்களை விட்டுப்போனது நல்லதுக்குனு நினைத்துக்கொளுங்க. உங்களை ஆராதிக்கும் ஒருத்தன் கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பான் என்று சொல்லி அவளை ஆறுதல் படுத்தினான்.

எனவே தான் வர்ஷா இன்று கவனம் எடுத்து தன்னை சிறப்பாக பார்க்க ரிச்சாக தெரிவதுபோல் உடையும் டைமண்ட் ஆபரணங்களும் அணிந்து நாகரிக இளவரசி தோற்றத்தில் வந்திருந்தாள்.

வார்ஷா! என்று மாதேஷ் சொன்னதுமே அழகுநிலாவிற்கு அது ஆதித்தின் காதலிதான் என்று தெரிந்துவிட்டது. வர்ஷாவிடம் தன்னை ஆதித் அன்று உதவும் நோக்குடன்தான் அணைத்தான் எப்பதைச் சொல்லி ஆதித்தின்மேல் தவறு இல்லை என்று கூறி இருவரையும் சேர்த்து வைக்க இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள்.

ஆனால் மற்றவர்களின் முன் அதை சொல்ல முடியாது என முடிவெடுத்து ஒரு தாளில், வர்ஷா மேடம்! நான் உங்களிடம் தனியா பேசணும் என்று காகித்திதில் எழுதி அவளிடம் அதை கொடுப்பதற்காக மாதேசுடன் பேசிக்கொண்டிருந்த வர்ஷாவின் கையை தட்டினாள்.

அழகுநிலாவின் எளிமையை கண்டவள் அவளை இகழ்ச்சியாக பார்த்தாள். தன கையை தொட்ட மறுநிமிடம் வர்ஷா ஏதோ படக்கூடாத அசிங்கம் தன மேல் பட்டதுபோல் ஒதுங்கி தான் பேக்கில் இருந்த வேகமாக டிச்யூவை எடுத்து அந்த இடத்தை துடைத்துகொண்டே என்ன என்ற கேள்வியை வெறுப்பாய் அழ்குநிலாவை பார்த்தபடி கேட்டாள்.

அவளின் செயலில் அவமானம் அடைந்த அழகுநிலாவிற்கு கண்கலங்கிவிட்டது. இல்ல உங்ககூட தனியா கொஞ்சம் பேசணும் என்று முனுமுனுத்தாள். அவளை மேலிருந்து கீழ வரை பார்த்து முகத்தை சுருக்கி என் ஸ்டேடஸ்க்கு சரிசமமிலாதவங்க கூட நான் நின்று பேசுறதில்லை என்றாள்.

வர்ஷா அழகுநிலாவோடு மெல்லிய குரலில் பேசுவதை கண்டுகொண்ட மாதேஷ், உங்கள் அருகில் உட்கார்ந்திருப்பது என்னுடைய ஸ்டாப் அழகுநிலா என்றவன், நீங்கள் பேசுவதை பார்த்தால் ஏற்கனவே இருவருக்கும் பழக்கம் போல என்று கேட்டான். உடனே வர்ஷா நோ மாதேஷ் நான் என் ஸ்டேடஸ்க்கு ஈக்குவலா இல்லாதவர்களிடம் பழகுவதில்லை என்றாள். அதற்குமேல் அவர்களின் முன் வர்ஷாவிடம் காரில் பேசமுடியாததால் அமைதியானாள் அழகி.

ஆதித் தன காரை விட்டு இறங்கியதுமே அவன் கண்ணில் தெரிந்தது மாதேசின் ஒருபக்கம் அழகுநிலாவும் மறுபுறம் அவனுடன் கலகலத்து பேசியபடி இருந்த வர்சாவுமே, அவன் இறங்கியதுமே நக்கலாக அவனை பார்த்து தனக்கு இருபுறமும் நின்ற பெண்களை சாடையாக பார்த்தான். ஆதித்துக்கு அவன் ஜாடையாக கூறிய உன் முன்னாள் காதலியும், இன்னால் காதலியும் என் பக்கம் என்று கூறுவதை உணர்ந்த ஆதித்தின் கை முஷ்டி இறுகியது ஆனால் அதனை முகத்தில் கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல் முன்னேறினான் .

வசந்த் ஆதித் வருவதை பார்த்ததும் விரைந்து வந்து அவனை வரவேற்க சென்றான். அவனின் பின் பார்மால்டிக்காக மாதேசும் வந்தான். .வசந்துக்கு தான் நினைத்திருந்த பட்ஜெட்குள் பக்காவாக வடிமைத்துகொடுத்திருந்த ஆதிட்டின் கட்டிட வரைபடமும் பட்ஜெட்டும் மிகுந்த திருப்தியாக இருந்தது ஏனெனில் இந்த இடத்தை வாங்கிகொடுத்திருப்பது வேண்டுமானால் மாதேஷாக இருக்கலாம். ஆனால் அதில் எழுப்பப்படும் கட்டடத்திற்கு லோனும் அந்த பிஸ்னசை வெற்றிகரமாக நடத்தினால் அநத இடமும் அந்த பிஸ்னசும் அதன் இலாபமும் அவனுக்கு சரிபாதி. இது வசந்துக்கு பெரிய வாய்ப்பு. எனவே நல்லபடியாக எல்லா வேலையும் முடிய அவன் செலக்ட் செய்த ஆதித்துடனான அக்ரீமென்ட் திட்டமிட்டபடி முடிக்கவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.