ஆதித்தின் கார் உள்ளே வரும்போது வர்ஷா தான் வந்த டாக்சி டிரைவருக்கு கேட்டில் அருகில் காரை கொண்டு வரச்சொல்ல போன் பண்ணிக்கொண்டே வந்தாள். அவள் ஆதித்தின் காரை கவனிக்கவில்லை ஆனால் ஆதித் வர்ஷா ஹாஸ்டலின் உள்ளிருந்து வருவதை பார்த்துவிட்டான். இவ எதுக்கு இங்கு வந்தா? ஒருவேளை மாதேஷ் இவளை விட்டு அழகுநிலாவை எதுவும் தொந்தரவு கொடுக்க பிளான் செய்து அனுப்பினானோ! என்று நினைத்தபடி காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கினான்.
ஆதித் பக்கத்தில் வந்தபிறகே, மொபைலை தன பேக்கிற்குள் வைத்துவிட்டு நிமிர்ந்தவள் ஆதித்தை கவனித்தாள்.
உடனே அவள் ஆர்வத்துடன் அதித் என்றபடி அவனின் அருகில் சென்றவள் ஐ ஆம் சாரி டியர் என்றபடி இயல்பாக அவனின் கை பிடித்து கொள்ள முயன்றாள்.ஆனால் ஆதித் அவளின் கை தன மேல் படாதவாறு ஒரு ஸ்டெப் பின்னால் நகர்ந்தான் .
அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்த்தாள். ஆனால் அவன் கண்கள் இப்பொழுது அவளை அந்நியமாக பார்த்தது. அவன் வாயோ எதுக்கு இங்க நீங்க வந்தீங்க? அழகுநிலாவை எதுவும் டிஸ்டப் பண்ணனும் என்று நினைத்தால் ஏற்கனவே உங்க கூட பழகியதற்காக பொறுத்துக்கொள்வேன் என்று நினைக்காதீர்கள். இப்போ உங்க கிட்ட பொறுமையா நான் நின்று பேசுறதே முன்பு உங்களை நான் காதலித்ததாக சொன்ன காரணத்திற்காகத்தான் என்றான் .
வர்ஷாவிர்க்கு அவனின் விலகல் பெரும் பாரத்தை நெஞ்சினில் ஏற்றியது. இருந்தும் தான் அவனை புரிந்துகொண்டதை கூறினால் அழகுநிலாவிடம் நடந்ததை கேட்டு தெளிந்ததை கூறினால் இனி அவனை சந்தேகம் கொள்ளமாட்டேன் என்று உறுதி கொடுத்தால் தனது பழைய காதலனாக அவனை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் உண்டானது.
எனவே,அவள் நான் உங்ககூட கொஞ்சம் பேசணும் என்றாள் அவனால் விலகி நடக்க முடியாதவாறு முன் நின்றபடி.. .
ஆதித் அவளிடம் அதுதான் அன்னைக்கே சொல்லிட்டேனே. இனி நீயா என்னை தேடிவந்தாலும் எனக்கு நீ வேண்டாம்மென்று. உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அன்றோடு முடிந்தது என்றான்.
அவனின் பேச்சு அவளுக்கு கோவத்தை கொடுத்தது. எனவே வர்ஷா, நான் இன்னொருத்தனுக்கு பார்மாலிட்டிக்கு கைகொடுத்ததற்கே அப்போ அப்படி குதிச்சுகிட்டு சண்டைக்கு வந்தீங்க, நான் கூட முதலில் நீங்க அந்தமாதிரி கோபப்பட்டு பேசியதற்கு முதலில் உங்களிடம் சண்டை போட்டாலும் அதன்பின் என்மேல் உள்ள அதகிப்படியான அன்பினால்தானே பொஸசிவ்வாக நடந்துகிடுறீங்கனு சமாதானமாவேன் .
அதே மாதிரித்தானே எனக்கும் இருக்கும், என் கண் முன்னே இன்னொருத்தியை நீங்க கட்டிபிடித்திருப்பதை பார்த்ததும் கோபம் வந்துருச்சு என்றதும் ஆதித், அதற்கு பதில் கூற முயன்றான் , வார்சா ஆதித்தை பேசவிடாமல் ஓகே.. ஓகே... நீங்க அழகுநிலாவிர்க்கு உதவுவதற்காகத்தான் அப்படி நின்றீர்கள் என்பது எனக்கு இப்போ தான் தெரிந்தது. ஐ ஆம் சாரி ஆதித் ,ப்ளீஸ் நான் உங்க கூட பேசணுமே இங்க போரவர்ரவங்க எல்லோரும் நம்மை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றாள்.
ஆதித்துக்கு ஐயோ.... என்று இருந்தது. தன்னிடம் அவள் பேசப்போவதை அவனால் யூகிக்க முடிந்தது, அவனால் வர்ஷா அவனிடம் கோபத்தையும் வெறுப்பையும் காண்பிக்கும் போது அவளை தவிர்ப்பது அவளை தன வாழ்க்கையில் இருந்து விளக்குவது எளிதாக இருந்தது.
ஆனால் இப்பொழுது அவள் மன்னிப்பு கேட்க முனைவதும், தன்னை ஏக்கமாக பார்ப்பதையும் பார்த்தவனுக்கு வர்ஷாவின் முகத்தில் அடித்ததுபோல் பதில் சொல்ல தயக்கம் ஏற்பட்டது. ஆனால் இனி அவளுக்கு தன் வாழ்வில் இடம் இல்லை என்பதை உறுதியாக அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தான் .
எனவே அவளுடன் அருகில் இருக்கும் காபிஷாப்பிற்கு புறப்பட்டான் .ஆதித்தின் முக இறுக்கம் வர்ஷவிற்குள் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணியது. இதற்குமுன் இருவருக்குள்ளும் சண்டைகள் ஏற்பட்டபோது ஆதித் அவளிடம் கோபப்பட்டிருக்கிறான் ஆனால் அதில் அவன் மேல் அவனுக்கு இருக்கும் உரிமையை உணர்ந்த்திருந்தாள்.
ஆனால் இப்பொழுது அந்தமாதிரி தான் அவனிடம் உரிமையாக எந்தவிதத்திலும் உணர்த்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதை அவள் உணர்ந்துகொண்டாள். வர்ஷாவிற்கு இப்பொழுதுதான் அவன் தன்னை விட்டுப்போய்விட்டானோ? என்ற கவலை ஆரம்பமானது .
காபிஷாப்பில் போடப்பட்டிருந்த மேஜையில் எதிர் எதிராக இருவரும் அமர்ந்தனர் உட்கார்ந்த மறுநிமிடமே வர்ஷா ஏன்....? ஏன் ஆதித் ? நான் உங்கமேல சந்தேகப்பட்டது தப்புதான், நீங்க என் சந்தேகத்தை போக்கியிருக்கணும், சரி அதுதான் செய்யல. ஆனா நானே உங்கமேல தப்பு இல்லைன்னு அழகுநிலாவிடம் கேட்டு தெரிந்ததும் உங்களிடம் மன்னிப்பு கேட்டும் நீங்க ஏன் இன்னும் இப்படி யாரோபோல் என்னிடம் நடந்து கொள்கிறீர்கள். நம்ம காதலை அவ்வளவு லேசாக உங்களால் தூக்கிப் போட்டுட முடியுதா? என்று கேட்டாள்.
Story has reached an interesting point.
Adi ithuvarai iruntha gentle herovaga Azhagunilavai court seivara?
Adhith’s feelings towards Azhagi as well Varsha is nicely expressed in words.
But certain part of the story resembles PEMP. Pls do not mistake me. Its my comment.
I expect that Adhith leaves Nila in Janaki's place and through Janaki, Adhith will face Nila, also her anna and amma.
Anyhow very nice update.
Thank you for your reply Deeps.
Also thank you very much in seeking my ideas.
I thought you move the story like,
1. Nila will be in Janaki's custody.
2. After that, both Adhith's parents will move for his marriage with Nila
3. Janaki also accept, because she did't see Varsha along with Adith.
4. The person knows Varsha is Nila.So I expect that always Adhith parents won't leave Nila as such.