(Reading time: 21 - 41 minutes)

அந்த வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு மேல் வேலைகளை பார்பதற்கு என்று மனைவி மற்றும் தன மகனுடன் அந்த வீட்டின் காம்பவுண்டுக்குள்ளேயே பின்னால் இருந்த சிறிய வீட்டில் தான் தங்கியிருந்தான் அந்த மாரியப்பன் .

ஐயா என் சம்சாரத்தையே சமைக்கச் சொல்லட்டுமா? நல்லா சமைப்பா அவ. என்றான் ம்....சரி என்று கூறியவன் மளிகை சாமான் வாங்க பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு எதுவும் தேவைனா அழகுநிலாவை காண்பித்து அவங்கட்ட கேளு என்றான்.

சரிங்க ஐயா ,அம்மா நான் போய் என் சம்சாரத்தை அனுப்பி உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துவரச்சொல்றேன் என்றவன் வெளியேறினான்.

அவ்வளவு நேரமும் அந்த வீட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் ரசித்தபடி இருந்த அழகுநிலா தன்னை காண்பித்து ஏதோ சொல்லவும்தான் என்னிடம் போய் எதுக்கு கேட்கச்சொல்கிறார் என்ற யோசனயுடன் அவனை பார்த்தாள். .

பின் அவனிடமே, நானே உங்க தயவுல கொஞ்ச நாள் பாதுகாப்பாக தங்க வந்திருக்கிறேன். நான் இங்கு இருக்கிறவரை என்னுடைய வேலைகளை நானே செய்துப்பேன் ஆனா இங்க ஆண்டி இல்லாம நானும் நீங்களும் மட்டும் இருப்பது நம்ம இரண்டு பேர் பெயருக்குமே நல்லதல்ல. ப்ளீஸ் என்னை ஆண்டிட்ட கூப்பிடுப்போங்களேன் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும், மத்தவங்க பேசுறத உண்மைய்யாகிட்டா நம்ம கல்யாணமும் பண்ணிகிட்டா! பிறகு யார் பேசுறதை பத்தியும் நாம் கேர் பணிக்க வேண்டம்ல அழகி... என்றவன் ரசனையுடன் அவளை பார்த்தான்.

அவனின் பேச்சிலும் பார்வையிலும் கோபம் வருவதற்கு பதில் அவள் உள்ளம் கலக்கமே அடைந்தது. அச்சோ! இவர் என்னை மயக்கப் பார்கிறார் என்று நினைத்தவள், நீங்க நினைச்சதை சாதிக்கணும் என்று இவ்வாறு எல்லாம் பேசினால் நான் மயங்கிடுவேனோ? என்னை பார்க்கும் போதெல்லாம் சரியான பட்டிக்காடு இவளை பார்த்து யாராவது கண் வைப்பாங்களா? என்று சொன்னவர்தானே நீங்க. இப்போ எனக்கு வாழ்க்கை கொடுப்பதாக நினைத்து வர்ஷா மேல உள்ள கோபத்திற்காக என்னை கல்யாணம் செய்யணும் என்று நினைக்கிறது இரண்டு பேருக்குமே நல்லதில்லை என்று அவள் சொல்லிகூட முடிக்கவில்லை,

அதற்குள் ஏய்....... உன்னிடம் காரிலேயே என்ன சொன்னேன், அவளப்பத்தி பேசுறது கடைசியா இருக்கணும் என்றேனே! நான் ஒன்றும் அவ்வளவு பொறுமை சாலி கிடையாது. உன்கிட்டெல்லாம் பேசி ஒன்னும் கிழிக்க முடியாது. இன்னும் பேசுன... என்றவன் அவளை அருகில் இழுத்து இதுவரை என்னை நல்லவனாத்தான் பார்த்திருக்க நான் நல்லவனா நடந்துகிடுறதும் கெட்டவனா மாறுவதும் உன்கிட்டத்தான் இருக்கு என்று உறுமினான் .

அழகுநிலா இந்த அதிரடித் தாக்குதலை அவனிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. இப்பொழுதுதான் தான் இங்கு வந்தது தவறோ என்ற எண்ணம் ஏற்பட்டது. .

பயத்துடன் தனக்கு வெகுஅருகில் தன முகத்தை அழுகை வருவதுபோன்ற பாவத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அழ்குநிலாவை பார்த்தவன், வேகமாக ஒரு எட்டு தள்ளி நகர்ந்து அவளை பிடித்திருந்த பிடியை விட்டவன், சாரி! பேபி என்றவன் தன செயலுக்கு வருந்தி வேகமாக அந்த இடத்தை விட்டு தன போனை இயக்கி யாருடனோ பேசுவதுபோல் பாவனை செய்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அழகுநிலாவிற்கு அதன் பிறகு அந்த வீட்டை ரசிக்க முடியவில்லை பல குழப்பங்கள் கவலைகள் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்தது .

ஹாலுக்கு வந்தவனிடம் பருக இரண்டு பெரிய கண்ணாடி டம்ளரில் பழச்சாறு கொண்டுவந்து தந்த மாரியப்பன் மனைவி பொன்னி, அம்மாக்கு இது. ரூமில் இருக்காங்களா? என்று அவளிடம் கொடுப்பதற்காக உள்ளே போகப்போனவளை என்னிடம் அதையும் குடுங்க நானே அவட்ட கொடுத்துடுறேன் என்றவன் வாங்கிக்கொண்டு அவன் அறைக்குப் போனான்.

அங்கிருந்த ஷோபாவில் யோசனையுடன் உட்கார்ந்துகொண்டிருந்த அழகுநிலாவின் அருகில் சென்றவன் இந்தா என்று ஒரு டம்ளரை நீட்டினான்.

இன்று காலையில் இருந்து அவள் சந்தித்த பிரச்சனையின் காரணமாக பெரிதும் ஓய்ந்துபோய் இருந்த அழ்குநிலாவிற்கு இப்பொழுது அந்த ஜூஸ் தேவையாகத்தான் இருந்தது. அவளின் இக்கட்டான அந்த சூழலை எதிர்கொள்ள கொஞ்சம் தன்னை திடப்படுத்த அது தேவையாக இருந்தது. எனவே மறுப்புக் கூறாமல் அதை வாங்கி பருக ஆரம்பித்தாள்.

ஆதித்துக்கு வர்ஷாவை பார்த்துவந்த பின்பு அவளையும் அவள் சம்மந்தமான அனைத்தையும் தவிர்க்கணும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அழகுநிலா திரும்பத் திரும்ப அவளை இதேபோல் ஞாபாகப் படுத்தியதால் சட்டென்று கோபத்தில் அதிகப்படியாக நடந்துகொண்டான்.

அழகுநிலா குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த ஆதித், அவளிடம் உன்கிட்ட நான் கோபமா நடந்திருக்க கூடாதுதான். இனி இப்படி நடந்துகொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நான் வர்ஷாவை மறக்கணும் என்று முயன்றுகொண்டிருக்கும் போது, இப்படி நீ திரும்பத்திரும்ப அவளை பற்றியே என்னிடம் பேசுவதை நிறுத்திவிடேன் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.