அவளுக்கு ஆதித்தின் இந்த பேச்சை கேட்ட பிறகு மனதிற்குள் நினைத்தாள், “ஏன்? எதுக்கு? வர்ஷாவை கஷ்ட்டப்பட்டு அப்படி மறக்கணும், இப்போதான் அவள், தன் தவறை உணர்ந்துவிட்டார்களே... மேலும் இந்த பிரிவிற்கு தான் தான் காரணமா..? அல்லது வேறு எதுவும் காரணமா...? என பல கேள்விகள் மனதில் எழுந்தது.” ஆனால் அதை கேட்டு திரும்பவும் ஆதித்தின் கோபம் தூண்டப்பட்டால் இப்போ இருக்கும் தனது மனநிலையில் தன்னால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது புரிந்தது , எனவே மெளனமா சரி என்று தலை அசைத்தாள்.
ம்....குட் என்றவன் அந்த அறையின் மூலையில் இருந்த கதவை காண்பித்து நீ அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ! ஆனால் அது என் ஆபீஸ் வொர்க்கை நான் செய்ற இடம். சோ! அங்க பாத்ரூம் இருக்காது இங்க இருக்கிற பாத்ரூமை யூஸ் பணிக்கோ நான் ரெப்ரஸ் ஆகி வந்துடுறேன் பிறகு நீயும் ரெடியாகிவா சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் என்று கூறியபடி கபோர்டில் டவல் எடுத்த்தபடி பாத்ரூமிற்குள் சென்று மறைந்தான்.

அந்த அறைக்குள் வந்த அழகுநிலா அந்த அறையின் இரண்டு பக்க சுவர்முழுவதும் வார்ட்ரோப் இருந்தது. தான் கொண்டுவந்த திங்க்ஸ் எல்லாம் எதில் இருக்கு இங்கதானே கொண்டுவந்து வச்சாங்க என்று ஒவ்வொன்றாக திறந்து பார்த்தாள். ஒரு சைடு முழுவதுவும் புக்ஸ் மற்றும் பைல் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப் பட்டு இருந்தது மற்ற பக்கம் இருந்தது முழுவதுவும் காலியாக இருந்தது அதில் ஒன்றின் கீழ் தான் கொண்டு வந்த டிராலிபேக் மற்ற திங்க்ஸ் எல்லாம் இருந்தது. அந்த அறையின் ஓரத்தில் ஒரு மேஜையும் அதன் மேல் மடிக்கணினியும் அதன் பக்கத்தில் சிங்கிள் காட் பெட் ஒன்றும் ஏசி வசதியுடன் பளிச்சென்று பார்க்க ரம்யமாக இருந்தது .
ஆனால் அதை எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. வந்தவள் தனது போனுக்கு ஜார்ஜ் போட்டுவிட்டு கட்டிலில் ஏறி படுத்துவிட்டாள். அவளுக்கு அப்பொழுது இனி என்னசெய்ய என்ற கவலையில் ஏற்பட்ட மனச்சோர்வினால் எதுவும் வழி புலப்பாடமல் கண்ணை மூடி படுத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
ஆதித் அவளை சாப்பிட அழைக்க வந்தவன் கதவை இருமுறை லேசாக தட்டி பார்த்தான் ஆனால் பதில் இல்லாததால் திறந்து வந்து பார்த்தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அழ்குநிலாவை எழுப்ப மனது இல்லாமல் அவளின் முகத்தை பார்த்தவனின் விழிகள் அவளின் தேகம் முழுவதும் ஓடியது தன வீட்டில் தான் மட்டுமே பயன்படுத்தும் அந்த அறையின் மெத்தையில் இப்பொழுது அழகுநிலா தூங்குவதை நினைத்து அவனின் தேகம் சிலிர்த்தது பின் தூங்கும் அவளை நின்று ரசிப்பது சரியில்லை. இன்னும் அவள் தன்னை கல்யாணம் செய்ய சம்மதிக்காத நிலையில் இது தவறு என்று அவன் மனம் குரல்கொடுத்தது. எனவே வந்த சுவடு தெரியாமல் மெதுவாக வெளியேறியவன், அவள் எழுந்தபிறகு சாப்பிடலாம் என்று அவனும் படுத்துவிட்டான்.
அழகுநிலாவிற்கு விழிப்பு வந்ததும் வேகமாக எழுந்தவள் அச்சோ... ரொம்பநேரம் தூங்கிட்டோமோ! என்று ரெஸ்ட்ரூம் போவதற்காக கதவை திறந்து வந்தாள். ஆதித் வெளியில் செல்ல கிளம்பி ரெடியாகி தலை சீவிக்கொண்டு இருந்தவன் அவளை பார்த்து எழுந்தாச்சா? ரெஸ்ட்ரூம் போய் பிரெஸ் ஆகிட்டு வா சாபிடலாம். செம ,பசி என்று கூறினான்
தனக்காக அவன் சாபிடாமல் காத்திருப்பது உரைக்க இதோ வந்திடுறேன் என்றவள் வேகமாக பாத்ரூம்போய் தன்னை சுத்தப்படுத்திகொண்டவள் ஆதித்திடம் நீங்க எதுக்கு பசியோட எனக்காக காத்துக்கிட்டா இருக்கீங்க சாப்பிட்டிருக்கலாம்ல என்று சொன்னபடி அவனுடன் டைனிங் ஹாலுக்கு வந்தாள்.
உன்னைவிட்டு தனியா சாப்பிட எனக்கு தோனல. இப்போ சேர்ந்து சாபிடலாம் என்று மேஜையில் அவள் உட்கார சேரை வாகாக நகர்த்தியவன் அவள் அமர்ந்ததும் அவளுக்கு அருகில் உட்கார்ந்தான் அவர்களுக்கு பரிமாற்ற வந்த பொன்னியை பார்த்து நட்பாக சிரித்தாள் அழகுநிலா. ஆதித் பொன்னியிடம் நாங்களே எடுத்துவச்சு சாப்பிடுக்கொள்வோம் என்று கூறினான்.
உடனே அந்த இடத்தைவிட்டு பொன்னி நகர்ந்ததும், அழகுநிலா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. சாப்பிட்டதும் நான் போய்விட்டு நைட் தூங்க வந்துடுறேன். உனக்கு பொழுது போகலான டிவி பார்த்துட்டு இரு. தூக்கம் வந்தால் தூங்கு. நான் சீக்கிரம் வர ட்ரை பண்றேன் என்று சொன்னான் ஆதித்.
அழகுநிலா சாப்பிடதும் அவனிடம் எப்படியாவது பேசி ஜானகி இருக்கும் வீட்டிற்கு கூப்பிட்டுக்கொண்டு போகச்சொல்லலாம் என நினைத்திருந்தாள். அதற்கு முடியாது என்று மறுத்துவிட்டால் அந்த வீட்டில் உள்ள மற்ற அறையிலாவது தான் தங்கிக்கொள்ளலாமா என்று கேட்கவேண்டும் என நினைத்தாள்.
ஏனெனில் அந்த வீட்டு வேலைக்காரர்களேயானாலும், தான் அவனின் ரூமில் ஒரே பெட்டை பகிர்ந்து கொள்வதாக நினைப்பார்களோ! என்று சங்கடமாக இருந்தது. உள்ளே இருக்கும் மற்றொரு அறையில் தான் தங்கியிருப்பது அவனின் ரூமிற்கு வெளியில் இருந்து பார்க்கும் வேலையாட்களுக்கு எப்படி தெரியும். தன்னை பற்றி அவர்கள் கீழ்த்தரமாக அ.ல்லவா நினைப்பார்கள் என்று கவலையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவன் வேலை இருப்பதாக கிளம்பியதும், வந்தபின்பு அவனிடம் இதுபற்றி பேசிய பிறகுதான் அந்த அறைக்குள் போகவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.